ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே

ஸர்வ வியாபிநம் லோகரக்ஷகாம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லட்சுமி கடாட்ச சர்வா பீஷ்டம்
அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா... !!!
லட்சுமி நரசிம்ம பிரபோ! பயங்கரமான உருவமும் சிங்க முகமும் உடையவரே! கருணை நிரம்பியவரே! அபயம் காக்கும் கரத்தினை உடையவரே! உலகைக் காக்கும் பொருட்டு எங்கும் நிறைந்த பெருமானே! எங்களது பாவங்களை உடனடியாகக் களைந்து நலம் தருபவரே! எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லமால் அளித்தருளும்.
இந்த ஸ்லோகத்தை வியாழக்கிழமை அன்று கோயிலில் நரசிம்மர் முன்பு இரண்டு நெய் விளக்கேற்றி, சொல்லி வர, நினைத்தது நிறைவேறும்.

Anantha RamanDear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends