Announcement

Collapse
No announcement yet.

A G Sutra - QA-0007-Brahmins Special Quality!

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • A G Sutra - QA-0007-Brahmins Special Quality!

    Apastamba Grihya Sutra - QA-0006

    ப்ராஹ்மணனின் சிறப்பு என்ன?

    பிறப்பினால் ப்ராம்மணன், ஸம்ஸ்காரங்களினால் த்விஜன் எனப்படுகிறான்.
    விப்ர என்பது வித்யையால் உண்டாகிறது.
    இம்மூன்றும் சேர்ந்தால் ச்ரோத்ரியன் எனப்படுகிறான்.
    ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள் இரு ஜன்மத்தினர் என்று கூறப்படுவர். பிறப்பினால் ஒரு ஜன்மமும், 40 ஸம்ஸ்காரங்களால் மற்றொரு பிறவியும் எடுத்தலால் இவர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.
    இவனே வேத சாஸ்த்ர அப்யாஸத்தால் விப்ரன் ஆகிறான்.
    இம்மூன்றும் ஒன்று சேர்ந்தால் அவன் ச்ரோத்ரியன் ஆகிறான். இந்த ச்ரோத்ரியனே மனிதர்களில் சிறந்தவன். அதிலும் அவன் ஆசையற்றவனனால் மிகமிகச் சிறந்தவன். தைத்ரீய உபநிஷத் கூறும் ஆனந்த ஸோபாநத்தில் இவனே முதற்படி.
    வைச்வதேவத்தில் "அகாமோபஹதாய ச்ரோத்ரியாய ஸ்வாஹா" என இப்படிப்பட்டவர்களுக்காக ஒரு ஹோமம் செய்யப்படுகிறது.



    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
    மானிடராய் பிறந்த காலையும்
    கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல்
    கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்தகாலையும்
    ப்ராஹ்மணனாய் பிறத்தல் அதனினும் அரிது
    ப்ராஹ்மணனாய் பிறந்த காலையும்
    காலத்தே முறையான ஸம்ஸ்காரங்களைப் பெறுதல் அரிது
    முறையாக ஸம்ஸ்காரங்கள் பெற்ற காலையும்
    சாஸ்த்ர ஸம்ப்ரதாய நெறிப்படி வாழ்த்தல் அரிது
    சாஸ்த்ர ஸம்ப்ரதாய நெறியுடன் கடின ப்ரஹ்மசர்யம் கடைபிடித்தல் அரிது
    கடின ப்ரஹ்மச்சாரிக்கும் வேதம் உச்சரித்தல் அதனினும் அரிது
    வேதம் உச்சரிக்கும் பாக்யம் பெற்ற போழ்தினும்
    வேதம் அத்யயனம் செய்தல் அரிதினும் அரிது
    வேதாத்யயனத்திலும் க்ரமம், பதம், ஜடா, கனம் கற்றல் அரிதோ அரிது
    கனபாடியாய் கல்வி கேள்வி பெற்ற காலையும்
    மௌஞ்சி, மேகலா, அஜின, தண்ட தாரண லோபமன்றியும்
    ப்ராதஸ்நான, ஸந்த்யாவந்தன, ஸமிதாதான, குருகுலவாஸ,
    ப்ரஹ்ம யஜ்ஞ, பிக்ஷாசரணாதி லோபமின்றி வாழ்தலரிது.
    மேற்படி அனைத்தையும் பெற்ற போழ்தினும்
    காம, க்ரோத, லோப, மதமாச்சர்யாதி தோஷமின்றி நிற்றல் அரிது.
    இப்படியனைத்தொரு தகுதியும் பெற்றதோர் மஹானை தரிசித்தல் மானிடர்கரிது.
    அப்படியோர் தரிசனம் பெற்றோனை தண்டமிட்டாலே
    கோடி ஜன்ம பாபம்போகும் அரிதினும் அரிதான மோக்ஷம் கிட்டும்!!


    த்விஜன்:- இரு பிறப்பாளன்
    விப்ரன் : ப்ராஹ்மணனுக்கு மற்றொரு பெயர்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: A G Sutra - QA-0007-Brahmins Special Quality!

    அரிது அரிது இதுபோன்ற அரிய விஷயங்கள் அறியவும் படிக்கவும் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அரிது அரிது

    Comment

    Working...
    X