டியர் டாக்டர் சடகோபன் ஸ்வாமின்,

அந்த நாராயணனை கேட்கிறார். என்னவென்று? யார் யாருக்கோ நாள் கொடுத்து
இருகிறாய். எனக்கு எப்போது உன் திருவடியை அடையும் நாள் இது என்று.
நான் யாருக்கு நாள் குறித்து கொடுத்தேன் என்று கேட்கிறார் நம்மாழ்வாரை.
அந்த சீதைக்கு பத்துமாதம் என்றும், பரதனுக்கு பதினான்கு வருடம் என்றும்
சொல்லி இருகிறாய் என்றாராம்.

இதை வைத்தே ஒரு பாசுரம் கீழே பார்ப்போமா.?

நாளேல் அறியேன் எனக்குள் என நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலைச்சோலைகள் சூழ் திருநாவாய்
வாளேல் தடங்கண் மடப்பின்னை மணாளா திருவாய்மொழி 9 .8 .4

இதன் அர்த்தமாவது.
ஆத்மா உள்ளவரை கைங்கர்யம் பண்ணும்படி அனுக்ரகிக்க பெற்ற நான்
திருநாவாயில் நப்பின்னை பிராட்டியோடு கூடி இருக்கிற இருப்பிலே
அடிமைச் செய்யப் பெரும் நாள் என்றோ? அறிகிலேன் என்கிறார்.
நான் பிரிந்து துக்கப்படவேண்டிய நாள்கள் தான் எந்தனயோ என்கிறார்.

என்னே ஆழ்வாரின் ஆதங்கம், அவனிடம் உள்ள பக்தி சரத்தை.
இது போன்று பல இடங்களில் ஆழ்வார்கள் அவனிடம் நேரிடையாக
பேசி இருக்கும் இடங்கள் பல இருக்கின்றது என்றால் அது மிகை ஆகாது.

முன்னைவண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரிரே பெரிய திருமொழி 4 .9 .8

ஆசை வழுவா தேத்தும் எமக்கிங் கிழுக்காய்த்து அடியோர்க்கு
தேச மறிய உமக்கே யாளாய் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே பெ . திருமொழி 4 . 9 .4

மேலே கூறிய பாசுரம் திருமங்கை மன்னனுக்கு இந்தளூர் பெருமாள்
காட்சி கொடுக்காமல் போனபோது பாடினது என்று அறிக.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால் அவர்கள்
எப்படி பேசினாலும் அவர்களுக்கு காட்சி கொடுக்கவே ,அவர்கள்
மூலம் நம்மை இரட்சிக்கவே அவன் பாடு படுகிறான் என்று

வாழ்க ஆழ்வார்கள்

அடியேன்,
நொச்சலூர் சேஷாத்ரி சம்பத்.
Nochalur Seshadri Sampath

Click & Send Email to this person