Announcement

Collapse
No announcement yet.

"ஐயங்கார் " - பெயர்க்காரணம்?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "ஐயங்கார் " - பெயர்க்காரணம்?

    "ஐயங்கார் " - பெயர்க்காரணம்?
    ஐயங்கார் என்று ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு பெயர்வரக் காரணம் என்ன?

    முதலில் வைஷ்ணவன் என்பதற்கு பொருள் காணலாம்:
    விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக அதாவது பரம்பொருளாகக் கொண்டு வழிபடுபவன் வைஷ்ணவன்.
    அந்த வைஷ்ணவன் - விசிஷ்டாத்வைத சித்தாந்தப்படிக்கான ஐந்து அங்கங்களை உடைய
    பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது 'சமாஷ்ரணத்தை' பெற்றவனாயின் அவன் ஶ்ரீவைஷ்ணவன் ஆவான்.

    அந்த ஐந்து அங்கங்கங்கள் என்னென்ன?
    பஞ்ச ஸம்ஸ்காரத்தை “தாப: புண்ட்ர: ததா நாம: மந்த்ரோ யாகச் ச பஞ்சம:” என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அறியலாம்.

    பஞ்ச ஸம்ஸ்காரத்தின் பொழுது நடக்கும் ஐந்து செயல்களாவன:

    தாபம் - சூடேற்றப்பட்ட சங்கு மற்றும் சக்கரத்தால் தோள்களில் பெறும் முத்திரை

    புண்ட்ரம் - உடம்பில் பன்னிரு திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணம் சாற்றுதல்

    நாமம் – ஆசார்யன் இடும் தாஸ்ய நாமம் (ராமாநுஜ தாஸன், ஸ்ரீநிவாஸ தாஸன், ஸ்ரீவைஷ்ணவ தாஸன்)

    மந்த்ரம் – ஆசார்யனிடத்தில் இருந்து பெறும் ரஹஸ்ய மந்த்ரங்கள் (திருமந்திரம், த்வயம், சரம ச்லோகம்)

    யாகம் – தேவ பூஜை – திருவாராதன க்ரமத்தைக் கற்றறிதல்.

    இப்படியாக இந்த ஐந்து அங்கங்களை உடையவர் வைஷ்ணவர் என்பது பரவலாக அறியப்பட்டது.

    ஶ்ரீவைஷ்ணவரை - "ஐந்து அங்கர்" என்று அழைத்து வந்தனர்
    அது நாளடைவில் மருவி - "ஐஅங்கர்" என்று ஆகியிருக்கவேண்டும்.
    இடையில் வரும் உயிரெழுத்தை நீக்க 'அ' காரத்துக்குப் பதிலாக 'ய'காரம் பயன்படுத்தப்பட்டு
    "ஐயங்கர்" என்று அழைக்கலாயிற்று.
    அது மேலும் மருவி - "ஐயங்கார்" என்று உருப்பெற்றுள்ளது.

    நாளடைவில் 'ஐ'க்கும் 'ஜ' வுக்கும் வித்யாஸம் தெரியாமல் "ஜயங்கார்" என்று ஆனாலும் வியப்பதற்கில்லை?!


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: "ஐயங்கார் " - பெயர்க்காரணம்?

    பஞ்ச ஸம்ஸ்காரத்தை “தாப: புண்ட்ர: ததா நாம: மந்த்ரோ யாகச் ச பஞ்சம:” என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அறியலாம்.

    அருமையான தெளிவான விளக்கம்
    "ஐஅங்கர்"

    Comment


    • #3
      Re: "ஐயங்கார் " - பெயர்க்காரணம்?

      ஸ்வாமின் இதுபோல ஐயர் என்ற பெயர்க்காரண விளக்கமும் உண்டோ

      Comment


      • #4
        Re: "ஐயங்கார் " - பெயர்க்காரணம்?

        ஶ்ரீ:
        ஸ்வாமின்,

        மரியாதைக்குரியவர்களை "ஐயன்" என்று அழைக்கும் மரபு தமிழகத்தில் இருந்து வந்தது.
        பின்னர் 'ன்' விகுதி மரியாதைக் குறைவாகக் கருதப்பட்டு, 'ஐயன்' என்பது 'ஐயா' என்றானது.

        அதனால் பொதுவாக அந்தணர்களை (ஐயர், அய்யங்கார் இருவரையும்) ஐயா என்று அழைத்து வந்தனர்.
        அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்குப் பின், அனைத்துத் தரப்பினருக்கும் பின்பகுதியாக
        செட்டியார்வாள், பிள்ளைவாள் என்று "வால்" ஒட்டிக்கொண்டது.

        அந்தணர்கள் ஐயாவாள் என்றழைக்கப்பட்டு, பின்னர் எல்லோருக்கும் வால் நறுக்கப்பட்டபோது,
        செட்டியார், பிள்ளைமார், கவுண்டர், தேவர், க்ஷத்ரியர், வன்னியர் என 'ர்' விகுதி சேர்க்கப்பட்டது
        அப்போது ஐயாவாள் - ஐயர் ஆக உருமாற்றம் பெற்றனர் - என்பது ஒரு ஆராய்ச்சி.
        இதற்கு ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாது.


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: "ஐயங்கார் " - பெயர்க்காரணம்?

          விளக்கம் ஒத்துக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது எனவே ஆதாரம் தேவையில்லை ஸ்வாமின்

          Comment

          Working...
          X