நம்பெருமாளின் வடிவழகில் ஈடுபட்ட பட்டர் அவரிடம் விடுத்த வேண்டுகோள் !
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ரங்கநாதன் மேல் மிகவும் ஈடுபாடு கொண்ட மகான். ஸ்ரீரங்கநாதரின் கர்ப்ப க்ருஹத்திற்கு அருகிலேயே தொட்டிலில் வளர்ந்தவர். ஸ்ரீரங்கநாதரின் புத்திரர் என்றே அழைக்க பட்டவர் ! அவர் சில காலம் ஒரு சோழ மன்னனால் உபத்திரவத்திற்கு ஆளாகி திருக்கோஷ்டியூரில் வசிக்க நேர்ந்தது. ஸ்ரீரங்க நாதனே தமக்கு உயிர் என்று இருந்த பட்டருக்கு, இது எவ்வளவு துன்பத்தை அளித்திருக்கும் என்பதை நாம் நன்கு உணரமுடிகிறது. இந்த அரசன் சில வருடங்களில் இறந்துவிட பட்டர் மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கு வருகிறார். அப்படி வரும்போது இவ்வளவு நாட்கள் ஸ்ரீரங்கத்தை பிரிந்த வருத்தம் தீர "ஸ்ரீரங்க ராஜஸ்தவம் " என்ற ஒப்பில்லாத ஒரு நூலை இயற்றுகிறார். அதில் " அப்ப்ஜன்யஸ்த " என்று தொடங்கும் ஸ்லோகத்தில் நம்பெருமாளை வர்ணிப்பதை பார்ப்போமா ?
ஸ்லோகத்தின் பொருள் : " பத்மாசனத்தில் அழுத்தின திருவடி தாமரைகளை உடையவரும், திருவரைக்கு பாங்கான பட்டு திருபரிவட்டத்தை உடையவரும், லேசாக நர்த்தனம் செய்வது போன்ற திருமேனியை உடையவரும், இயற்கையான புன்முறுவலை உடையவரும், தமது கிரீடத்தின் கீழே தாமரை போன்ற திருமுகத்தை உடையவரும், தம் திருக்கைகளில் இளைப்பாறுகிற திவ்யாயுதங்களை உடையவரும் ஆகிய நம்பெருமாளை, நான் இந்த திருவரங்கத்தில் இன்னம் ஒரு நூற்றாண்டளவும் இங்கும் அங்கும் சேவிக்க கடவேன் !


இதில் ஏன் இளைப்பாறும் திவ்யாயுதங்கள் என்கிறார் ? நம்பெருமாள் வடிவழகை சேவிக்கும் போதே, அவரது அழகில் மயங்கி எல்லோரும் அவர் திருவடிகளிலே விழுந்து வணங்குவதால், திவ்யாயுதங்கள் வேலையில்லாமல் இளைப்பாறி கொண்டிருக்கின்றனவாம் !
மேலும் இந்த ஸ்லோகத்தில் "இன்னம் ஒரு நூற்றாண்டு நம்பெருமாளை "இங்கும் அங்கும்" சேவித்து கொண்டிருக்க அருள் பாலிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் தெரிவிக்கிறார்.
"இங்கும் அங்கும்" சேவிப்பதாவது - நம்பெருமாள் "ஜீயபுரம்" சென்றால் தாமும் சேவித்துகொண்டே செல்வது, அவர் "எல்லைக்கரை மண்டபம்" எழுந்தருளினால், தாமும் அங்கு செல்வது, தெப்பத்திற்கு நம்பெருமாள் சென்றால் தாமும் அங்கே சென்று சேவிப்பது, "புலி மண்டபம் மற்றும் சங்கராந்தி மண்டபங்களுக்கு " சென்றால் தாமும் அங்கு சென்று சேவிப்பது, என்று இப்படியாக "அங்கும் இங்கும் " நம்பெருமாளை சேவித்துகொண்டு இன்னம் ஒரு நூற்றாண்டளவும் ஸ்ரீரங்க வாசம் அனுக்ரஹிக்க வேண்டும் என்று நம்பெருமாளை பிரார்த்திக்கிறார் ஸ்ரீ பராசர பட்டர் !
ஸ்ரீரங்க நாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதன் திருவடிகளே சரணம் !
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் !!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


Shreeram Raghavan