ஸ்ரீமதாண்டவன் (திருக்குடந்தை ஆண்டவன்) ஒரு நாள் காலையில், ஆச்ரமத்தின் வாசலில் உட்கார்ந்திருக்கும்போது, முதிர்ந்த வயதுள்ள ஒரு மாது, இருபது பைசா கொடுங்கள், மிகுந்த பசியாயிருக்கிறது என்று கேட்டாள். உடனே பக்கத்திலிருந்த ஒருவரிடம் கொடுக்கும்படி ஸ்ரீமதாண்டவன் நியமனம் செய்தார். அவரும் அவ்வாறே அவளிடம் கொடுத்தார். அவள் அதைப் பெற்றவளவில், தன் ஆடைத் தலைப்பிலிருந்த சில்லறைகளுடன் அதைச் சேர்த்து இரண்டு ரூபாய் பணத்தை ஸ்ரீமதாண்டவன் முன்னர் வைத்தாள். இராஜகோபுரத்துக்கு ஏதேனும் ஸமர்ப்பிக்க வேணும் என்று நினைத்தேன். யாசித்து வந்தேன். இன்று 2 ரூபாய்க்கு 20 பைசா குறைந்தது. அதனை இங்கு யாசித்துப் பெற்ற இத்தொகையைக் கொடுக்கிறேன் என்று கூறி, மல்கிய கண்ணீருடன் நின்றாள். உடனே ஸ்ரீமத் ஆண்டவன், அண்வப்யுபஹ்ருதம் பக்தை ப்ரேம்ணா பூர்யேவ மே பவேத் என்ற ரீதியில் இந்த 2 ரூபாய்தான் பெருமாளுக்கு மிக உயர்ந்த்தாயிருக்கும் என்று நினைத்து கண்ணீர் பெருக்கியாயிற்று. பழையது ப்ரஸாதம் வைத்துக் கொண்டு காத்திருக்கும் ஒரு பாட்டியம்மைக்காக, பங்குனி மாத வெய்யிலில் 10 மைல் போகும் பெரிய பெருமாளுக்கு, இந்தக் கிழவியின் பக்தி உகப்பாயிருக்கும் என ஸாதித்தருளினார் ஸ்ரீமதாண்டவன்.

இதைப்போலவே ஒரு சம்பவ அனுபவம் அடியேனுக்கும் உண்டு. சில வருடங்களுக்கு முன் ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் திருநக்ஷத்திரோத்ஸவம் சென்னையில் நடந்தபோது அடியேனும் 5 நாட்கள் அங்கிருந்து அலுவலகப் பணிகளுக்கு ஒத்தாசை பண்ணிக் கொண்டிருந்தேன். திருநக்ஷத்திர தினத்தன்று காலையில் வந்த சிஷ்யர்கள் அளித்த சம்பாவனைகளைப் பெற்று ரசீது கொடுத்துக் கொண்டிருந்தேன். என் அருகிலேயே இரண்டு பெண்கள் நீண்ட நேரமாக நின்று கொண்டே இருந்தார்கள். அவர்கள் எதற்கோ தயங்கிக் கொண்டே இருப்பது புரிந்தது. ஆனாலும் கூட்டம் காரணமாக உடனே கவனிக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அவர்களிடம் ஏன் இப்படி நின்று கொண்டிருக்கிறீர்கள்? உள்ளே சென்று ஸேவிக்க வேண்டியதுதானே? என்று கேட்டதும் அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக, "நாங்களும் ஏதாவது சம்பாவனை தர ஆசைப் படுகிறோம். ஆனால் இங்கு வந்து மற்றவர்களைப் பார்த்தால், எங்களுக்கு அதைக் கொடுப்பதற்குத் தயக்கமாயிருக்கிறது. கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது அதனால்தான் தயங்கி நிற்கிறோம்" என்றார்கள். பரவாயில்லை இருப்பதைக் கொடுங்கள் என்றேன். நாங்கள் மிக ஏழைகள் என்று சொல்லி, அவர்கள் கொடுத்த ரூ 5/--. பெற்றுக் கொண்டு ரசீதும் கொடுத்து அனுப்பினேன். ப்ரக்ருதம் ஆண்டவன் கடாக்ஷங்களிலிருந்து ஏதொன்றும் தப்பாதது போலவே அவ்வளவு நிகழ்ச்சிகள் மத்தியிலும் இதையும் கவனித்திருக்கிறார். மாலையில் அடியேனிடம் "யாரோ இரண்டு பெண்கள் உன்னருகே ரொம்ப நேரம் நின்றார்களே, என்ன விஷயம்?" என்று கேட்க, ஆச்சர்யத்தால் பிரமித்த அடியேனும் நடந்ததைச் சொன்னேன். ஸ்ரீமத் ஆண்டவன் உடனே ஸாதித்தாயிற்று 'அந்த 5 ரூபாய் உண்மையான மதிப்பில் பெரும் செல்வந்தர் தரும் 5 லக்ஷத்திலும் பெரிது ஆசார்ய பக்தி என்பது இந்த மாதிரி ஏழைகள் காட்டுவதுதான்" என்று.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsadiyen,
dasan,
T. Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://thiruthiru.wordpress.com
http://rajamragu.wordpress.com