Announcement

Collapse
No announcement yet.

வாயு மைந்தரே வருக! வளங்களெல்லாம் தருக

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வாயு மைந்தரே வருக! வளங்களெல்லாம் தருக




    அனுமனின் பிறந்தநாளான இன்று அவரது அருளை பெறும் விதத்தில் இந்த பிராத்தனையைப் படிப்போமா!


    * வாயு மைந்தனான ஆஞ்சநேயா! உன்னைத் தியானிக்கிறேன். எனக்கு வலிமை, அறிவு, உண்மை, ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களில் இருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.




    * ஆஞ்சநேயா! நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன். வானவர்களின் தலைவன். மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.




    * அனுமனே! நீ தீய சிந்தனைகளை விரட்டுபவன். நல்ல சிந்தனைகளின் நண்பன். பொன்னிறம் பொருந்தியவன், சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன். ஒளி வீசுகின்ற குண்டலங்களை காதில் அணிந்துள்ளாய். உனது முடி அலையலையாக அழகாக உள்ளது. உனதுகைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளை முஞ்ஜைப்புல்லாலான பூணூல் அணி செய்கிறது.


    * மாருதியே! நீ சிவனின் அவதாரம், கேசரியின் மகன், உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் கேசரி என்னும் பெயர் பெற்றார்.




    * அனுமனே! நீ அறிவாளி, வாயுபகவானை தெய்வீகத் தந்தையாகப் பெற்றவன், நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன், மிகவும் கூரிய புத்தியை உடையவன். ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன். அவரது திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய்.




    * ஆஞ்சநேயனே! ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர். நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய். மிகவும் பயங்கர உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய். அரக்கர்களை அழித்து ஸ்ரீராமசேவையை நிறைவேற்றினாய்.




    * சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக்காத்தபோது, ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்! உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து, நீயும் பரதனைப் போலவே நமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.




    * ஸ்ரீராமனிடம் சுக்ரீவனை அறிமுகப்படுத்தி, சொந்த அரசை மீட்டுக் கொடுத்ததன் மூலம் அவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய். உனது அறிவுரைகளின் படி நடந்ததாலேயே விபீஷணன், இலங்கை அரசனானான்.


    இப்படிப்பட்ட பெருமைகளை




    உடைய ஆஞ்சநேயனே!




    நீ எங்களுக்கு சகல வளமும்




    தந்தருள உனது பிறந்த நாளில்




    பாதம் பணிந்து வேண்டுகிறோம்.


    அனுமனை தெரிந்து கொள்ளுங்கள்


    * அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.




    * அனுமன் ராமனுக்கு மட்டுமல்ல! ராமாவதாரத்தை அடுத்து வந்த கிருஷ்ணாவதாரத்திலும் அர்ஜுனனின் கொடியில் இருந்தவர். அவரது முன்னிலையிலேயே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையைப் போதித்தார்.




    * கீதைக்கு பலர் உரை எழுதியுள்ளனர். பைசாசம் என்ற மொழியில், ஆஞ்சநேயர் கீதைக்கு விளக்கவுரை எழுதியதாகச் சொல்வர்.




    * அனுமனை கர்நாடகத்தில் ஹனுமந்தையா, ஆந்திராவில் ஆஞ்சநேயலு, மகாராஷ்டிராவில் மாருதி, பல ஊர்களில் மகாவீர் என அழைக்கின்றனர்.




    * ராமநாமம் சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவார்கள். அனுமன் ஓயாமல் ராம நாமம் சொன்னதால் தான், கடலைத் தாண்ட முடிந்தது. முடியாததையும் முடித்து வைப்பது ராம நாமம்.


    * சிறந்த கல்விமானான அனுமனை நவ வ்யாகரண வேத்தா என்பர். அதாவது. அவர் ஒன்பது வகையான இலக்கணத்தையும் படித்தவர்.




    * உ.பி.,யில் உள்ள கான்பூரிலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள பங்கி ஆஞ்சநேயர் கோயிலில், காலையில் அனுமன் குழந்தை வடிவிலும், மதியம் இளைஞனாகவும், மாலையில் வீர புருஷராகவும் காட்சி தருவார்.


    * மகாராஷ்டிரா, அவுரங்காபாத் மாவட்டத்தில் குல்தாபாத்தில் உள்ள பத்ர மாருதி கோயிலில் அனுமன் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
Working...
X