நெட்டில் படித்தது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
information

Information

காஞ்சீபுரம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் உள்ளன. வயல்வெளி, தோட்டம் துரவு, மாதா கோயில், தர்கா, மயானம் போன்ற இடங்களில், மேற்கூரை கூட இல்லாமல் இருக்கின்றன. வெய்யிலும் , மழையிலும் காய்ந்தும் நனைந்தும் இன்னல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சிவலிங்கங்க்ளுக்கு வழிபாடுகளும் இல்லை!!!


notice

Notice

பெரியவாளுடைய உத்தரவை ஏற்று, சில அன்பர்கள், சிவலிங்களுக்கு மேலே மண்டபம் (கோயில் கோபுர அமைப்பில் இல்லாவிட்டலும், மழை வெயில் தாக்காதபடி மேற்கூரை அமைப்பில்) கட்டி, நித்தியப் படி ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்!!!மேற்கூரை கூட இல்லாத சுமார் பத்துப் பன்னிரண்டு சிவலிங்கங்களுக்கு ஸ்ரீ மடத்தின் சிஷ்யர்கள் இருவர் நாள்தோறும் ஸ்ரீ மடம் வண்டியில் சென்று அபிஷேகம், நைய்வேத்யம் செய்து வந்தார்கள். எல்லா பூஜைகளையும் முடித்துக் கொண்டு ஸ்ரீ மடத்துக்குத் திரும்பியது பெரியவாளுக்குப் ப்ரசாதம் கொடுப்பார்கள்!!!


இந்த சிஷ்யர்கள் பூஜை செய்யும் லிங்கங்களில் இரண்டு மூர்த்திகள் மயான எல்லக்குள் இருக்கின்றன!!!


"மயானப் பகுதிக்குள் சென்றுவிட்டு, நீராடி சுத்தம் செய்து கொள்ளாமல் ஸ்ரீ-மடத்துக்குள் எப்படி நுழைவது? அது தவறு இல்லையோ?" என்று ராமமூர்த்தி என்ற சிஷ்யருக்கு பலத்த சந்தேகம் வந்துவிட்டது!!!


சந்திரா என்ற மற்றொரு மெய்த்தொண்டர் சொன்னார்: "நாம் மயானத்துக்கு அங்கே நடக்கும் சடங்கில் பங்கு கொள்ளப் போகவில்லை. சிவ பூஜை செய்வதற்காகப் போகிறோம். சிவபூஜை செய்துவிட்டு, உடனே ஸ்நானம் செய்வது உசிதமில்லை. நமக்கு மடிக்குறைவும் கிடையாது"


இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப் போய் கடைசியில், ஸ்ரீ மடத்தின் "உச்ச நீதி மன்ற"த்துக்குப் போயிற்று வழக்கு!


இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டார்கள் பெரியவா. முடிவாக தீர்ப்பை கூறினார்கள் பெரியவா.
"ராமமூர்த்திக்கு நாம் மயான எல்லைக்குள் போகிறோம். அதனால் தீட்டு வந்துவிட்டது என்று எண்ணம். அந்த எண்ணம் தோன்றியவுடனேயே தீட்டும் உண்டாகீ விடுதிறட்து!!! அதனாலே அவன் ஸ்நானம் பண்ணிட்டு வரட்டும்!!!
"சந்திராவுக்கு ஸ்ம்சானம் என்ற எண்ணமே இல்லை. கோபுரம், கர்ப்ப க்ருஹம் என்றில்ல விட்டாலும் கோயிலுக்குப் போய் மந்திரம் சொல்லி சிவபூஜை செய்துவிட்டு வருகிறோம். அதாவது, பவித்ரமான இடத்துக்குப் போய் சிவபூஜை செய்துவிட்டு வருகிறோம். அதனாலே தீட்டும் ஒட்டிக்காது; தோஷமும் வராது என்ற எண்ணம். ஆகவே, அவனுக்குத் தீட்டும் இல்லை. ஸ்நானமும் வேண்டாம்!!!மண்டை உடைய சண்டை போட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் சந்தோஷ அதிர்ச்சி உண்டாயிற்று. எவ்வளவு தெளிவா பெரியவா சொல்லிருக்கா!!! ஒருவரின் தர்மம், இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறதை, பக்குவமா சொல்லிட்டாளே என்று வியந்தார்கள்!!!
பக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும் பக்குவமாகத் தானே இருக்கமுடியும்!!