சாஸ்த்ரம் - ஸம்ப்ரதாயம் இரண்டும் ஒன்றா?

10. சாஸ்த்ரம் - ஸம்ப்ரதாயம் இரண்டும் ஒன்றா?

சாஸ்த்ரம் வேறு, ஸம்ப்ரதாயம் வேறு.
சாஸ்த்ரம் என்றால் என்ன, எவை எவை சாஸ்த்ரங்கள் என்கிற
விளக்கங்கள் 8 மற்றும் 9ம் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.
ஸம்ப்ரதாயம் - ஸம்யக் - ப்ர - தாயம் -- ஸம்ப்ரதாயம்
ஸம்யக் - நன்றாக, தாயம் - சொத்து
நன்றாக பண்படுத்தி வழங்கப்பட்ட சொத்து- ஸம்ப்ரதாயம்.

சாஸ்த்ரம் என்பது செய்யாதே, செய் என வேதத்தால்
விதிக்கப்பட்ட கட்டளைகள். இவை, ப்ராஹ்மண, க்ஷத்ரிய
முதலி வர்ணத்திற்கும், ப்ரஹ்மச்சர்ய, க்ருஹஸ்த முதலிய
ஆச்ரமத்துக்கும் தக்க நெறிகள் உரைக்கப்பட்டிருக்கும்.
இந்த சாஸ்த்ரங்கள் யாவும், சரீரத்தை தார்மீக ஒழுக்கநெறியில்
பேணுவதற்காக வரையறுக்கப்பட்டவை.
த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்தங்களே ஆத்ம
ரக்ஷணத்திற்காக ஏற்பட்டவை. சாஸ்த்ரத்தைக் கடைப்பிடிக்கும்போது
ஆத்ம ரக்ஷணத்துக்கான பாதையில் இருந்து விலகாமல்
பேணுவதற்காக அந்தந்த ஆசார்யர்களால் மிக மிக நன்றாக
வகுத்துக்கொடுக்கப்பட்டவையும், பரம்பரை பரம்பரையாய்
கடைப்பிடிக்கப்பட்டுவந்த மரபுகளும், தாய், தந்தை, உடன்பிறந்தோர்,
சுற்றத்தார் என சமூகத்தில் அனைவரிடமும் கடைப்பிடிக்கவேண்டிய
பண்புநெறிகளாக முன்னோர்களால் வகுத்துக்கொடுக்கப்பட்டவையும்
ஆகியவற்றின் தொகுப்பே ஸம்ப்ரதாயம் ஆகும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசெய்யாதே எனக்கூறப்பட்டவற்றிற்கு ஸம்ப்ரதாய பேதமில்லை.

செய்தாகவேண்டும் என்று குறிப்பிட்டவற்றைச் செய்யும்போது
மேற்படி ஆசார்ய அநுஷ்டானங்கள், மரபுகள், பண்புகள்
இவற்றுக்கு கேடுநேராலும், ஐம்புலன்களுக்கும் விருந்தளிக்கும் விதமாக
கலைநயத்துடன் சுவைபடச் செய்வதே ஸம்ப்ரதாயம் ஆகும்.
Below is the detailed Article on "Shastra and Sampradaya" submitted with PhD thesis of NVS