சுமார் ஆயிரம் மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று இன்று பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அந்த விண்கல் மணிக்கு 37 ஆயிரம் கிமீ வேகத்தில் பூமியைக் கடக்கும் என்றும் கூறப் பட்டுள்ளது.


இந்த விண்கல்லுக்கு 2014 ஒய்.பி.35' என்று பெயர் சூட்டப்பட்டுள் ளது. இந்தக் கல் பூமியின் 28 லட்சம் மைல்களைக் கடந்து பய ணிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


இந்தக் கல் முதன்முதலாக கடந்த ஆண்டு இறுதியில் கேட்ட லினா ஸ்கை சர்வே' மூலம் அடை யாளம் காணப்பட்டது.


சிறியதும் பெரியதுமான விண் கற்கள் அவ்வப்போது பூமியைக் கடந்து செல்வது வாடிக்கையாக நிகழ்வதுதான் என்றாலும், இந்த அளவு பெரிய விண்கல் பூமியைக் கடப்பது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


37 ஆயிரம் கிமீ வேகத்தில் வரும் இந்த விண்கல் பூமியில் மோதி னால் ஒரு நாட்டையே அழித்துவிடக் கூடிய அளவுக்கு அதன் தாக்கம் இருக்கும். மேலும் பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 1908-ம் ஆண்டு சைபீரியாவில் டுங்குஸ்கா எனும் பகுதியில் விழுந்த விண்கல்லால் ஏற்பட்ட பாதிப்புகளை விட இந்தப் புதிய விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.


டுங்குஸ்காவில் விழுந்த விண் கலம் 50 மீட்டர் ஆழத்துக்குப் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியதுடன் சுமார் 8 கோடி மரங்களை அழித்தது. தவிர, ரஷ்யாவில் 5 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வையும் ஏற்படுத்தியது.


இதுகுறித்து பக்கிங்ஹாம்ஷைர் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியரான பில் நேப்பியர் கூறும்போது, "டுங்குஸ்கா போன்ற நிகழ்வுகள் எல்லாம் சிறியது தான்.


ஆனால் அவை ஏற்படுத்திய பாதிப்புகள் உண்மையில் மிகவும் ஆபத்தானவை. அன்று நாம் இதுபோன்ற விண்கற்களை அடையாளம் கண்டுகொள்ள வில்லை. எனவே நாமும் பாதிப்பு களைச் சமாளிக்க தயாரிப்பின்றி இருந்தோம்.


ஆனால், 2014 ஒய்.பி.35' போன்ற விண்கற்கள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. விண்கற்கள் பூமியில் மோதுவது அரிய நிகழ்வுதான் என்றாலும், அவை ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக எடைபோட்டு விட முடியாது" என்றார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends