த்வைத ஸித்தாந்தம்
இந்த ஸித்தாந்த ப்ரவர்தகர் - ஸ்ரீ ஆநந்த தீர்த்தர்


"ஸ்ரீமந் மத்வ - மதே ஹரி: பரதர: ஸத்யம் ஜகத் தத்வதோ
பிந்நா ஜீவகணா ஹரோநுசரா நீசோச்சபாவம் கதா:!
முக்திர் - நைஜ - ஸுகாநுபூதி: அமலா பக்திச்ச தத் - ஸாதனம்
ஹ்யக்ஷாதி - த்ரிதயம் ப்ரமாணமகில - ஆம்நாயைகவேத்யோ ஹரி:!!"

குறிப்பு:- இந்த க்ரந்தத்தின் (புத்தகத்தின்) பெயரோ, எழுதயவரின் பெயரோ தெரியவில்லை. "ஏ.வி.கோபாலாச்சாரி - திருச்சினாப்பள்ளி - 12-06-1934 என்று முகவுரையின் முடிவில் காணப்படுகிறது."

த்வைத ஸித்தாந்தம்
மஹாவிஷ்ணு ஸர்வேச்வரன் - ஸர்வசக்தன், முக்தியளிப்பவன் தோஷமற்றவன்.
மஹாலக்ஷ்மி - விஷ்ணுவின் பத்னி, அவனுக்கு மட்டுமே அடங்கியவள். எல்லாவிடத்தும் வ்யாபித்திருப்வள்.
இவர்கள் இருவர்தான் நித்ய - முக்தர். ஜீவாத்மாக்களில் நித்ய-முக்தர் கிடையாது. எல்லாருமே ஸம்ஸாரத்திலிருந்து முக்தியடைகிறார்கள்.
சராசர ரூபமான ஸகல ப்ரபஞ்சமும் உண்மையாயுள்ளது. அஸத்யமன்று. ஜீவாத்மாக்கள் பரமாத்மாவைக் காட்டிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். ஜீவர்கள் பும் ஜாதி, ஸ்த்ரீ ஜாதி என்று இருவகைப் பட்டவர்கள். புருஷ ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஸம்ஸார தசையில் கர்மத்தால் ஸ்த்ரீ - சரீரத்தை அடைந்தாலும் மோக்ஷத்தில் புருஷ ஜாதியராகவே இருப்பர். ஸ்த்ரீ ஜாதியர் ஸம்ஸார தசையிலும், மோக்ஷ தசையிலும் ஸ்த்ரீ-ஜாதியராகவே இருப்பர்.

இஜ்ஜீவர்கள் முக்தியோக்யர், நித்ய ஸம்ஸாரிகள், தமோயோக்யர் என்று மூன்று வகைப்பட்டிருப்பார்கள். இவர்களில் முக்தியோக்யர் தேவ-கணம், ரிஷி-கணம், பித்ரு-கணம், சக்ரவர்த்தி-கணம், மனுஷ்யோத்தம-கணம் என்று ஐந்து வகையினர். அந்தந்த கணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த ஸ்தானத்தை அடைய யோக்யதை உண்டு. ப்ரஹ்மா, வாயு முதலானோர் தேவ கணங்கள். நாரதர் முதலியவர் ரிஷி கணங்கள். சிராதிகள் பித்ரு கணங்கள். ரகு, அம்பரீஷன் முதலியோர் சக்ரவர்த்தி கணங்கள்.

மனுஷ்யோத்தமர்கள் த்ருண-ஜீவர், தத்வ்யதிரிக்த-ஜீவர் என்று இருவகைப்பட்டிருப்பார்கள். த்ருண ஜீவர் ப்ரஹ்மத்தின் ஆத்மா என்கிற ஒரு குணத்தை உபாஸிக்கிறவர்கள். இவர்கள் அபரோக்ஷ-ஞானம் பிறந்த பிறகு தேஹ-நாசநாந்தரம் இங்கேயே முக்தியை அடைகிறார்கள். த்ருண-ஜீவரைக் காட்டிலும் வேறுபட்ட மனுஷ்யோத்தமர் ப்ரஹ்மத்தின் ஸத், சித், ஆநந்தம், ஆத்மா என்கிற நான்கு குணங்களை உபாஸிப்பார்கள். இந்த முக்தி-யோக்யர்கள் மோக்ஷ-ஸாதன-அநுஷ்டானத்தால் மோக்ஷத்தை அடைய யோக்யதை உடையவர்கள். இவர்கள் ஸதாசாரம், பகவத்-பக்தி முதலான நல்ல குணங்களை உடையவராயிருப்hர்கள். இவர்களில் சிலருக்கு சில காலத்தில் துர்குணம் உண்டாவது அஸுராவேசத்தாலே.

எப்போதும் ஸுக-துக்கங்களை கலந்து அனுபவிப்பார்கள் நித்ய-ஸம்ஸாரிகள். இவர்கள் புண்ய-கர்மங்களால் ஸ்வர்கம் போவதும், பாப கர்மங்களால் நரகம் போவதும், பூலோகத்துக்கு வருவதுமாக சுற்றிக்கொண்டேயிருப்பார்கள்.

தமோயோக்யர் தைத்யர், அஸுரர், பிசாசர், மனுஷ்யோத்தமர் என்று நான்கு விதம். இவர்கள் முடிவில் நித்யமான நரகத்திலேயே விழுந்துவிடுவார்கள். இவர்கள் பகவானிடத்திலும், பகவத்-பக்தர்களிடத்திலும் த்வேஷம், துராசாரம் முதலான துர்குணங்களையுடையவராய் இருப்பார்கள்.

ஜீவாத்மாகள் எல்லோரும் ஞான-ஆநந்த ஸ்வரூபர்கள். மிகவும் அணு பரிமாணமுடையவர்கள். பகவானுக்கு கிங்கரர்கள். முக்தியோக்ய ஜீவர்களில் ஸ்தாவர ஜீவர்களைக் காட்டிலும் பசு பக்ஷ்யாதி -ஜங்கம ஜீவர்கள் பக்தி, பகவத்
மோக்ஷத்திற்கு பக்தியோடு கூடின பகவத் உபாஸனம் ஸாதனம்.
இந்த ஸித்தாந்தத்தில் ஜீவ - ஈச்வரர்களுக்கு ஸ்வரூப பேதம் ஒப்புக்கொள்ளப்படுகிறபடியால் இது த்வைத ஸித்தாந்தம் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பு:- புத்தகத்தின் கண்டுள்ளபடி அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. கடின பதங்கங்களாகத் தோன்றுபவற்றை தோந்தெடுத்து அவற்றுக்கு பொருள் எழுத முடிந்தால் யாரேனும் முயற்சிக்கலாம். அல்லது கடின பதங்களின் பட்டியலை மட்டும் அடியேனுக்கு அனுப்பி வைத்தால் அடியேன் அவற்றுக்கு பொருள் எழுதி பதிப்பிக்கிறேன்.
தாஸன்
என்.வி.எஸ்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends