Announcement

Collapse
No announcement yet.

Radha's Charanamritam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Radha's Charanamritam








    notice

    Notice

    ராதை கிருஷ்ணன் இருவரும் பரமாத்மா ஜீவாத்மா தத்துவத்தை உருவகப்படுத்தும் உருவங்களே. ஆண் பெண் உறவு காட்டும் படைப்பல்ல. பசு பதி தத்துவத்தின் வெளிப்பாடு. ராதையின்றி கிருஷ்ணன் இல்லை. கிருஷ்ணன் இன்றி ராதை இல்லை. ராதா என்ற பெயர் கிருஷ்ணா என்ற பெயரின்றி தனித்து உச்சரிக்கபடுகிறதா?. ராதா கிருஷ்ணனை கல்யாணம் பண்ணிகொள்ளவே இல்லையே! . ஏன் ராதா கல்யாணம் ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு ஒவ்வொரு சீசனிலும் நடைபெறுகிறது? பார்க்கிறவர்களுக்கும் அலுக்கவேயில்லையே.? என்ன காரணம்?.பரிசுத்த காதல், பரிபூர்ண தியாகம் இவற்றாலேயே!.






    information

    Information

    கிருஷ்ணன் பிருந்தாவனம் விட்டு மதுரா சென்ற நேரம் முதல் கடைசிவரை ராதாவை நாம் பார்க்க முடியாது. அதற்காக ராதா இல்லையா? கிருஷ்ணன் இருந்தவரை கிருஷ்ணன் என்ற நாமம் உச்சரிக்கப்படும் வரை, வழிபடும் வரை ராதா, கிருஷ்ணனில் ஐக்கியமானவள் ரெண்டாக தோன்றிய ஒன்று தானே தவிர ராதை கிருஷ்ணன் இருவரும். தனித்தனியாக இருவர் அல்ல
    மனித காதலர்களாக பார்ப்பவருக்கு இன்பம் அளிக்கும் காட்சி ராதா கிருஷ்ணன் உறவு.
    ஜீவாத்மா பரமாத்வாக பாவித்து ரசிப்பவர்க்கு உன்னத சரணாகதி தத்துவம் புகட்டும் தியாகம் பரிசுத்த அன்பு, நாயக நாயகி பாவம், ராதாக்ருஷ்ணன் கதையும் படமும்..






    பிருந்தாவனத்தில் ஒருநாள் கிருஷ்ணனுக்கு உடம்பு சரியாக இல்லை. வைத்தியர்களால் குணப்படுத்த முடியவில்லை. நாரதர் முதலானோர் கவலை கொண்டனர். இது மருந்தினால் குணமாகும் வ்யாதியல்ல. கிருஷ்ணனின் மேல் உண்மையான, அளவற்ற, அளவுகடந்த, எல்லையில்லாத, அதி உன்னத,அன்பு கொண்டவர் யாரேனும் இருந்தால் அவர்கள் பாதத்தை கழுவிய நீரை கண்ணன் அருந்தினால் தான் குணமாகும். இதற்கு சரணாம்ருதம் என்று பெயர்.


    ஆனால் கண்ணன் மேல் உண்மையான மேன்மையான அன்பு குறைந்தவர்கள் எவரேனும் இப்படி சரணாம்ருதம் தந்து அதை கிருஷ்ணன் பருகினால் கிஷ்ணனுக்கு வியாதியும் குணமாகாது. எவர் சரணாம்ருதம் கொடுத்தாரோ அவர்கள் நரகத்துக்கு சென்று உழல நேரிடும். எல்லா கோபியருக்கும் கிருஷ்ணன் மீது கொள்ளை கொள்ளையாக அன்பு இருந்தாலும் ஒருவேளை என்னுடைய அன்பு, பாசம், நேசம், காதல் மற்றவளுடையதை விட குறைந்து, கம்மியாக இருந்த பட்சத்தில், கிருஷ்ணனுக்கு குணமாகாமல் போய்விடுமே என்ற கவலை இருந்ததால் பயந்தனர். சரணாம்ருதம் கொடுக்க யோசித்தனர். சந்தேகம் இருந்தது. கிருஷ்ணன் அங்கு வியாதியால் துன்பப்பட்டு கொண்டிருக்கிறானே என்ற கவலை வேறு அவர்களுக்கு. இந்த விஷயம் ராதையின் காதில் விழுந்த அடுத்த கணம். "இங்கு வாருங்கள் உடனே நான் கொடுக்கிறேன் என்று தனது பாதம் கழுவிய நீரை கொடுத்தாள். அனேக கோபியர்கள் அவளை வாட்டி வதைத்தனர். "என்ன காரியம் செய்தாய் ராதா? அவசரப்பட்டு விட்டாயே. ஒருவேளை கிருஷ்ணனுக்கு குணமாகா விட்டால்? நரகம் செல்ல நீயே வழி தேடிக் கொண்டாயா?."
    "எனக்கு நரகம் செல்ல தயக்கம் இல்லை. ஒருவேளை கிருஷ்ணன் வியாதி என் முயற்சியால் நீங்கினால் அதற்கு நான் ஏன் உதவக்கூடாது? கிருஷ்ணன் உடல் நிலை சரியாக வேண்டி நான் எந்த நரகத்துக்கு வேண்டுமானாலும் போக தயார்" என்றாள் ராதா.


    கதையில் இனி நான் சொல்ல என்ன அவசியம் உங்களுக்கே தெரியுமே!!. கிருஷ்ணன் அடுத்த நிமிஷமே குணமானான். ஒருவேளை ராதையின் தூய அன்பையும் உண்மைக் காதலையும் எடுத்துக்காட்ட அந்த மாயாவி போட்ட திட்டமா இந்த "வியாதி" நாடகம் !!!


    ஒரு முறை பிருந்தாவனத்தில் நடந்த சம்பவம் மறக்க முடியாதது.


    கோபியரில் ஒருவள் பிருந்தா. அவள் கிருஷ்ணனை தனியே அழைத்துக்கொண்டு போய் சல்லாபித்ததை ராதா பார்த்து விட்டாள் . பொறுப்பாளா? கோபம் தீயாக எழுந்தது. பிருந்தா இதை அறிந்து பயந்தால். ராதையின் கோபம் எப்படிப்பட்டது என்று அவளுக்குத் தெரியுமே. என்ன ஆகுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தாள் .


    ராதையின் கோபம் கிருஷ்ணன் மேல் பாய்ந்தது. அவனை நோக்கி விரைந்தாள். ஸ்ரீ தமா என்கிற நண்பனோடு கண்ணன் பேசிக்கொண்டிருந்தான். கிருஷ்ணனை வாயாரத்திட்ட வந்த ராதாவை ஸ்ரீ தமா கவனித்தான். அவன் கிருஷ்ணனின் உயிர்த் தோழன். யாரேனும் கிருஷ்ணனை ஏதாவது சொன்னால், அவமதித்தால், ஏசினால், பொறுக்க மாட்டானே.


    ''ராதா, நன்றாக கேள், நீ ஏதாவது கிருஷ்ணனைப் பேசினால் நான் பொறுக்கமாட்டேன். உனக்கு சாபமிடுவேன். ஜாக்ரதை.


    ''ஸ்ரீ தமா, நீ மட்டும் தான் சாப மிடுவாயோ. நானும் தான். நீ ஒரு இழி குலத்தில் பிறந்து சகல துன்பமும் அனுபவிப்பாய்'' என ராத கடுங்கோபத்தோடு சாபமிட்டாள்.


    ''இதையும் கேட்டுக்கொள் ராதா. நீ எந்த கிருஷ்ணனை இடைவிடாது தொடர்ந்து வருகிறாயோ அந்த கிருஷ்ணனை நீ ஒரு நூறு வருஷம் கண்ணாலேயே கூட பார்க்காமல் துடிக்கப்போகிறாய்'' என்று பதிலுக்கு ஸ்ரீ தமா சாபமிட்டான்.


    இரு சபாங்களுமே பலித்தன. கிருஷ்ணனின் கடைசி 100 வருஷங்களில் தான் ராதா அவனை சந்திக்கவே இல்லையே.


    சில சம்பவங்களை நாம் அறியும்போது அந்த விஷயங்களை மட்டுமே கிரஹித்துக் கொள்வோம். அதன் நதி மூலம் ரிஷிமூலம் தேவையில்லை. அதைத் தேடிப்போனால் கதையின் ருசியை இழப்போம்.
Working...
X