Announcement

Collapse
No announcement yet.

மனிதனே தெய்வம் ..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மனிதனே தெய்வம் ..

    நாம் பல பேர் கடவுளைத் தேடி அங்கும் இங்கும் அலைகிறோம். சிலர் காசி போகின்றார்கள்.சிலர் ராமேஸ்வரம் போகின்றார்கள்.. ஆனாலும் கடவுளை ஒழுங்காகப் பார்த்தார்களா என்றால் கண்டிப்பாக இல்லை. வெறும் சிலையைப் பார்த்துவிட்டு நல்ல தரிசனம் கிடைத்தது என்று சொல்பவர்களே அதிகம். இன்னும் சில பேர் அந்த கோவிலுக்கு போனேன் இந்தக் கோவிலுக்கு போனேன் ஆனாலும் கடவள் ஒன்றும் செய்யவில்லை. கடவுள் எங்கே இருக்கின்றார் என்று கடவுள் மேலேயே கோவித்துக் கொள்கிறார்கள்.
    ஆனால், ஒன்றை மட்டும் எல்லோரும் எளிதாக மறந்துவிடுகிறார்கள். கடவுளுடைய உண்மையான இருப்பிடம் அதுவல்ல என்பதை. "கண்ணில் தெரியும் மனிதரில் எல்லாம் கடவுள் வாழ்கிறார். அவர் கருணை உள்ளவர்...." என்ற திரைப்பட பாடலில் கடவுள் எங்கே இருக்கிறார் என்பது அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. அருட்ப்ரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் கடவுளை " அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி" என்றே அழைக்கின்றார்.
    இதை நம்பிரான் திருமூலரும்
    படமாட பகவர்க்கொன்று ஈயில்
    நடமாட நம்பர்க்கொன்று ஆகா
    நடமாட நம்பர்க்கொன்று ஈயில்
    படமாட பகவர்க்கு அதாமே.
    என்று குறிக்கிறார்.
    படம், மாடம் உள்ள கோவில்களில் உள்ள கடவுளுக்கு நாம் ஏதேனும் செய்தால் அதனால் நடமாடும் மனிதர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. ஆனால், நடமாடும் கோவில்களாக உள்ள மனிதர்களுக்கு ஒன்று செய்தால் அது எல்லாம் வல்ல அந்த பரம்பொருளுக்கே செய்ததாக அர்த்தம்..
Working...
X