Announcement

Collapse
No announcement yet.

Names of tamil months with reasons -periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Names of tamil months with reasons -periyavaa

    courtesy: Sri.
    Akhila Shishir Krishnaswamy


    தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன!- காஞ்சி மஹா பெரியவாள்

    ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி ,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாதம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாதத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும்.
    1. சித்திரை மாதம்(மாஸம்)
    சித்திரை மாஸத்தில் சித்ரா நக்ஷத்திரத் தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை மாஸம் என்றானது

    2. வைகாசி மாதம்(மாஸம்)
    விசாக சம்மந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

    3. ஆனி மாதம்(மாஸம்)
    அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ.அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம் ஆனுஷீமாஸம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

    4. ஆடி மாதம்(மாஸம்)
    ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின்.பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி.இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.

    5.ஆவணி மாதம்(மாஸம்)
    ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம்.அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும்.இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.

    6. புரட்டாசி மாதம்(மாஸம்)
    ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு.பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று.அஷ்ட என்பது அட்ட என திரிந்தது.உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று.இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.

    7. ஐப்பசி மாதம்(மாஸம்)
    ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம்.அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

    8. கார்த்திகை மாதம்(மாஸம்)
    க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்திகை.இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

    9. மார்கழி மாதம்(மாஸம்)
    மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று.இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

    10. தை மாதம்(மாஸம்)
    புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

    11. மாசி மாதம்(மாஸம்)
    மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.

    12. பங்குனி மாதம்(மாஸம்)
    பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.
    இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாஸப்பெயர்களாக அமைந்துள்ளன.

    விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
    விழுப்பொரு ளே!உன் தொழுப்படி யோங்கள்
    மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
    வண்திருப் பெருந்துறை யாய்! வழி யடியோம்
    கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
    கடலமு தே! கரும் பேவிரும் படியார்
    எண்ணகத் தாய்! உல குக்குயி ரானாய்!
Working...
X