Announcement

Collapse
No announcement yet.

Uranga villi dasar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Uranga villi dasar

    Courtesy: Sri.Poova Raghavan


    இராமானுஜர் தன் சிஷ்யர்களுடன் அரங்கனை தரிசித்து விட்டு வரும் வழியில் ஒரு அதிசயமான காட்சியை பார்க்க நேரிட்டது.

    ஆஜானுபாகுவான ஒருவர் அழகி ஒருத்திக்கு ஒரு கையால் குடைபிடித்தபடியும் மற்றொரு கையால் அவளின் கால் தரையில் படாமல் இருக்க மேல் துண்டினை கிழே விரித்தபடியும் சென்றுகொண்டிருப்பதை பார்த்து ஐயோ என்ன இது அழியப்போகும் அழகின் மேல் இவ்வளவு ஆசையாய் இருக்கிறாரே ?

    பாவம் என்று அவர் மேல் இரக்கப்பட்ட இராமானுஜர் அவரிடம் போய், ஐயா நீங்கள் யார்? ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார்?


    அதற்கு அவர் தான் உறையூரை சேர்ந்த மல்லர் என்றும் தனது பெயர் தனுர்தாசர் என்றும், தன் மனைவியை காட்டி இவள் பெயர் பொன்னாச்சி என்றும் சொல்லி , இவளின் அழகால் கவரப்பட்டு அதை பாதுகாக்கவே தான் இவ்விதம் செய்வதாகவும் குறிப்பாக அவளின் கண்ணின் அழகுக்கு இணையாக வேறு ஒன்றை தான் இதுவரை கண்டதில்லை என்றும் சொல்ல, உடனே ராமானுஜர் அவரை திருத்தி பணிகொள்ள விரும்பி , சரி நான் உங்களின் மனைவியின் கண் அழகைவிட அழகான கண் ஒன்றை உங்களுக்கு காட்டினால் அப்போது தாங்கள் என்ன செய்வீர்கள் ? என்று கேட்க, அதை கேட்ட தனுர்தாசர் நீங்கள் அப்படி ஒரு கண்ணை காட்டினால்நான் அதற்கு அடிமையாவேன் என்று சொல்ல உடனே அவரை அரங்கன் திருவுருவம் முன் நிறுத்தி திருப்பாணாழ்வார் அருளியபடி அமலனாதிபிரானை அவருக்கு காட்டிக்கொடுத்தார். அவரும் கேசாதிபாதமாய் அரங்கன் அழகை ஆழப்பருகி அக மகிழ்ந்து ராமானுஜரை பார்த்து தாங்கள் சொன்னது உண்மைதான் இத்தனை நாள் இது தெரியாமல் இருந்துவிட்டேனே என்று வருந்தி தன்னையும் சீடனாக அங்கீகரிக்கும்படி அவரை வேண்டிக்கொள்ள இராமானுஜரும் அவ்வாறே அவரை தன்னுடன் சேர்த்துகொண்டருளினார்.


    எம்பெருமானார்
    மூலமாக எம்பெருமான் அழகை ஆரப்பருகிய அவர் தன் எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு, பொன்ணாச்சியாருடன் இராமானுஜர் பக்கலிலே பரம பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார்.இராப் பத்து காலங்களில் நம்பெருமாள் வீதிஉலா வரும்போது நம்பெருமாள் திருமேனி சிறுது அசைந்தாலும் கூட தன் உயிரையே தியாகம் செய்ய தயாராக உருவிய கத்தியுடன் ஊர்வலமாக முன்னே வருவாராம். அதனால் அவருக்கு பிள்ளை உறங்கா வில்லி தாசர் என்று பெயர் வந்து பின் அதுவே நிலைத்துவிட்டது .


    இராமானுஜர் ( தீர்த்தவாரியின் போது) கோயில் குளத்தில் குளிக்கபோகும் முன் முதலியாண்டான் தோள்மீது தனது கையை ஊன்றிக்கொண்டும் குளித்து முடித்து வரும்போது உறங்காவில்லியின் மீது தன் கையை வைத்துக்கொண்டும் வருவது எம்பெருமானார் ஆண்டானுக்கும், உறங்காவில்லிக்கும் வேறுபாடு காட்டாமை புரியும்.

    உறங்காவில்லி மீது இராமானுஜர் கொண்ட பேரன்பை கண்டு பொறமை கொண்ட சில சிஷ்யர்கள் அவர் மீது குறை பல சொல்லி வந்தனர். இதைக் கண்டு வருந்திய இராமானுஜர், அவர்களும் உறங்காவில்லி தம்பதிகளின் பெருமையை உணரும் வகையில்
    ஒரு நாடகம் நடத்த முடிவு செய்தார்
    . `


    ஒருநாள்

    இராமானுஜர் அவர்களை உறங்கா வில்லி வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அவர் மனைவி பொண்ணாச்சியாரின் நகைகளை கவர்ந்து வருமாறு ஆணையிட்டார் . குருவின் கட்டளை ஏற்று அவர்கள் நகைகளை களவாட சென்றனர் . உறங்காவில்லி வீட்டிற்கு சென்ற அவர்கள் அங்கு படுத்திருந்த பொன்னாச்சியாரை கண்டு ஒரு பக்கத்து கம்மலை கழட்டினர் ,அதனால் உறக்கம் கலைந்த அவர் வந்திருப்பவர்கள் பாகவதர்கள் என்று தெளிந்து அவர்கள் மீது பரிதாபப்பட்டு அடுத்த கம்மலையும் அவர்கள் கவர ஏதுவாக திரும்பி படுக்க முயல அவர் எழுந்துவிட்டாரென்று கருதி வந்தவர்கள் ஓடி விட்டனர் . பின் அவர்கள் இராமனுஜரிடம் சென்று அவரிடம் நடந்ததை தெரிவிக்க அவரும் உறங்காவில்லி வீடு திரும்பி இருப்பார் இப்போது போய் என்ன நடக்கிறது என்று பார்த்துவாருங்கள் என்று சொல்லி அனுப்பினார் .

    அவர்களும் உறங்காவில்லி வீடு நோக்கி வந்தபோது தம்பதிகள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஒளிந்து நின்று கேட்டனர் . உன் ஒருபக்கத்து கம்மல் எங்கே என்று கேட்ட கணவரிடம் பொன்னாச்சியார் சில பாகவதர்கள் வந்து தன் நகைகளை எடுத்துப்போக வந்ததாகவும் ஒருபக்கமாக படுத்திருந்த காரணத்தால் தன் ஒரு பக்க கம்மலை எடுத்த அவர்களுக்கு இரங்கி இன்னொரு பக்கத்தை காட்டிட தான் முயன்றதாகவும் ஆனால் அதற்குள் அவர்கள் பயந்து ஓடிவிட்டனர், என்றும் தெரிவிக்க அதைகேட்டு உறங்காவில்லி அதிக சினத்துடன் மனைவியை நோக்கி ஏன் அவ்வாறு செய்தாய் ? நீ திரும்பி படுக்க முயன்றதால் அல்லவா அவர்கள் எச்சரிக்கையாகி ஓடினர். நீ அப்படியே இருந்திருந்தால் அவர்களும் எல்லா நகைகளையும் எடுத்து போய் இருப்பார்கள் அல்லவா ? பாகவதர்களுக்கு பயன்படாத பொருள் நம்மிடம் இருந்து என்ன பயன் ? அவர்களுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை! ஆகையால் நீ செய்வது தவறு என்று சொன்னார், வாசலில் ஒளிந்து கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யர்கள் வெட்கமடைந்து உறங்காவில்லி தம்பதிகளின் உயர்ந்த குணங்களை புகழ்ந்து ,பாகவர்களின் மேலும் அவர்கள் தம் பரிவினை கண்டு அதிசயத்து ! இதனாலன்றோ எம் எம்பெருமானார் இவரை கொண்டாடுகிறார் என்று புரிந்துகொண்டனர்.


    மேலும் இராமனுஜரிடத்திலும் உறங்காவில்லியிடமும் மன்னிப்பு கேட்டுகொண்டு பாகவதர்களுக்குள் வேறுபாடுகளே இல்லை ! எல்லாரும் இறைவனின் அடியார்களே என்ற உண்மையையும் அன்றுமுதல் உணர்ந்தனர் .
Working...
X