Announcement

Collapse
No announcement yet.

திருமலைசுப்ர பாத பூஜை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருமலைசுப்ர பாத பூஜை

    திருமலையில் தினம் விடியற்காலை மூன்று மணிக்கு சுப்ர பாத பூஜை தொடங்குகிறது.
    அர்ச்சகர் இருவர், கோயில் ஊழியர் இருவர், தீப்பந்தம் ஏந்திய ஒருவர், வீணை ஏந்திய ஒருவர் என மொத்தம் ஆறு பேர், காலை மூன்று மணிக்கெல்லாம் நீராடிவிட்டு தூய்மையாக வந்து சேருவார்கள். சந்நிதிக் கதவை திறந்து உள்ளே நுழைந்து சந்நிதிக் கதவை மூடி விட்டு எம்பெருமானை நோக்கிச் செல்வார்கள்.
    சந்நதிக்கு வெளியில் வேதபாராயணக்குழு சுப்ரபாதத்தைப் பாடத் தொடங்குவார்கள். சுப்ரபாதம் இருபத்தொன்பது சமஸ்கிருதப் பாசுரங்களை உள்ளடக்கியது.
    சுப்ரபாதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சந்நிதியில் சுவாமி விளக்குகள் ஏற்றப்படும். வீணை வாசிக்கப்படும். முதல் நாளிரவு பள்ளியறைத் தொட்டிலில் மூலவருக்குப் பதிலாகக் கிடத்தப்பட்ட போக ஸ்ரீனிவாச மூர்த்தி, மூலவரின் உருவச் சிலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்படுவார்.
    சுப்ரபாதப் பாடல்கள் பாடி முடிக்கப்பட்டவுடன் சந்நிதிக் கதவு திறக்கப்படும். மூலவர் வேங்கடாஜலபதியின் தரிசனம் பக்தர்களுக்குக் பரவச மூட்டும்.
    எம்பெருமானுக்குப் பாலும், வெண்ணெயும் படைக்கப்படும். கற்பூர தீபாராதனை நிகழும். இந்தத் தீபாராதனைக்கு நவநீத ஹாரத்தி என்று பெயர். விஸ்வரூப தரிசனம் என்று சொல்வதும் உண்டு. இந்தத் தரிசனம் தான் சுப்ரபாத தரிசனம்.



    Yogitha Jaisankar



Working...
X