ப்ரமாணம்,ப்ரமேயம் விளக்கம்
"ஸர்வம் பதார்த்த ஜாதம் ப்ரமாண ப்ரமேய பேதேந த்விதா பின்னம்"

உலகில் உள்ள எல்லா பொருட்களும் ப்ரமாணமென்றும், ப்ரமேயம் என்றும் இரண்டு வகைப்படும். ப்ரமாணத்தால் விளக்கப்பட்டவை ப்ரமேயம்.
ப்ரமாணம் மூன்று வகை : ப்ரத்யக்ஷம், அநுமானம், ஸப்தம்.
ப்ரத்யக்ஷம் என்பது ஒரு வஸ்துவை ஐம்புலன்களில் ஒன்று அல்லது மேற்பட்ட இந்திரியங்களின் வாயிலாக அறியக்கூடியது.
அநுமானம்: ஒன்றின் இருப்பைக் கொண்டு மற்றொன்றை ஊகித்தறிதல்.
ஸப்தம்: ப்ரஸ்தான த்ரையம் எனப்படும் வேதம், ப்ரஹ்மசூத்ரம், ஸ்ரீபகவத் கீதை.
ப்ரமேயம் த்ரவ்யம் அத்ரவ்யம் என இருவகைப்படும்.
த்ரவ்யம் - ஜடம், அஜடம் என இருவகையானது.
ஜடம் - ப்ரக்ருதி, காலம் என இருவகையானது.
காலம் - இறந்த - நிகழ் - எதிர் என மூன்று வகையானது.
ப்ரக்ருதி 24 தத்துவங்களாக இருக்கின்றது. (பின்னர் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தில் விவரிக்கப்படும்)
அஜடம் - ஜடமல்லாதது அல்லது உயிர் தத்துவம் ஒன்றா அதற்கு மேற்பட்டதா என்பதில் மத அறிஞர்களுக்குள் அபிப்ராய பேதங்கள் உள்ளன. இவற்றில் முற்சொன்ன ப்ரஸ்தான த்ரையங்களை ப்ரமாணமாகஒப்புக்கொள்ளும் மதங்கள் த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்.

குறிப்பு:- நூற்றுக்கணக்கான நூல்களை ஆதாரமாகவும், ப்ரமாணமாகவும் கொண்டு இத்தொடர் வழங்கப்படவுள்ளது. தற்கால உபயோகிப்பாளர்களின் மொழி அறிவை கருத்தில்கொண்டு கடுமையான பொருள் விளங்காத பதங்களை நீக்கி எளிமையான வார்த்தைகளைக்கொண்டு வழங்கப்படுகிறது. மற்றபடி பூர்வ ஆசார்யர்களின் கருத்தை எந்த விதத்திலும் திரித்தோ கூட்டியோ குறைத்தோ மாறுபட்ட கருத்து தோன்றும்படியாகவோ அமைக்கும் நோக்கம் எதுவும் இல்லாததால் அதற்கு வாய்ப்பில்லை.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends