"ஐயங்கார் " - பெயர்க்காரணம்?
ஐயங்கார் என்று ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு பெயர்வரக் காரணம் என்ன?

முதலில் வைஷ்ணவன் என்பதற்கு பொருள் காணலாம்:
விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக அதாவது பரம்பொருளாகக் கொண்டு வழிபடுபவன் வைஷ்ணவன்.
அந்த வைஷ்ணவன் - விசிஷ்டாத்வைத சித்தாந்தப்படிக்கான ஐந்து அங்கங்களை உடைய
பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது 'சமாஷ்ரணத்தை' பெற்றவனாயின் அவன் ஶ்ரீவைஷ்ணவன் ஆவான்.

அந்த ஐந்து அங்கங்கங்கள் என்னென்ன?
பஞ்ச ஸம்ஸ்காரத்தை தாப: புண்ட்ர: ததா நாம: மந்த்ரோ யாகச் ச பஞ்சம: என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அறியலாம்.

பஞ்ச ஸம்ஸ்காரத்தின் பொழுது நடக்கும் ஐந்து செயல்களாவன:

தாபம் - சூடேற்றப்பட்ட சங்கு மற்றும் சக்கரத்தால் தோள்களில் பெறும் முத்திரை

புண்ட்ரம் - உடம்பில் பன்னிரு திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணம் சாற்றுதல்

நாமம் ஆசார்யன் இடும் தாஸ்ய நாமம் (ராமாநுஜ தாஸன், ஸ்ரீநிவாஸ தாஸன், ஸ்ரீவைஷ்ணவ தாஸன்)

மந்த்ரம் ஆசார்யனிடத்தில் இருந்து பெறும் ரஹஸ்ய மந்த்ரங்கள் (திருமந்திரம், த்வயம், சரம ச்லோகம்)

யாகம் தேவ பூஜை திருவாராதன க்ரமத்தைக் கற்றறிதல்.

இப்படியாக இந்த ஐந்து அங்கங்களை உடையவர் வைஷ்ணவர் என்பது பரவலாக அறியப்பட்டது.

ஶ்ரீவைஷ்ணவரை - "ஐந்து அங்கர்" என்று அழைத்து வந்தனர்
அது நாளடைவில் மருவி - "ஐஅங்கர்" என்று ஆகியிருக்கவேண்டும்.
இடையில் வரும் உயிரெழுத்தை நீக்க 'அ' காரத்துக்குப் பதிலாக 'ய'காரம் பயன்படுத்தப்பட்டு
"ஐயங்கர்" என்று அழைக்கலாயிற்று.
அது மேலும் மருவி - "ஐயங்கார்" என்று உருப்பெற்றுள்ளது.

நாளடைவில் 'ஐ'க்கும் 'ஜ' வுக்கும் வித்யாஸம் தெரியாமல் "ஜயங்கார்" என்று ஆனாலும் வியப்பதற்கில்லை?!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends