Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினேழாவது அத்தியாயம் 17[2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினேழாவது அத்தியாயம் 17[2]

    சிரத்தாத்ரய விபாக யோகம்


    Continued


    अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् ।
    स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते ॥१७- १५॥


    அநுத்³வேக³கரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் |
    ஸ்வாத்⁴யாயாப்⁴யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே || 17- 15||


    யத் அநுத்³வேக³கரம் ஸத்யம் ச = சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது,
    ப்ரியஹிதம் = இனியது, நலங் கருதியதுமாகிய
    வாக்யம் ச = சொல்லுதல்
    ஸ்வாத்⁴யாய அப்⁴யஸநம் ஏவ = கல்விப் பயிற்சி
    வாங்மயம் தப: உச்யதே = இவை வாக்குத் தவமெனப்படும்
    சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, இனியது, நலங் கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி – இவை வாக்குத் தவமெனப்படும்.


    मनः प्रसादः सौम्यत्वं मौनमात्मविनिग्रहः ।
    भावसंशुद्धिरित्येतत्तपो मानसमुच्यते ॥१७- १६॥


    மந: ப்ரஸாத³: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்³ரஹ: |
    பா⁴வஸம்ஸு²த்³தி⁴ரித்யேதத்தபோ மாநஸமுச்யதே || 17- 16||


    மந: ப்ரஸாத³: = மன மகிழ்ச்சி
    ஸௌம்யத்வம் = அமைதி,
    மௌநம் = மௌனம்
    ஆத்மவிநிக்³ரஹ: = தன்னைக் கட்டுதல்
    பா⁴வஸம்ஸு²த்³தி⁴: = எண்ணத் தூய்மை
    இதி ஏதத் மாநஸம் தப: உச்யதே = இவை மனத் தவமெனப்படும்
    மன அமைதி, மகிழ்ச்சி, மௌனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத் தவமெனப்படும்.


    श्रद्धया परया तप्तं तपस्तत्त्रिविधं नरैः ।
    अफलाकाङ्क्षिभिर्युक्तैः सात्त्विकं परिचक्षते ॥१७- १७॥


    ஸ்²ரத்³த⁴யா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவித⁴ம் நரை: |
    அப²லாகாங்க்ஷிபி⁴ர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே || 17- 17||


    அப²லாகாங்க்ஷிபி⁴: யுக்தை: நரை: = பயனை விரும்பாத யோகிகளான மனிதர்களால்
    பரயா ஸ்²ரத்³த⁴யா தப்தம் = உயர்ந்த நம்பிக்கையுடன்
    தத் த்ரிவித⁴ம் தப: = மேற்கூறிய மூன்று வகைகளிலும் செய்யப்படும் தவம்
    ஸாத்த்விகம் பரிசக்ஷதே = சாத்வீகமெனப்படும்
    பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்வீகமெனப்படும்.


    सत्कारमानपूजार्थं तपो दम्भेन चैव यत् ।
    क्रियते तदिह प्रोक्तं राजसं चलमध्रुवम् ॥१७- १८॥


    ஸத்காரமாநபூஜார்த²ம் தபோ த³ம்பே⁴ந சைவ யத் |
    க்ரியதே ததி³ஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்⁴ருவம் || 17- 18||


    யத் தப: = எந்த தவம்
    ஸத்காரமாநபூஜார்த²ம் ச ஏவ = மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் (போற்றுதலையும்)
    த³ம்பே⁴ந க்ரியதே = ஆடம்பரத்துக்காகவும் செய்வதுமாகிய
    இஹ ராஜஸம் ப்ரோக்தம் = தவம் ராஜசமெனப்படும்
    தத் அத்⁴ருவம் சலம் = அஃது நிலையற்றது; உறுதியற்றது
    மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காக செய்வதுமாகிய தவம் ராஜசமெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.


    मूढग्राहेणात्मनो यत्पीडया क्रियते तपः ।
    परस्योत्सादनार्थं वा तत्तामसमुदाहृतम् ॥१७- १९॥


    மூட⁴க்³ராஹேணாத்மநோ யத்பீட³யா க்ரியதே தப: |
    பரஸ்யோத்ஸாத³நார்த²ம் வா தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 17- 19||


    யத் மூட⁴க்³ராஹேண = எந்த மூடக் கொள்கையுடன்
    ஆத்மந: பீட³யா வா = தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு
    பரஸ்ய உத்ஸாத³நார்த²ம் க்ரியதே = பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய
    தத் தப: தாமஸம் உதா³ஹ்ருதம் = அந்த தவம் தாமசம் எனப்படும்
    மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும்.


    दातव्यमिति यद्दानं दीयतेऽनुपकारिणे ।
    देशे काले च पात्रे च तद्दानं सात्त्विकं स्मृतम् ॥१७- २०॥


    தா³தவ்யமிதி யத்³தா³நம் தீ³யதேऽநுபகாரிணே |
    தே³ஸே² காலே ச பாத்ரே ச தத்³தா³நம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம் || 17- 20||


    தா³தவ்யம் இதி யத் தா³நம் = கொடுத்தல் கடமையென்று கருதி எந்த தானம்
    தே³ஸே² காலே ச பாத்ரே ச = தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும்
    அநுபகாரிணே தீ³யதே = கைம்மாறு வேண்டாமல் கொடுக்கப் படுகிறதோ
    தத் தா³நம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம் = அந்த தானம் சாத்வீகமென்பர்
    கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீகமென்பர்.


    यत्तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्य वा पुनः ।
    दीयते च परिक्लिष्टं तद्दानं राजसं स्मृतम् ॥१७- २१॥


    யத்து ப்ரத்யுபகாரார்த²ம் ப²லமுத்³தி³ஸ்²ய வா புந: |
    தீ³யதே ச பரிக்லிஷ்டம் தத்³தா³நம் ராஜஸம் ஸ்ம்ருதம் || 17- 21||


    து யத் பரிக்லிஷ்டம் ச = ஆனால் மன வருத்தத்துடன்
    ப்ரத்யுபகாரார்த²ம் வா = கைம்மாறு வேண்டியும்
    ப²லம் உத்³தி³ஸ்²ய புந: தீ³யதே = பயனைக் கருதியும் கொடுக்கப்படுகிறதோ
    தத் தா³நம் ராஜஸம் ஸ்ம்ருதம் = அந்த தானத்தை ராஜசமென்பர்
    கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர்.


    अदेशकाले यद्दानमपात्रेभ्यश्च दीयते ।
    असत्कृतमवज्ञातं तत्तामसमुदाहृतम् ॥१७- २२॥


    அதே³ஸ²காலே யத்³தா³நமபாத்ரேப்⁴யஸ்²ச தீ³யதே |
    அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 17- 22||


    யத் தா³நம் அஸத்க்ருதம் = எந்த தானம் மதிப்பின்றி
    அவஜ்ஞாதம் = இகழ்ச்சியுடன்
    அதே³ஸ²காலே ச = தகாத இடத்தில், தகாத காலத்தில்
    அபாத்ரேப்⁴ய தீ³யதே = தகாதர்க்குச் தரப் படுகிறதோ
    தத் தாமஸம் உதா³ஹ்ருதம் = அந்த தானம் தாமசமெனப்படும்
    தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதர்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும்.


    ॐतत्सदिति निर्देशो ब्रह्मणस्त्रिविधः स्मृतः ।
    ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा ॥१७- २३॥


    ஓம்தத்ஸதி³தி நிர்தே³ஸோ² ப்³ரஹ்மணஸ்த்ரிவித⁴: ஸ்ம்ருத: |
    ப்³ராஹ்மணாஸ்தேந வேதா³ஸ்²ச யஜ்ஞாஸ்²ச விஹிதா: புரா || 17- 23||


    ஓம் தத் ஸத் இதி த்ரிவித⁴: = ஓம் தத் ஸத்” என்ற மூன்று விதமாக
    ப்³ரஹ்மண: நிர்தே³ஸ²: ஸ்ம்ருத: = பிரம்மத்தைக் குறிப்பது என்பர்
    தேந புரா = அதனால் முன்பு
    ப்³ராஹ்மணா: வேதா³: ச யஜ்ஞா: ச = பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும்
    விஹிதா: = வகுக்கப்பட்டன
    “ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால் முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.


    तस्मादोमित्युदाहृत्य यज्ञदानतपःक्रियाः ।
    प्रवर्तन्ते विधानोक्ताः सततं ब्रह्मवादिनाम् ॥१७- २४॥


    தஸ்மாதோ³மித்யுதா³ஹ்ருத்ய யஜ்ஞதா³நதப:க்ரியா: |
    ப்ரவர்தந்தே விதா⁴நோக்தா: ஸததம் ப்³ரஹ்மவாதி³நாம் || 17- 24||


    தஸ்மாத் ப்³ரஹ்மவாதி³நாம் = ஆதலால், பிரம்மவாதிகள்
    விதா⁴நோக்தா: யஜ்ஞ = விதிப்படி புரியும் வேள்வி
    தா³ந தப: க்ரியா: = தவம், தானம் என்ற கிரியைகள்
    ஸததம் ஓம் இதி = எப்போதும் ‘ஓம்’ என்று
    உதா³ஹ்ருத்ய ப்ரவர்தந்தே = தொடங்கிச் செய்யப்படுகின்றன
    ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் ‘ஓம்’ என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன.


    तदित्यनभिसन्धाय फलं यज्ञतपःक्रियाः ।
    दानक्रियाश्च विविधाः क्रियन्ते मोक्षकाङ्क्षिभिः ॥१७- २५॥


    ததி³த்யநபி⁴ஸந்தா⁴ய ப²லம் யஜ்ஞதப:க்ரியா: |
    தா³நக்ரியாஸ்²ச விவிதா⁴: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி⁴: || 17- 25||


    தத் இதி = ‘தத்’ என்ற சொல்லை உச்சரித்து
    ப²லம் அநபி⁴ஸந்தா⁴ய = பயனைக் கருதாமல்
    விவிதா⁴: யஜ்ஞதப:க்ரியா: = பல வகைப்பட்ட வேள்வியும் தவமும்
    தா³நக்ரியா: ச = தானமுமாகிய கிரியைகள்
    மோக்ஷகாங்க்ஷிபி⁴: க்ரியந்தே = மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன
    ‘தத்’ என்ற சொல்லை உச்சரித்து பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.


    सद्भावे साधुभावे च सदित्येतत्प्रयुज्यते ।
    प्रशस्ते कर्मणि तथा सच्छब्दः पार्थ युज्यते ॥१७- २६॥


    ஸத்³பா⁴வே ஸாது⁴பா⁴வே ச ஸதி³த்யேதத்ப்ரயுஜ்யதே |
    ப்ரஸ²ஸ்தே கர்மணி ததா² ஸச்ச²ப்³த³: பார்த² யுஜ்யதே || 17- 26||


    ஸத் இதி = ‘ஸத்’ என்ற சொல்
    ஏதத் ஸத்³பா⁴வே = உண்மை யென்ற பொருளிலும்
    ஸாது⁴பா⁴வே ச ப்ரயுஜ்யதே = நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது
    பார்த² = பார்த்தா
    ததா² ப்ரஸ²ஸ்தே கர்மணி = புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும்
    ஸத் ஸ²ப்³த³: யுஜ்யதே =‘ஸத்’ என்ற சொல் வழங்குகிறது
    ‘ஸத்’ என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ‘ஸத்’ என்ற சொல் வழங்குகிறது.


    यज्ञे तपसि दाने च स्थितिः सदिति चोच्यते ।
    कर्म चैव तदर्थीयं सदित्येवाभिधीयते ॥१७- २७॥


    யஜ்ஞே தபஸி தா³நே ச ஸ்தி²தி: ஸதி³தி சோச்யதே |
    கர்ம சைவ தத³ர்தீ²யம் ஸதி³த்யேவாபி⁴தீ⁴யதே || 17- 27||


    யஜ்ஞே தபஸி தா³நே ச ஸ்தி²தி: ஏவ = வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும்
    ஸத் இதி உச்யதே = ‘ஸத்’ எனப்படுகிறது
    ச தத³ர்தீ²யம் = மேலும் பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும்
    கர்ம ஏவ ஸத் இதி அபி⁴தீ⁴யதே = கர்மமும் ‘ஸத்’ என்றே சொல்லப்படும்
    வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ‘ஸத்’ எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் ‘ஸத்’ என்றே சொல்லப்படும்.


    अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् ।
    असदित्युच्यते पार्थ न च तत्प्रेत्य नो इह ॥१७- २८॥


    அஸ்²ரத்³த⁴யா ஹுதம் த³த்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத் |
    அஸதி³த்யுச்யதே பார்த² ந ச தத்ப்ரேத்ய நோ இஹ || 17- 28||


    பார்த² = பார்த்தா
    அஸ்²ரத்³த⁴யா ஹுதம் த³த்தம் = அசிரத்தையுடன் வேள்வியும் தானமும்
    தப்தம் தப: ச = செய்யும் தவமும்
    யத் க்ருதம் = கர்மமும்
    அஸத் இதி உச்யதே = ‘அஸத்’ எனப்படும்
    தத் இஹ நோ ப்ரேத்ய ச ந = அவை இம்மையிலும் பயனில்லை மறுமையிலும் இல்லை
    அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும் தானமும், தவமும், கர்மமும், ‘அஸத்’ எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா;


    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे श्रद्धात्रयविभागयोगो नाम सप्तदशोऽध्याय: || 17 ||


    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘சிரத்தாத்ரய விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த
    பதினேழாம் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X