Announcement

Collapse
No announcement yet.

இந்து மதத்தின் புனித அடையாளங்களை அவமதிக&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இந்து மதத்தின் புனித அடையாளங்களை அவமதிக&

    இந்து மதத்தின் புனித அடையாளங்களை அவமதிக்கக்கூடாது.

    'திருநாமம்' உள்பட இந்து மதத்தின் புனித அடையாளங்களை அவமதிக்கும் வகையில் போராட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது. அதை ஏமாற்றத்தின் அடையாளமாக சினிமாவில் பயன்படுத்த தடைகோரி தாக்கலான வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச்சுக்கு மாற்றி தனி நீதிபதி உத்தரவிட்டார்.அம்பாசமுத்திரம் பெரியநம்பி ரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த மனு: மகா விஷ்ணுவின் திருச்சின்னம் திருமண் காப்பு. வைணவத்தை பின்பற்றுவோர் நெற்றில் திருமண் காப்பு என்ற 'திருநாமம்' இடுவதை பெருமையாக கருதுகின்றனர். திருமண் காப்பு அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்து மத பக்தர்கள் தர்மம் என்ற பெயரில் சில கடமைகளைச் செய்ய வேண்டும் என வேதங்கள் வலியுறுத்துகின்றன. ஒவ்வொரு இந்துவும் தனது நெற்றியில் புனித அடையாளங்களை இட்டுக் கொள்ள வேண்டும். அவற்றில் திருநீறு பூசுவதும் ஒன்று. வேதங்கள் மட்டுமின்றி புராணங்கள், ஸ்மிருதிகள், ஆகமங்கள், ரிஷிகள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் திருமண் இடுவதின் முக்கியத்துவத்தை தெரிவித்துள்ளனர். இப்பெருமைகளை உடைய திருநாமத்தை ஏமாற்றத்தின் அடையாளமாக சினிமா, ஊடகம், வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்கள், அவை தொடர்பான விளம்பரங்களில் பயன்படுத்துகின்றனர். ஒரு மதத்தின் புனித அடையாளத்தை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி தவறு. வரும் காலத்தில் சினிமா, ஊடகம், போராட்டங்களில் பங்கேற்போர் மத அடையாளங்களை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஆறு ஆண்டுகளாக பலமுறை உள்துறை செயலாளர், டி.ஜி.பி., மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவிடம் மனு அளித்தோம். இம்மாதிரியான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கும் முன், திருநாமம் உள்பட இந்து மதத்தின் புனித அடையாளங்களை அவமதிக்கும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்க போலீஸ் கமிஷனர், எஸ்.பி.,களுக்கு சுற்றறிக்கை அனுப்ப டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்தார். மனுதாரர் வக்கீல் கோகுல் ஆஜரானார். நீதிபதி," இம்மனு இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு மாற்றப்படுகிறது,” என்றார்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: இந்து மதத்தின் புனித அடையாளங்களை அவமதி&#29

    Yes Sir.I definitely agree.It is time we start such actions to ensure our sacred symbols are not made fun of nor commercialised.
    Could you please indicate when this hearing took place? Is it going on now.
    Another one madefun of, is our traditional Madisar sarees.
    varadarajan

    Comment

    Working...
    X