துளசியை ஒரு தெய்வீகச் சின்னமாக எண்ணி
வழிபடுகிறோம்


. துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவக் குணங்களை கருத்தில் கொண்டுதான் தெய்வீகச் சின்னமாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅரி, ராம துளசி, கிருஷ்ண துளசி என்றும் துளசி அழைக்கப்படுகிறது. துளசியில் நற்றுளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி, கல்துளசி, நாய்த்துளசி, முள் துளசி எனப் பலவகை உண்டு. இதன் சுவை கார்ப்பு.

நற்துளசி: கபத்தைப் போக்கும். வயிற்றுவலி குணமாகும். தாகத்தைப் போக்கும். மந்தத்தை நீக்கும். சுவையின்மையைப் போக்கும்.

நாய்த்துளசி: கபத்தை நீக்கும். இருமல், சளி, ஜன்னி போன்றவற்றைப் போக்கவல்லது.

நிலத்துளசி: தாய்ப் பாலால் குழந்தைகளுக்கு வரும் மந்தத்தைப் போக்கும். கனச்சூடு நீக்கும். கபசுரம், பித்த சுரம், குளிர் சுரத்தைப் போக்கவல்லது.

கல்துளசி: இது கட்டி, வண்டுக்கடி, பூச்சிக்கடி போக்கும்.

முள்துளசி: வெட்டுப்புண், கபம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.

செந்துளசி: விஷத்தை முறிக்கும். கபத்தைப் போக்கும். சைனஸைப் போக்கவல்லது.

கருந்துளசி: இருமல், இழைப்பு குணமாகும். செருமல் நீங்கும். வயிற்றுப் புழு நீங்கும். மார்புச் சளி குணமாகும்.

துளசியின் மருத்துவப் பலன்கள்:

* அலர்ஜியினால் வரும் ஒவ்வாமையை நீக்குகிறது.
* நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
* இதன் இலை சுவாசப் பாதையில் உள்ள தொற்றுநோய்க் கிருமிகளை செயலிழக்கச் செய்கிறது.
* ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
* வயிற்று வலியைப் போக்குகிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
* ஆஸ்த்துமாவிற்கு தீர்வாக உள்ளது.
* சுரத்தைப் போக்கும் சஞ்சீவி.
* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோயைப் போக்கும்.
* கொசுக்களை ஒழிக்க துளசி புகைச் சிறந்தது.

எப்படிப் பயன்படுத்துவது?

* துளசி இலையை நீர் சேர்த்துக் காய்ச்சி ஆவி பிடிக்கச் சுரம் நீங்கும்.
* மனச்சோர்வு நீங்க, தினமும் காலையில் 15 துளசி இலைகளை பருப்புடன் சேர்த்து மூன்று மாதம் அருந்த மனச்சோர்வு நீங்கி உடல், உள்ளம் பலம் அடையும்.
* துளசி, சுக்கு, பனை வெல்லம், பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் டீயை அருந்த சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாகும்.
* துளசி வேரைப் பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும்.
* தேள் கடிக்கு துளசிச் சாறுடன் வேப்ப இலைச்சாறு, மிளகு சேர்த்து அருந்தி, கடிவாயில் பூச நஞ்சு முறிவு ஏற்படும்.
* துளசிச் சாறு, இஞ்சிச் சாறு சம அளவு எடுத்து அதனுடன் மிளகுத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், நெஞ்சு சளி பிரச்னைகள் அகலும்.