notice

Notice

சிவம் என்கிற சொரூபத்தையும் விஷ்ணு என்கிற சொரூபத்தையும் ஒரே சொரூபமாக பல இடங்களில் சேர்துச் சொல்வதுண்டு.' சிவஸ்ய ஹிருதயம் விஷ்ணு, விஷ்ணோஸ்ச ஹிருதயம் சிவ: " என்று, இவர் அவரது பிராணன் என்றும் அவர் இவரது பிராணன் என்றும் சொல்வார்கள். இவர்கள் இருவருக்குள்ளும் உள்ள ஒற்றுமையை, வேறுபாடற்ற தன்மையை விளக்க அநேக இடங்களில் இவர்க்ளது நாமாக்களைச் செர்த்துச் சொல்வதைக் கவனிக்கவேண்டும், ஹரிஹரன், சங்கரநாராயணன், ராமலிங்கம், ராமேசுவரன் இப்படி அநேக நாமாக்கள் உண்டு. விஷ்ணுவும் ராமனும் ஒரே அம்சம்தானே? சுவாமிக்கு அந்த ராமனோடு அதிகமாக இருக்கும் உறவை ராமலிங்கம், ராமநாதன், ராமேசுவரன் போன்ற பெயர்கள் காட்டுகிறது.

information

Information

ராஜசேவகன் என்றால் ராஜாவின் சேவகன் என்பது மேற்சொன்ன மொன்று சமாஸத்தில் தத்புருஷம் என்பதாகிறது. ராஜா வேறு, சேவகன் வேறு. ராஜாவுக்குட்பட்டவன் சேவகன். உயர்ந்தவன் ராஜா. அந்த மாதிரி ராமேசுவரன் என்றால் தத்புருஷ சமாஸம? ராமனுடைய ஈசுவரன் என்றால் ராமனுடைய ஈசுவரன் என்று எடுத்துக்கொள்வதா? ஈசுவரன் என்றால் உயர்ந்தவன், எனில், ராமனைவிட உயர்ந்தவனா? ராமனே சர்வலோக சரண்யன் ஆயிற்றே! அவனுக்கு மேலே வேறு ஒருவரைச் சொல்வதா? சிவதனுசை ஒடித்தவன் ராமன், அப்படியிருக்க, ராம்னைவிட உயர்ந்தவன் சிவன் என்று எப்படிச் சொல்வது? இப்படி, தேவர்களுக்குள் அநேகக் குழப்பங்கள்.சரி, சந்தேகம் வந்தால் எங்கே தீர்மானம் பண்ணுவது? என்ற யோசனை வந்தது. ராமனின் மூலமான விஷ்ணுவிடமே இதைக் கேட்டுவிடலாம் என்று முடிவாயிற்று. வைகுண்டம் போய் விஷ்ணுவை வணங்கி அவரிடமே தம் சந்தேகத்தைக் கேட்டார்கள். அதற்கு ஆதிநாரயனரான பால்கடல் வாசனோ, இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு! இது தத்புருஷ சமாஸந்தான். " ராமஸ்ய ஈச்வர: ராமேச்வர: " என்று சொன்னார். விஷ்ணு இவாறு கூறியதும் தேவார்களுக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. தாம் சிவனை விட உயர்ந்தவர் என்று சொன்னால் அகம்பாவமாகச் சொல்வதாக இவர்கள் நினைப்பார்கள் என்று, மரியாதைக்காக இப்படிச் சொல்லிவிட்டார் போல. விஷ்ணுவை குண்பூர்வணன் என்கிறோம். அதனாலேயே தன்னடக்கத்தோடு சொல்கிறாரோ? என்ன செய்வது? இதை எப்படி நிச்சயம் செய்வது? எனும் சந்தேகம் திரும்பவும் அவர்களுக்கு வந்தது.
சரி ராமனுடைய ஈசுவரன் எனக்கும் ஈசுவரன் என்று இவர் எவரைச் சொன்னாரோ அவரிடமே போய்க் கேட்டுவிடலாம் என்று முடிவுசெய்து கைலாசம் சென்றனர். அங்கு சென்று ஈசனை வணங்கித் தம்முடைய சந்தேகத்தைக் கேட்டனர். ஆனால், அவரிடம் விஷ்ணு கூறிய பதிலைக் கூறவில்லை. இவருடைய அபிப்பிராயத்தைத் தனியாகக் கேட்கவேண்டும் என விரும்பினர். தேவர்களின் சந்தேகத்தைக் கேட்ட ஈசனார், "' இதிலே உங்களுக்கென்ன சந்தேகம்? அது பஹூவ்ரீஹி சமாஸந்தான். ராமனை ஈசுவரனாக உடையவன் நான் " என்று கூறினார். சரி, இரண்டும் ஒன்றுகொண்று முரண்பாடாக உள்ளது. உவரை அவரும் அவரை இவரும் உசத்தி என்று கூறிக்கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் இந்த விஷயத்தில் தொடர்புடையவர்களாக் இருக்கிறார்கள். எனவே, இதில் தொடர்பில்லாதவராகவும், நடுநிலையாக இருக்கக்கூடியவரும், நிறையப் படித்தவரும் மும்மூர்த்திகளில் ஒருவருமான பிரம்மாவிடமே கேட்டுவிடலாம் என முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

தேவர்களின் சந்தேகத்தைக் கேட்ட பிரம்ம நன்றாக யோக்சனை செய்து பின்னர், " ராமேசுவரன் என்பது கர்மடாரய சமாஸம். வீரராகவன் என்றால், வீரனான ராகவன் என்று பொருள். வீரன் வேறு ராகவன் வேறு அல்ல. அதேபோல் ராமஸ்ச அஸௌ ஈச்வரஸ்ச ராமேச்வர: " என்று சொல்லிவிட்டார். ராமன் வேறு, ஈசுவரன் வேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இது கர்மதாரய சமாஸம் என்று சொல்லிவிட்டார்.ராமேசுவரன் என்ற பதத்திற்கு சமாஸம் கண்டுகொண்டு, ராமன் உசத்தியா ஈசுவரன் உசத்தியா இன்று தீர்மானம் செய்வதற்கு அலைந்த தேவர்களுக்கு, கடைசியில் " ஈசுவரன் வேறே, ராமன் வேறே என்பது இல்லை, रामश्च असौ ईश्वरश्च रामेश्वर:இரண்டும் ஒரே தத்துவந்தான். இரண்டும் ஒரு பரதத்துவந்தான் என்று பிரம்மா சொன்னதாக இதிலிருந்து நமக்குத் தெரிகிறது. இந்த ஒற்றுமையை நாம் அனைவரும் உணரவேண்டும். இந்தத் தத்துவத்தை நாம அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்று அடைதல் அரிது"