Announcement

Collapse
No announcement yet.

Story of Dhanvantari

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Story of Dhanvantari

    Courtesy:Sri.S.Ramaswamy


    தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ?

    அவர் ஒரு தேவர். தேவர்களும்அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது
    ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி.
    அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார்.வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை
    வணங்கி நின்றார். அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர்சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம்
    அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத்தருமாறு கேட்டதற்கு
    விஷ்ணு கூறினார், ''நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகேபிறந்ததினால்
    உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை
    என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற
    அந்தஸ்த்துகிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின்
    உன்னை உலகம்ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் " எனக் கூறியப் பின் மறைந்து போனார்.
    வெகு காலத்துக்குப்பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின்
    மகனாகப் பிறந்தார்.அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார்.
    ஒருமுறை தன்வந்தரியும்அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர்.
    வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப்
    பொழிந்தது. ஆகவேகோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி
    தூர எறிந்தனர். அதைக்கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன்
    யுத்தம் செய்தது.


    வாசுகி விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின்அனைத்து சீடர்களையும்
    விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரிஆயுர்வேத மருந்து
    தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சி அடைந்தவர்களை எழச் செய்தார். அதைக் கேட்ட
    வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய
    வைக்கஅப்போதும் தன்வந்தரி தமது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க
    வைத்தார். ஆகவேபாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது
    என்பது. மானச தேவிஅவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால்
    படைக்கப்பட்டவர், அவர்தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு
    தாமே அழைத்துச் சென்றனர். அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய
    ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக்கொள்ள தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே
    ஆயுர்வேத மருத்துவத்தின்அதிபரானார். விஷ்ணு தந்த வரமும் பலித்தது. தன்வந்தரி தனது கையில்
    அமிருதக் கலசத்தை வைத்துக்கொண்டு உள்ளவாறு காட்சி தருகின்றார்.
    ஸ்ரீரங்கத்து ரங்கஸ்வாமி ஆலயத்தில் அவருக்கு தனி சன்னதிஉள்ளது.
    உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்தரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.

    கேரளாவிலும் தன்வந்திரி பகவானுக்கு கோவில் அமைந்துள்ளது :
Working...
X