Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீ மதே நாராயணாய நமஹ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீ மதே நாராயணாய நமஹ

    தான் பெற்ற பிள்ளைகளிடம் ஒரு தாய் எவ்வாறு அன்பும் ஆதரவும் காட்டுகிறாளோ அதைப் போலவே உலக உயிர்கள் அனைத்தின் மேலும் பிராட்டி அன்பு செலுத்துகிறாள். அதனால்தான் அவளை தாயார் என்று அழைக்கிறோம். ஆகவே பிராட்டியார் நமது தாயார் ஸ்தானத்தில் இருந்துக் கொண்டு பெருமாள் மீது அன்பும், பக்தியும் பிறக்கவும் அதன் மூலமாக சேவை செய்யும் தேவையான நல்லறிவை ஊட்டுகிறாள். மேலும் இந்த நல்லறிவு பெற்ற ஜீவன் நற்கதி அடையும் பொருட்டு வாய்ப்பு கிடைக்கும் போதல்லாம் பெருமாளிடம் சிபாரிசு செய்கிறாள்.
    கோதா ஸ்துதியில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் சொல்கிறார் "பக்தர்களாகிய நாம் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம், நம்மை தண்டிக்காமல் காக்கும் பொருட்டு பெரிய பிராட்டியும் ஆண்டாளும் நமக்காக பரிந்து பேசுகிறார்களாம்.
    கோதை பிராட்டியே, இந்த உலகில் பிறந்த பக்தர்கள் பாவங்கள் செய்வது இயற்கைதான். அவர்கள் புதிது புதிதாகக் குற்றங்களை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். குற்றம் செய்த கை உலருவதற்குள் அவர்களை காப்பற்றுவதர்க்காக உன் நாயகனான திருவரங்கனிடம் பெரிய பிராட்டி பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறாள். குற்றம் செய்தவர்களுக்கு அனுக்கிரக்கிம்படியாக எப்போதும் பெரிய பிராட்டி கூறுவதை கேட்டுக் கேட்டு சலிப்படைந்த எம்பெருமான், தனது முகத்தை அவள் பக்கமிருந்து மற்றொரு பக்கம் திருப்பிக் கொள்கிறான்.
    அந்த மற்றொரு பக்கத்தில் அவளினும் கருணை மிகுந்த நீ அமர்ந்து, "அவர்கள் மீது நீரே கருணை கொள்ளாவிட்டால் அவர்களது கதி என்ன?" என்று கேட்டு பக்தர்களுக்காகப் பரிந்து பேச ஆரம்பிக்கிறாய்.தனது முகத்தை மற்றொரு பக்கமும் திருப்பியும் பயனில்லாமல் போய்விடுவதால், பெரிய பிராட்டியின் சொற்படியே பெருமான் பாவிகளைக் காத்துவிடுகிறான்.

    இப்படி பெரிய பிராட்டி ஒரு பக்கமும், கோதைப் பிராட்டி மற்றொரு பக்கமும் பகவானின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு பக்தர்களுக்காக பரிந்து பேசுகிறார்களாம் . தாயாருக்குத்தான் எத்தனை கருணை நம் மீது ! ஆகவே அன்பர்களே நாம் சொல்லவேண்டிய திவ்ய துவய மந்திரமான
    "ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே நாராயணாய நமஹ " சொல்வோம்

    ரமணி ராமஸ்வாமி
Working...
X