டிச., 16 - மார்கழி பிறப்பு


கடவுள் மேல் காதல் கொண்டு, அவனே தனக்கு மணாளனாக வர வேண்டும் என்று அவனிடமே வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் விரதம் மேற்கொண்டாள் ஆண்டாள். இதை, 'பாவை நோன்பு' என்பர். இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து, தோழியரையும் அழைத்துச் சென்று நீராடி, தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனை வணங்கி, அவன் கரம் பிடித்தாள்.
திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டி, மார்கழி மாதத்தில் இவ்விரதத்தை அனுஷ்டிப்பர். இவ்விரதம் மேற்கொள்ளும் போது, மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் உணவு வகைகளைத் தவிர்த்து, 27ம் நாளில் உணவில் நெய் சேர்த்து சாப்பிடலாம். மேலும், அதிகாலை, 4:30 மணிக்கு எழுந்து நீராடி, திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். இசையறிந்தவர்கள் ராகமாக பாடலாம் அல்லது ஒருவர் பாட, மற்றவர்கள் மனதை அலைபாய விடாமல் கேட்க வேண்டும்.
மார்கழி முதல் நாள், 'மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' என்ற பாடலில் இருந்து, தினமும் ஒரு பாடலை, மூன்று முறை பாராயணம் செய்வதுடன், கூடவே, 'வாரணமாயிரம் சூழ வலம் வந்து...' என்று ஆரம்பிக்கும் பாடல்களையும் பாட வேண்டும். விரத நாட்களில் எளிய உணவுகளையே சாப்பிட வேண்டும். ஆண்டாள் மற்றும்
பெருமாள் படம் வைத்து, உதிரிப்பூ தூவி, காலையும், மாலையும் வழிபட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவன் அமைய அருள் செய்வாள். திருமணத் தடைகளும் நீங்கும்.
சுமங்கலிப் பெண்களும் மாங்கல்ய பாக்கியத்திற்காக, மார்கழி பூஜை செய்யலாம். தினமும், அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, விளக்கேற்றி, சுவாமி படங்களுக்கு பூச்சரம் அணிவித்து, திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாட வேண்டும். இந்த நாட்களில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், கற்கண்டு சாதம், சுண்டல் நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
மார்கழியில் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறும். அதிகாலையில், பெருமாள் மற்றும் சிவன் கோவில்களுக்கு சென்று, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடுவதுடன், கேட்கவும் செய்யலாம்.
திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் திகழும் சிவபெருமானை முன்னிலைப்படுத்தி திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதில், 20 பாடல்கள் உள்ளன. இவை மார்கழியின் முதல், 20 நாட்களில் பாடப்படும். கன்னிப்பெண்கள் அதிகாலையில் துயில் எழுந்து, ஒருவரை ஒருவர் எழுப்பி, சிவ வழிபாட்டிற்கு செல்வது போல் இப்பாடல்கள் அமைந்துள்ளன. அடுத்து வரும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள், 10ம் திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார்கோவில் சிவனை, பள்ளி எழுப்பும் வகையில் அமைந்திருக்கும். திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.
என்ன கன்னியரே... மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா? இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், 'அந்த' நல்லவர் உங்களைத் தேடி வருவார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தி.செல்லப்பா
Dinamalar