Announcement

Collapse
No announcement yet.

திருப்பாவை பாசுரம் 27

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்பாவை பாசுரம் 27

    கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
    பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
    நாடு புகளும் பரிசினால் நன்றாக
    சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
    ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
    மூட நெய் பெய்து முழங்கை வழிவார
    கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
    கூடார் - தம்மை அடிபணியாதவரை, எதிரிகளை, விரோதிகளை,
    கூடமாட்டோம் என்று இருப்பவர்களை;
    சம்மானம் - பரிசு, அடையும் பாக்கியம், நிலைமை; சூடகம் - கைக்கு ஆபரணம், கைவளை;
    தோள் வளை - வங்கி; தோடு - கம்மல்; செவிப்பூ - மாட்டல், கர்ண புஷ்பம்;
    பாடகம் - காலுக்கு ஆபரணம், பாதகடகம், மற்றொரு வகை கால் அணி;
    வழிவார - வழியும்படி, வழிந்து ஓடும் படி; கூடி - எல்லோரும் ஒன்றாகக் கூடி


    Pasuram 27 - English Translation
    The unconjunctive Thou conquer, Oh! Govinda glorious!
    Praying Thee we acquire our desire;
    Shall we spell out the prize we aspire?
    Fabulous gift praiseworthy by the country;
    Bracelet, shoulder-ring, ear-stud, floral, anklet,
    And several such we enjewel our body entire,
    Would enrobe and follow through
    Cooked milk-rice delicious,
    Steeped in ghee poured off copious
    Which flow down the elbow, Thou amorous!
    Entranced would remain conjunct, consider our damsel.
Working...
X