Dear bhAgavatAs,

As we approach ஸ்ரீ ராம நவமி and பங்குனி உத்தரம், here is a stunning video clip (about 30 minutes) of the tirukkalyANa utsavam from vaDuvUr (an abhimAna stalam near tanjAvUr). I have spliced SrI tyAgarAja swAmi’s beautiful utsava sampradAya krithis rendered by Smt. Somya.முதலில், நாம் வடுவூரின் நீர் வளம், நீல வளத்தையும், திருக்கோவிலின் பொலிவையும் எம்பெருமானின் திருப்பள்ளியெழுச்சியோடு அனுபவிக்கின்றோம். Toward the end of this first composition, at 4:52, சக்ரவர்த்தித்திருமகனை முதலில் ஸேவிக்கின்றோம் — “முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ!” என்னும்படியாக ஜ்வலிக்கும் திருவபிஷேகமும், அஷ்டமி சந்திரனை அநுகரிக்கின்ற திருநெற்றியும், “முகத்து கரியவாகி புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய, தூது செய்” திருத்தாமரைக்கண்களும், “வில் வீசும் மின்னு மா மணி மகர குண்டலங்களும்”, “மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ” என்னும்படியான திருமூக்கும், அடியார்களை கண்டு களிப்புற்று விகஸிக்கும் திருப்பவளமும், “ஆடவர் பெண்மையை அவாவும் தோள்” என்றபடி தடம் பெருந்தோள்களும், கம்பீரமாக நிமிர்ந்த திருமார்பும், மிடுக்கும், and, the climax — a hint of exaggeration in His Contrapposto — இவன்தான் சௌந்தரியத்துக்கும், லாவண்யத்துக்கும் எல்லை நிலம் என்பது தெள்ளத்தெளிவாகின்றது.At 12:20, along-with the phrase “ஜநகஸுதா ஹ்ருத்ரமண” , பிராட்டியை ஸேவிக்கின்றோம். பிராட்டியின் நாணம் கலந்த புன்னகையும், காருண்யம் தோய்ந்த திருக்கண்களும், பொலிவும், நாணத்தால் சற்றே கீழ் நோக்கும் திருமுகமும், இந்த “பூவின் மிசை நங்கை”யும் சௌந்தரியத்துக்கும், லாவண்யத்துக்கும் எல்லை நிலம் என்பது தெள்ளத்தெளிவாகின்றது. “trailokya rAjyam sakalam sItAyA na ApnuyAt kalAm” என்றபடி அவளுடைய காந்தியும், பொலிவும் ஜ்வலிக்கின்றன.Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsAt 16:40, we hear the phrase “ஜநகஜா ச்ருங்கார ஜலஜ ப்ருங்க” (ஜானகியின் சிருங்காரம் என்னும் தாமரையை வட்டமிடும் வண்டு போன்றவனே). At 16:47, தாமரையிலிருந்து தேனைப்பருகிவிட்டு ஆடும் வண்டு போல் அவன் மெதுவாக அசைந்து, அசைந்து ஆடுகின்றான்! And, at 17:19, அவன் அவளை பின் தொடர்ந்து வட்டமிடுவதை நாம் ஸேவிக்கும் பேறு பெறுகின்றோம்!After the tirukkalyANam, at 26:18, அவள் புது மணப்பெண்ணுடைய நாணத்தோடும், பொலிவோடும், இன்று அலர்ந்த தாமரையின் எழிலோடும் ஜ்வலிக்கின்றாள்! “pumsAm drishTi chitta apahAriNam” and “sAkshAt Manmata Manmata:” என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவனை கைப்பிடித்த உவகையோடு நம்மை கடாக்ஷிக்கின்றாள். அவனோ “மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாளை” கைப்பிடித்தோம் என்று இளம் காளை போல் மிடுக்கோடு சேர்ந்த உவகையுடன் ஸேவை ஸாதிக்கின்றான்! “tulya SIla vayO vRittAm tulya abhijana lakshaNAm | rAghava: arhati vaidehIm tam ca iyam asitEkshaNA ||” என்னும் ஶ்லோகம் நம் மனத்தை வருடுகின்றது.வடுவூரின் நீர் வளம்&நீல வளம், திருக்கோவிலின் பொலிவு, திருக்கல்யாண உத்ஸவம், திவ்ய தம்பதிகள், இவர்களின் அத்யந்த பொருத்தமான அபிமத&அநுரூப தாம்பத்யம், ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமியின் அத்யத்புத கீர்த்தனைகள் — what a stunningly beautiful combination! அந்தமில் பேரின்பத்தை இங்கேயே, இப்பொழுதே, அனுபவிக்கும் பேறு பெறுகின்றோம்!


aDiyEn rAmAnuja dAsan

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ALLi-JUJoG0
To download this video select and copy the above line of video link then you have to paste it in the next window by clicking here