Announcement

Collapse
No announcement yet.

கண்ணதாசனின் பொன் மொழிகள் ....

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கண்ணதாசனின் பொன் மொழிகள் ....

    courtesy:Sri.Pattabiraman
    கண்ணதாசனின் பொன் மொழிகள் ....


    * பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட உண்மையால் அறைவதே மேலானது.


    * பிறருக்குப் பயன்படுங்கள். பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள்.


    * முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்tiruvகு நடுத்தர வயது.


    * முன்னேற்றம் என்பது "இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்" என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம்.


    * உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள்.


    * நான்மறையைக் கற்றவனல்ல ஞானி. 'நான்'மறையக் கற்றவன் தான் ஞானி.


    * உறவால் வரும் அன்பைவிட அன்பால் வரும் உறவே புனிதமானது.


    * விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல.


    * மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும்,
    மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீதிபதியாகவும் இருக்கிறான்.


    * பலமான மழை பெய்யும்போது லேசான மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டாதே. உறுதியான குடை வேண்டும் என்று வேண்டு.


    * எல்லா ஊரும் நம் ஊரே ; எல்லா நாடும் நம் நாடே.


    * அனைவரும் நம் உறவினர்.


    * தீமைக்கும் நன்மைக்கும் நாமே காரணம்.


    * பெரியோர் என யாரையும் வியந்து போற்றாதீர்.


    * சிறியோர் என யாரையும் இகழாதீர்.


    * தன்னலமாய் வாழாதீர்.


    * பிறர் நலம் பேணி வாழ்வீர்.


    * துன்பம் கண்டு துவளாதவரே வெற்றி காண்பார்.


    * உள்ளம் உயர்வானால் வாழ்வும் உயரும்.


    * வெற்றி கண்டு மயங்காதீர்.


    * வாழ்க்கைத் துணை என்றும் ஒருவரே.
    * காற்று, உணவு, மொழி முதலியவற்றில் தூய்மை பேணுவீர்.


    * சுற்றுப்புறத் தூய்மையே நலவாழ்விற்கு அடிப்படை.


    * உண்மை பேசி உள்ளத்தைத் தூய்மை ஆக்குவீர்.


    * அன்பே வாழ்வின் அடிப்படை.


    * அருள் வாழ்வே அறவாழ்வு.


    * நல்லது செய்யாவிட்டாலும் தீயது செய்யாதே.


    * சான்றோன் ஆக்குதல் பெற்றோர் கடமை.


    * நல்லொழுக்கம் தருதல் ஆளுவோர் கடமை.


    * செல்வம் அழியும் ; அறிவு அழியாது.


    * துன்புறுத்துபவர் துன்பம் காண்பார்.
    * செல்வம் பிறருக்கு உதவவே.


    * தானும் பயன்படுத்தாத பிறருக்கும் உதவாத செல்வரை விட ஏழையே செல்வந்தன்.


    * செய்க பொருளை.


    * அறவழியில் பொருள் ஈட்டுக.


    * பிறரை உயர்த்த நீ உயர்வாய்.


    * பிறர் வாழ நீ வாழ்வாய்.


    * மறதியை மற.


    * விலையை மிகுதியாகப் பெறாமல் பொருளைக் குறைவாகக் கொடுக்காமல் வாணிகம் செய்க.


    * குறுக்கு வழியில் பணம் தேடாதே.
Working...
X