உங்கள் விளக்கங்கள் ரொம்பவே உபயோகமாயிருந்தன. பஞ்சாங்கத்தில் போட்டிருப்பதன் அடிப்படை கூடத் தெரியாமல் இருப்பது வெட்கப்பட வைக்கிறது. உங்கள் forum ல் பல நல்ல உபயோகமான தகவல்கள் இருப்பதால் எல்லாவற்றையும் தொகுத்து, ஒரு பரந்தாமன் பஞ்சாங்கத்தையும் வைத்துக்கொண்டு அடுத்தமாதம் பால் காய்ச்சி வீடு மாற நாள் பார்க்க முயற்சி செய்கிறேன்.
கர்த்தாவுக்கு தாரா பலன் பார்ப்பது முக்கியம் என்பதால் இத்தனை நாள் அதை மட்டும் பார்க்கத் தெரிந்து வைத்திருந்தேன். உங்கள் பஞ்சாங்கத்தில் எல்லாம் ரெடிமேட் சார்ட் போலவே இருப்பது ரொம்பவும் சுலபமாக உள்ளது. இன்று எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டைக் குறிப்பிட்டு ஒரு நாளில் இன்னின்ன நேரம் இன்னின்ன லக்னம் என்று தெரிந்து கொள்வதும் முடிகிறது.
எனினும் நாமும் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமே, அதனால் லக்னம் பார்ப்பது எப்படி என்று அறிந்துகொள்ள தங்களது இந்த article மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இங்கே, ஸ்தான சுத்தம் எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ளவே வந்தேன். ஆனால் இங்கே பகிரப்பட்ட பல விஷயங்கள் என்னை பஞ்சாங்கம் பார்ப்பதிலும் நேரம் குறிப்பதிலும் ஆர்வம் கொள்ள வைத்துவிட்டது. Google செய்ததில் தேவரீர் தாம்ப்ராஸ் கூட்டத்தில் 2007 ம் ஆண்டு ஆற்றிய ஒரு மணி நேர உரை (audio clip) கிடைத்தது. கிட்டத்தட்ட என் கேள்விகளுக்கான பல விடைகள் அதிலேயே கிடைத்துவிட்டன. அதையும் குறிப்புகளாக எழுத நினைத்துள்ளேன். எழுதியபின் இதே Forumல் தனி த்ரெட்டாக போட்டால் பலருக்கும் பயனாகும் என்றும் நினைக்கிறேன்.
இனி, என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிய விரும்புகிறேன். என்னைப் போல பலருக்கும் சந்தேகமிருந்தால் அவர்களுக்கும் உபயோகப்படுமே என்பதால் இங்கே கேள்விகளாகக் கேட்கிறேன்.
குளிகன் என்றால் அந்த நேரத்தில் செய்யும் காரியங்கள் வர்த்திக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் நல்ல காரியங்களை குளிகன் காலத்தில் செய்யலாம் என்றும் தெரியும். தாங்களே ஆற்றிய உரையில் கூட வேடிக்கையாகக் குறிப்பிட்டீர்கள். குளிகன் நேரத்தில் சொந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம் நல்லது, வாடகை வீட்டுக்கு பால் காய்ச்சி சாப்பிடலாமா? அல்லது குளிகனில் செய்வதால் எப்போதும் வாடகை வீடுதான் ப்ராப்தம் என்றாகுமா?
அடுத்து, ஸ்தான சுத்தம் என்பது கிரகப்பிரவேசம் போன்ற விழா என்றால் பன்னிரண்டாம் இடம் சுத்தமாக இருக்கவேண்டும் என்றுள்ளது. அது (மேலே கூறியபடி வேறு வீடு மாற பால் காய்ச்சும் என் விஷயத்தையே எடுத்துக்கொண்டால்) பால் காய்ச்ச நாள் பார்த்தாலும் ஸ்தான சுத்தம் அவசியமா?
ஸ்தான சுத்தம் என்பது நாம் பார்த்திருக்கும் லக்னத்துக்கு இன்னின்ன இடம் சுத்தம் என்பதாக் கொள்ளவேணும் என்றால் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அந்தந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உட்பட்டு அந்தந்த சமயங்களில் சரிவர வேறு தேதிகள் கிடைக்காதபோது (இந்த ஸ்தான சுத்தம் மட்டும் சரிவரவில்லை என்றால்) அதற்கு பரிகாரம் உண்டா?
மேலே கண்ட என் சந்தேகங்களை நிவர்த்தித்தால் நன்றாக இருக்கும். கேள்விகள் குழந்தைத்தனமாக இருந்தால் க்ஷமிக்கவும்.
ஸ்ரீ:
நன்றி|
குளிகனில் செய்வதால் எப்போதும் வாடகை வீடுதான் ப்ராப்தம் என்றாகுமா?
இதற்கு ஆம் என்ற பதில்தான் பொருந்தும். Replay or once more.
பால் காய்ச்சல் விஷயத்திற்கு
லக்னம், ஸ்தான சுத்தம் இதெல்லாம் தேவையில்லை. ராகுகாலம் எமகண்டம் தவிர்த்தல், நல்ல நாளில், நல்ல ஓரையில் செய்தாலே போறும்.
தெய்வ அனுகூலத்தால் மற்றவை தானே அமையும்.
Bookmarks