Announcement

Collapse
No announcement yet.

Where it is leading to ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Where it is leading to ?

    புதுடெல்லி: நிதிச்சுமையை சரிக்கட்டுவதற்காக சமையல் கேஸ் விலையை மாதந்தோறும் ரூ.10 உயர்த்த என்று மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.


    Click image for larger version

Name:	gas cylinder(3).jpg
Views:	1
Size:	21.3 KB
ID:	35030

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ரூ.51 ஆக இருந்தது. இது ‘கிடுகிடு’வென இறங்கி மேலும் வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது ஒரு டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு சராசரியாக 65ஐ எட்டியுள்ளது.

    இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ் போன்ற எரிபொருள் விலையும் உயர்ந்ததால், மத்திய அரசுக்கான மானிய சுமை ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. இதனை சரிக்கட்டுவதற்காக பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.


    சமையல் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்ததற்கும், விலையை சமீபத்தில் உயர்த்தியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் வேறு வழி இல்லாததால், சமையல் கியாஸ் விலையை ஒரு சிலிண்டருக்கு மாதம் ரூ.10 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.25 உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி விரைவில் முடிவு எடுக்கும் என்று பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    http://news.vikatan.com/article.php?module=news&aid=18639
Working...
X