Announcement

Collapse
No announcement yet.

அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்

    காலையில் நடைப்பெயற்சி/ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதை பார்த்திருப்போம். பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த இந்த புல்லைப்பற்றி ,அதன் மருத்துவ குனங்களைப்பற்றியும் கொஞ்சம் அறிவோமா?
    வரதராஜன்


    அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்


    நோயற்ற வாழ்வு வாழ “சினோடன் டாக்டிலோன்“ (Cynodon dactylon)

    என்னங்க ஒன்றும் புரிய வில்லையா ? நாம் காணும் இடமெல்லாம் வளர்ந்து, அற்புத மருத்துவ குணம் கொண்ட “அருகம்புல்“ தாங்க. அதன் தாவிரவியல் பெயர்தான், “சினோடன் டாக்டிலோன்“. வடமொழியில் “தூர்வா“ என்றழைக்கப்படும் அருகம்புல்லின் மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம்.

    பலவீனமான உடல்வாகு கொண்டவர்களுக்கும் – குறிப்பாக குழந்தைகளுக்கும் அருகம்புல் ஒரு வரப்பிரசாதம். இளம் அருகம்தளிரை மைய அரைத்து, பசும்பாலில் விட்டு சுண்டக்காய்ச்ச வேண்டும். தினமும் இரவில் இதை அருந்திவர உடல் பலம் பெரும்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகிறது. சுத்தபடுத்தப்பட்ட அருகம்புல்லை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவேண்டும். தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் அந்த அரைத்த விழுதை தண்ணீரில் கலந்து பருகி வர நாளடைவில் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

    அது மட்டுமின்றி –அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை விட நீளமானது. உதாரணம்-(ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், மலச்சிக்கல், தோல் வியாதி, பல் ஈறு கோளாறுகள்,சைனஸ், சளி, மூட்டுவலி , கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் புற்று நோய்)

    அருகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும்.*


    வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) ஆகிய முத்தோடங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், இரத்தப் பித்தம், சிறு விடப் பூச்சிகளின் கடி ஆகியவைகளுக்கு நல்லதொரு மருந்து. இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.

    1. அருகம்புல் முழுச்செடியும் மருந்தாகப் பயன் அளிக்கிறது. சிறுநீரில் இரத்தம் கசிதல், சீறநீரகங்களில் கட்டிகள் தோன்றுதல், மேகம், வெட்டை, பால்வினை நோய்கள், எய்ட்ஸ், கிட்னி ஃபெயிலியர் போன்ற நோய்களுக்கு மூலிகை மருத்துவர்கள் அருகம்புல்லைத் தருகின்றனர்

    2. உயிர் குடிக்கும் நோய்களில் மாமருந்தாகப் பயன்படுத்துகின்றார்கள். நீல அருகம்புல் சளி, பித்தம், இரத்த நோய்கள், அக்கி என்னும் (HERPES) தோல் நோய், நாக்கு வறட்சி, எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்குகிறது.

    3. யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

    4. அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்

    5. உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.

    6. வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

    7. நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

    8. நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

    9. அருகம்புல் சாறை தயாரிப்பது எப்படி?

    1. வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைபடுத்த வேண்டும்.*

    2. பின்னர் அருகம்புல்லுடன் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து, (தேவைப்பட்டால்) துளசி, வில்வம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுக்க வேண்டும். வீட்டில் மிக்ஸி இருப்பின், அதைப் பயன்படுத்தியும் சாறு தயாரிக்கலாம்.

    3. காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவில் இதை பருகலாம்.

    4. உடல் இளைக்க அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.*

    5. அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.*

    6. அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.*

    7. அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.


Working...
X