ச்ராத்த - பித்ரு சேஷம் யார் யார் சாப்பிடலாம்?

ஶ்ரீ:
பித்ரு சேஷம் - ச்ராத்தத்தில் பித்ருவாக வரிக்கப்பட்ட ப்ராமணர்கள் சாப்பிட்டு எஞ்சிய வஸ்துக்கள் ஆகும்.
ச்ராத்தத்தில் பித்ருவாக வரிக்கப்பட்டு சாப்பிடுவது தோஷம் என்பதால்தான்
சாப்பிடுகிறவருக்கு காம்பென்சேஷனாக தக்ஷிணைகள் வழங்கப்படுகிறது.
மற்றவர் இல்ல ச்ராத்தத்தில் பங்காளி அல்லாத ஒருவர் சாப்பிட்டால் கிட்டத்தட்ட
அதற்குச் சமமான தோஷம் உண்டாகும். பித்ரு சேஷம் சாப்பிட்டதற்கு பரிஹாரமாக
குறிப்பிட்டு எந்த பரிந்துரையும் காணப்படவில்லை.
எனவே பித்ருசேஷம் சாப்பிடாமல் இருப்பதே நல்லது.
அதுபோல்,
ச்ராத்தம் - விருந்தினருடன் செய்யவேண்டிய கொண்டாட்டம் அல்ல
அது ஒரு ப்ரத்யேக பூஜை, அதிகப்படியான நபர்கள் சேரச் சேர அந்த பூஜையை
ச்ரத்தையாகவும், சிறப்பாகவும் செய்ய இயலாது.
எனவேதான் ஆப்தீகத்திற்கு அழைப்பு அனுப்பும்போது
"அவசியம் எழுந்தருளியிருந்து ..." என்கிற வாசகத்தைப் பயன்படுத்தாமல்
"திருவுள்ளம் அறியவும்" என்கிற வாசகம் பயன்படுத்தப்படுகிறது.
ச்ராத்தம் முடியும்போது - "இஷ்டை: ஸஹ புஜ்யதாம்" என்கிற வாசகத்தை
"விரும்பியவர்களுடன் சாப்பிடவும்" எனத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்,
இதற்கான சரியான அர்த்தம் "யார் தாமாக முன்வந்து சாப்பிட விரும்புகிறார்களோ அவர்களுடன்" என்று அர்த்தமே தவிர
கர்த்தா "தான் யாருடன் சாப்பிட விரும்புகிறாரோ" என்பது பொருள் அல்ல.
ச்ராத்தத்துக்கு மறுநாள் பூரிபோஜன் என்று ததியாராதனமாக செய்யச்சொல்லியுள்ளது,
இதில் அனைவரையும் அழைத்து விருந்து வைக்கலாம், நன்மையும், புண்ணியமும் கூட.
என்.வி.எஸ்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends