Announcement

Collapse
No announcement yet.

அஷ்டபதிகளை பாடிவந்தாலே அனைத்தும் நடக்க&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அஷ்டபதிகளை பாடிவந்தாலே அனைத்தும் நடக்க&#

    Courtesy:Sri T.K.Moorthi.from my mail inbox:
    பதி என்றால் புருஷோத்தமன். அதாவது புருஷன் ஆவான்.
    இந்த உலகத்தில் ஒரே ஒரு ஆண்தான் அவனே இந்த கிருஷ்ணன்.
    மீதி அனைவரும் பெண்களே ஆகும். இந்த உலகத்தில் ஆண் பெண்
    என்று இருக்கிறபடியால், அது ஒரு மாயை ஆகும்.
    உண்மையில் புருஷன் ஒருவனே. இந்த தத்துவத்தை புரிய வைக்கவேண்டும்.
    பாரத தேசத்திலே, ஒரிஸ்ஸா மாநிலத்திலே,தலைநகர் புவனேஸ்வரில்
    இருந்து சுமார் அறுபது மைல் தொலைவில் அமைந்துள்ளது .புரி க்ஷேத்திரம்.
    இங்கு கிருஷ்ணன் ஜகன்னாதராக இருக்கிறார்.
    இந்த கோயிலுக்கு சில மைல் தொலைவில் ஒரு கிராமத்தில்,
    ஒரு அந்தணர் இருந்தார்.இவர் பெயர் ஜெயதேவர் என்பதாகும்.
    இளம் வயதிலேயே வறுமை, பிரிவு போன்ற அனைவருக்கும் உள்ளதுபோல்
    சிரமங்கள். இவர், வைதீகத்தில் உள்ள அனைத்தும் படித்து சாஸ்திரிகளாக
    பணியாற்றிவந்தார்.
    ராமாயணம் பாகவதம்,உபநிஷத் வேதம் எல்லாம் அத்துப்படி ஆகும்
    இவருக்கு.யாரிடமும் அதிக காசு பெறாமல் தனக்கு தேவையானதை மட்டும்
    தினமும் பெற்று வாழ்ந்து வந்தார். அனாவசியமாக யாரிடமும் அதிகம் வாங்குவதோ,
    அல்லது சேமித்து வைப்பதோ இவரிடம் கிடையாது.
    வேலைகளுக்கு சென்று கொண்டு வரும்போது சில நேரம் ஓய்வு நேரத்தில்,
    கிருஷ்ணனிடம் பக்தி பரவசமாக தன்னை உணர்ந்து, பூஜை செய்துகொண்டு
    வாழ்ந்துவந்தார்.
    அந்த சமயத்தில்தான், அவருக்கு தோன்றியது, எதாவது ஒரு காவியம்
    செய்யவேண்டும் என்று. கிருஷ்ணா சங்கல்பத்தினால் இதை அதிகம் இவர்
    ஈடுபாடுகொண்டபோது, சாஸ்திரிகள் வேலைக்கு அடிக்கடி செல்லமுடியாத நிலையில்
    வந்துவிட்டார். காசு இல்லாததால் வறுமை என இருந்தாலும்,
    அதை பற்றி அவர் கவலைப்படவில்லை


    இவ்வாறு ஜெயதேவர் அன்றாடம் தனது கடமைகளை சரிவர செய்துவந்தார்.
    இவரது வீடு, மண் சுவரால் நான்கு பக்கமும் கட்டி சைடு மற்றும்
    மேல்பாகம் கூரையால் மேயப்பட்டு இருந்தது. ஒரே ஒரு ஹால் போல் அந்த வீடு.
    இதில்தான் அவர் வாழ்ந்தார்.


    காசு சேர்த்து வைக்க மாட்டார். அன்றாடம் தேவை என்னவோ அதை மட்டுமே வாங்கிக்கொள்வார்.
    அதுவும் தக்ஷினையாகத்தான்.சும்மா வாங்கமாட்டார்.


    அப்பா அம்மா சிறுவயதிலேயே இல்லாமல் போனதால், இவருக்கு சொந்தபந்தங்களும்
    அவ்வளவாக அடரு கிடையாது. திருமண நினைப்பே இன்னும் வரவில்லை.


    அப்போது, இவர், கிருஷ்ணனின் பிருந்தாவன லீலைகளை கிரந்தமாக
    எழுத ஆசைபட்டார். இது மனித வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாக
    அமையவேண்டும் என்று எண்ணி எழுத ஆரம்பித்தார்.


    பதி என்றால் புருஷோத்தமனான கிருஷ்ணன் என்பதாலும்,
    ஒவ்வொரு பாட்டும் எட்டுவரிகளிலே இருக்கவேண்டும் என்று நினைத்ததால்,
    அஷ்டம் = எட்டு , பதி=கிருஷ்ணன் என்பதால் இதற்கு அஷ்டபதி
    என்று பெயர் வைத்தார்.


    பகவான் புருஷோத்தமனை பற்றி ஒரு காவியம் எழுதுவதற்காக
    தன்னை தயார் படுத்தினார். நியமங்களுடன் நித்திய விரதம் இருந்து,
    கண்ணனே கதி என்று நினைத்து எழுத ஆரம்பித்தார்.


    இந்த நேரத்தில் ஒரு நாள் காலை அந்த ஊரில் இருக்கும் வேறு ஒரு
    அந்தண குடும்பத்தை சேர்ந்தவர்,ஜகன்னாதர் ஆலயத்துக்கு சென்று
    தனது பெண்ணிற்கு திருமணம் நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
    எதோ ஜன்மாந்திரத்தில் அவர் புண்ணியம் செய்திருந்தபடியால்,
    அன்று இரவு அந்த அன்பரின் கனவில் வந்து, உனது பெண்ணிற்கு
    ஏற்ற மாப்பிள்ளை இங்கு இருக்கிறார் என்று ஜெயதேவரை போய்
    பார்க்கும்படி சொன்னார்.


    அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்பதால் நம்பிக்கை கொண்டு,
    ஜெயதேவரை தேடி கண்டுபிடித்து, தனது மகளை நீங்கள் திருமணம்
    செய்துகொள்ளவேண்டும் என்று நடந்தவைகளை விடாமல் எடுத்து சொன்னார்.


    ஜெயதேவர் ஒப்புக்கொள்ளவில்லை.எதனால் என்றால், முதலிலேயே
    அவருக்கு அதில் விருப்பம் இல்லை என்பதாலும், அடுத்து,
    அந்த இறைவன் தன்னிடம் எதுவும் கூறவில்லை என்பதனால்
    மறுத்துவிட்டார். கோயில் குருக்கள் சொல்லியும் கேட்கவில்லை.


    பிறகு அந்த அந்தணர் அங்கிருந்து தனது மகளை அழைத்துக்கொண்டு
    செல்லும் சமயத்தில் அந்த பெண் வர மறுத்துவிட்டாள்.
    நான் இங்கேயே இருந்து ஜெயதேவர் ஒப்புக்கொள்ளும் வரை
    நான் இந்த இடத்திலேயே இருப்பேன். கடவுள் விட்ட வழி என்று
    தனது தகப்பனாருடன் செல்ல மறுத்துவிட்டாள்.


    வழக்கம்போல் ஜெயதேவர் தனது வீட்டில் இருக்க, இந்த பெண்
    அந்த தெருவிலேயே இருந்தபடியால், இதை ஜெயதேவர் கவனிக்கவில்லை.
    எதனால் என்றால் அவருக்கு அதில்தான் நாட்டமே இல்லையே அதனால்தான்.


    இப்போது இந்த பெண் தினமும் அதிகாலையில் ஜெயதேவர் எழுந்திருக்கும்
    முன்பே, தெருவில் உள்ள அந்த பெண், ஜெயதேவர் வீட்டு வாசலை கூட்டி,
    பெருக்கி மொழுகி, கோலம் போட்டு விடுவாள்.


    காலை ஜெயதேவர் இதை பார்த்துடன் ஆச்சர்யபட்டுபோனார் .
    யார் இந்த வேலையை செய்தது. என்று. இப்படியே இரண்டு,
    மூன்று நாட்கள் செல்ல, ஒரு நாள் அதிகாலையில் வாசலுக்கு
    வந்தபோது இந்த பெண் வேலை செய்வதை கண்டு திடுக்கிட்டு,
    அந்த பெண்ணை கடிந்து கொண்டார். உங்கள் அப்பாவீட்டுக்கு
    அன்றே போகசொன்னேனே .எனது மானம் என்ன ஆகும்.
    எதற்காக நீ போகாமல் இங்கு என்ன செய்கிறாய் என்று
    கோபித்துக்கொள்ள, அதை பத்தி அந்த பெண் கவலைபடாமல்,
    ஜகன்னாதரின் உத்தரவை என்னால் மீற இயலாது .அதனால்,
    நான் உங்கள் வீட்டுக்கு வரவில்லையே. வாசலை சுத்தம்தானே
    செய்கிறேன் என்று பதில் சொல்ல, இப்படியே இரண்டு நாட்கள் சென்றது.


    ஒரு நாள் ஜெயதேவர், கிருஷ்ண பரமாத்மாவின் விருப்பம் அதுவானால்
    அதை ஒப்புக்கொள்வதாக சொல்லி, பிறகு பெரியவர்களுக்கு தகவல் கொடுத்து
    ஊரறிய , அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார் .
    அந்த பெண்ணின் பெயர்தான் பத்மாவதி என்பதாகும்.


    திருமண வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கும் நாட்களில்,
    தினமும் ,தனது ஓய்வு நேரத்தில் பாட்டுக்களை எழுதி பிறகு
    அதற்க்கு அபிநயம் செய்வார். அப்படி செய்யும்போது பத்மாவதியும்
    கணவருடன் முழு ஒத்துழைப்புடன் தானும், அந்த பாட்டுக்கு ஏற்ப,
    நடனம் ஆடுவாள்.


    இதனால் ஜெயதேவருக்கு பத்மாவதியின் மேல் முழு திருப்தி நிலவியது.
    இப்படியா நாட்கள் போய்கொண்டிருக்கும்போது ஒரு நாள், ஜெயதேவர்
    பதினெட்டு பாட்டு எழுதிவிட்டார். அடுத்தது எழுதும்போது, அவருக்கு
    சில கவிதைகள் எழுதி அதை திரும்ப படித்து பார்க்கையில் அது
    தவறாக இருப்பதை உணர்ந்தார். அதாவது , ராதையின் காலை
    கிருஷ்ணன் தனது தலையின் மேல் வைத்தான் என்று எழுதிவிட்டார்.
    இது இவருக்கு உடன்பாடு இல்லை.
    சரி என்று சொல்லிவிட்டு ,ஒலைசுவடியையும் எழுத்தாணியையும்
    அப்படியே வைத்துவிட்டு, பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று,
    முந்தைய எழுத்துக்களை நீக்கம் செய்துவிட்டார்.
    வாராவாரம் எண்ணெய் தேய்த்து குளிப்பது அவரது வழக்கம் என்பதால்
    பத்மாவதியை கூப்பிட்டு குளித்துவிட்டு வந்து பிறகு எழுதுகிறேன்
    என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றுவிட்டார்.


    இந்த நேரத்தில்,பத்மாவதிக்கு புண்ணியம் இருந்ததால்,
    ஒரு சம்பவம் நடைபெறுகிறது.அதாவது, எண்ணெய் தேய்த்துக்கொண்ட
    உடம்புடன் குளிக்கசென்றவர், மறுபடியும் வந்து, எழுத்தாணியை
    கேட்டு எழுதுகிறார். மறுபடியும் சென்று விட்டார்.
    இந்த இடத்தை மறக்காமல் படியுங்கள்.
    பிறகு குளித்துவிட்டு வந்தவுடன் பூஜைகளை முடித்துவிட்டு,
    மறுபடியும் எழுதுவதற்காக வந்தார்.
    இப்போது அவர் திடுக்கிட்டார், எதனால் என்றால் எந்த வரி
    அபசகுனமாக உள்ளது என்று அழித்துவிட்டு பிறகு எழுதலாம்
    என்று சென்றாரோ, அதே வரி அங்கு எழுதியிருப்பதை கண்டார்.
    மனைவியை கூப்பிட்டு , நான் குளிக்க சென்றாபோது யார் இதில்
    எழுதினார் என்று கேட்டார். பத்மாவதி, நீங்கள் தானே குளிக்க சென்றவர்
    பாதியில் வந்து மறந்துபோய்விடும் என்பதால் எழுதிவிட்டு சென்றீர்கள்
    என்றாள்.
    என்ன உளறுகிறாய். குளிக்க சென்றவன் நான் ஏன் பாதியில் வந்து
    எழுதுகிறேன் எனக்கு என்ன பைத்தியமா என்று கேட்க இவர்களுக்கு
    ஒன்றும் புரியவில்லை.


    அப்போதுதான் அவர் புரிந்துகொள்கிறார். கிருஷ்ணன் இந்த எழுத்தை
    விரும்புகிறான் போல அதனால் அவனே வந்துதான் ஜயதேவர் உருவில் வந்து
    எழுதி இருக்கிறான் என்று இவர்களுக்கு ஆனந்தம் பொங்க கோயிலுக்கு
    சென்று வழிபட்டனர். கனவில் வந்து சுவாமி சொன்னான்.
    எனக்கு அதுவே பிடித்து இருக்கிறது என்பதால்தான் நானே வந்து எழுதினேன்
    என்று சொல்ல ஆனந்த கண்ணீர் பெருகி இரண்டு பேருக்கும்
    மேலும் பக்தி அதிகம் ஆனது.


    இதுபோல் சுவாரஸ்யமாக போய்கொண்டிருந்த நேரத்திலே ஒரு
    சிறு சோதனை வந்தது. அதாவது இவர் எழுதிய பாட்டை கோயிலில்
    கொண்டு சென்று அங்கே அரங்கேற்ற வேண்டும் என்கிற ஆசையில்
    சென்றபோது, அந்த கால வழக்கப்படி , ராஜாவிடம் ஒப்புதல் பெறவேண்டும்
    என்பதால்,இந்த செய்தியை தெரிவித்தார்கள்.


    இந்த நேரத்தில்தான், ராஜாவும் இதுபோல் கிருஷ்ணரின் பெயரில் பாட்டு
    எழுதியிருப்பதாக தெரிந்துகொண்டார்கள். என்னதான் ஜெயதேவர் எழுதினாலும்,
    ராஜாவிற்கு கட்டுப்பட்டவர் என்பதால், ராஜா எழுதியதையும் கோயிலுக்கு
    கொண்டு வந்தார்கள்.
    இப்போது குருக்களுக்கு தர்ம சங்கடமாக போய்விட்டது. என்ன செய்வது.
    நடு நிலையாக இருக்கவேண்டுமே.ஆகையால் தீர்ப்பை ஜகன்னாதனே
    சொல்லிவிடட்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.
    ராஜாவிடமும் கெட்டபெயர் வந்துவிடக்கூடாது. பிராமண சாபமும்
    வந்துவிடக்கூடாது.ஆகவே கோயில் குருக்கள் ஒரு யோசனை சொன்னார்.
    அதை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.


    அதாவது,ஜெயதேவர் எழுதியதை ஒரு பக்கமும் அதற்க்கு பக்கத்திலேயே
    ராஜா எழுதியதையும் தனித்தனியாக, கோயிலில் உள்ள கர்ப கிரகத்திற்குள்,
    இரண்டையும், கிருஷ்ணரின் இரண்டு காலுக்கு பக்கத்தில் தனித்தனியாக
    வைத்துவிட்டு, கோயிலை பூட்டி சீல் வைத்துவிட்டு வெளியேறினார்கள்.


    இரவு ஜெயதேவருக்கும், ராஜாவிற்கும் தூக்கமே வரவில்லை.
    அந்த காலத்து ராஜாக்கள் சிலபேர் பக்தியுடன் நேர்மையானவர்களாக
    இருந்தார்கள் ஆகையால் அதிக சிரமம் கிடையாது.


    மறுநாள் காலை நடை திறக்க அர்ச்சகர் வந்துவிட்டார். பொதுமக்கள்,
    ஜெயதேவர், ராஜா அனைவரும் ரெடி . கோயில் நடை திறக்கபோகிரார்கள்.
    என்ன நடக்குமோ என அனைவரும் நினைக்கின்ற வேளையில், ராஜா
    எழுதிய மந்திரங்கள், வைத்த இடத்திலேயே இருக்க, ஜெயதேவர் எழுதிய
    அஷ்டபதி மட்டும், கிருஷ்ணரின் தலையில் இருப்பதை கண்டுஆச்சர்யப்பட்டார்கள்.
    சிலவைகள் சிதறிக்கிடந்தன.


    ராஜா கிருஷ்ணரின் தீர்ப்பை தலைமேல் ஏற்றுக்கொண்டு, ஜெயதேவர்
    எழுதியதே சிறந்தது என்பதை ஒப்புக்கொண்டார். ராஜாவிற்கு வருத்தம் எதுவுமில்லை.


    கெட்டாலும் என்றும் மேன்மக்கள் மேன்மக்களே, என்பதுபோல,ஜெயதேவர்
    உடன் ஆசைபடாமல், ராஜா எழுதியதும் சிறந்ததுதான் என்று சொல்லி,
    இவர் எழுதிய, அஷ்டபதியில், நடுநடுவே, ராஜாவின் கருத்துகளையும்
    சேர்த்து வெளியிட்டார் என்றால், ஜெயதேவரின் மனசையும்,
    கிருஷ்ண பக்தியையும் நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.


    ராஜாவிற்கு மிகவும் ஜெயதேவரை பிடித்துபோய்விட்டபடியால் ,
    தாங்கள் இந்த குடிசையில் இருந்து சிரமப்படவேண்டாம், எனது
    அரண்மனைக்கு வந்துவிடுங்கள் என்று சொன்னார். ஆனால்
    இதை முதலில் நிராகரித்த ஜெயதேவர் பிறகு சில நாட்கள் சென்று
    ஒப்புக்கொண்டார். அப்போது ஒரு நிபந்தனை ஒன்றையும்
    அரசரிடத்தில் தெரிவித்தார்.


    எனது பூஜைக்கும் ஆசார அனுஷ்டானத்துக்கும் எந்தவித தொந்தரவும்
    வரக்கூடாது. என் இஷ்டம்போல்தான் நான் அரண்மனையில் இருக்க இயலும்
    என்பதால், யாராவது அதற்கிடையில் இடையூறுகள் செய்வதாக உணர்ந்தால்
    அந்த நிமிடமே நான் அரண்மையை விட்டு வந்துவிடுவேன் என்று சொன்னார்.
    ராஜாவும் அதற்க்கு சம்மதித்தார்.
    இப்போது ஜெயதேவருக்கும் பத்மாவதிக்கும் அரண்மனையின் தனி இடம்
    கொடுத்து அவர்களின் சௌகரியம்போல் இருக்க இடமும் வசதிகளும் செய்து
    கொடுத்து விட்டார்.


    காலம் சிலநாள் ஓடிக்கொண்டிருந்தது. ராஜாவும் ஜெயதேவரும்
    இப்போது நன்கு புரிந்துகொண்ட நண்பர்கள்போல் இருந்துவந்தனர்.
    ஒரு தடவை வேட்டையாட செல்கிறபோது ஜெயதேவரையும் அழைத்துபோக
    எண்ணம் கொண்டார்.


    இரண்டு நாட்களில் வந்துவிடுவதாக சொல்லி, பிறகு சம்மதித்து சென்றார்கள்.


    இதற்குள், ராணியும் பத்மாவதியும் நண்பர்கள் போல் ஆகிவிட்டார்கள்.
    பத்மாவதி சில சமயம் மனம் வருந்தி காணப்படும்போது ராணி காரணத்தை
    கேட்க, ஜயதேவரின் பிரிவு சிரமாக இருக்கிறது.ஆகையால்தான் அவர் வந்த
    உடன் சரியாகிவிடும் என்று உண்மையான தம்பதிகளின் லக்ஷணத்தை
    ராணியிடம் தெரிவித்தாள். உண்மையான குடும்பத்தில், உண்மையான
    விச்வாசமுள்ள தம்பதிகள் கணவனின் பிரிவு தாங்கமுடியாத துக்கம்
    என்று உணரவைத்தாள் பத்மாவதி / மகாராணிக்கு இதில் நம்பிக்கை இல்லை.


    ராணிக்கு ஒரு எண்ணம் தோன்றியது.குறுக்கு புத்தி. அதாவது
    கணவனை பிரிந்தால் தாங்கமுடியாது என்பது எந்த அளவு உண்மை
    என்கிறது தெரியாதபடியால் ராணி பத்மாவதியை சோதனை
    செய்து பார்க்க ஆசைபட்டாள்.


    ராஜா இல்லாத காரணத்தால், ராணி, மந்திரியை அழைத்து ஒரு
    நாடகம் ஆட திட்டம் போட்டாள்.


    அதாவது, ராஜாவிடம் இருந்து தகவல் வந்ததாகவும், அதில் ஜெயதேவர்
    வேட்டை ஆட சென்ற இடத்தில் மரணம் அடைந்துவிட்டதாக, தத்ரூபமாக
    வந்து சொல்லவேண்டும் என்று ஆணை இட்டாள். இது ஒரு விபரீத
    ஆசையாக இருக்கிறது என்பதை ராணியால் அந்த நேரத்தில்
    உணரதெரியவில்லை. விளையாட்டாக சோதிக்கவே இதை செய்கிறாள்
    என்பதே அவளது நினைப்பு ஆகும்.


    மறுநாள் அதேபோல் ,மந்திரி , சபையில் வந்து பத்மாவதியும் ராணியும்
    சேர்ந்து இருக்கும் சமயத்தில் வந்து தெரிவிக்கிறார். இதை கேட்ட பத்மாவதி
    உடன் மூர்ச்சையாகி கீழே விழுந்துவிடிகிறாள் . ராணி இதை சற்றும்
    எதிர்பார்க்கவே இல்லை. பத்மாவதிக்கு இந்த நிலை ஆகி இறந்துபோனாள்
    என இவர்கள் நினைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.


    விளையாட்டு வினையாக போய்விட்டதே , ராஜாவிற்கு என்ன பதில் சொல்வேன்.
    ஜெயதேவருக்கு என்ன பதில் சொல்வேன் என மிக்க வேதனை அடைந்தாள்.


    அரண்மனை மருத்துவரை வரவழைத்து என்னென்னமோ செய்து பார்த்தும்
    பத்மாவதி எழுந்திருக்கவில்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில்,
    ராஜாவும், ஜெயதேவரும், வந்துகொண்டு இருக்கிறார்கள் என சிப்பாய்கள் தகவல் தர,
    வெலவெலத்துப்போனாள் ராணி.


    ராணி ராஜாவிடம் நடந்ததை தெரிவிக்க, ராஜாவிற்கு கோபம் அதிகமாகி,
    ஜெயதேவர் தன்னை சபித்துவிடுவார் என்ன செய்வது என்று
    தவித்துக்கொண்டிருப்பதை பார்த்த ஜெயதேவர், இப்போதுதானே நாம்
    எல்லாம் ஒன்றாக வந்தோம், நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என கேட்க
    நடந்தவைகளை விடாமல் அவரிடம் தெரிவித்தார்கள்.


    இவர்கள் எல்லாரும் பயந்தமாதிரி , ஜெயதேவர் கோபப்படாமல், மெதுவாக
    தெரிவித்தார். அதாவது,எனது மனைவி, நான் இல்லாமல் இருக்கும்போது
    அவள் சாக முடியாது என்று கூறி, மேலும் பத்மாவதி இருக்கும் இடத்திற்கு
    செல்கிறார்கள்.
    அங்கு பத்மாவதியை தனது மடிமேல் வைத்து ,-‘ப்ரியே”
    என மெதுவாக கூப்பிடுகிறார்.ஜெயதேவர் பத்மாவதியை எப்போதும்
    இதுபோல்தான் கூப்பிடுவார்.
    பிறகு,அஷ்டபதியில், முன்பே தெரிவித்ததை, அதாவது
    எந்த வரியை எழுதவேண்டாம் என்று விட்டாரோ, அதே வரியை
    கிருஷ்ணனே வந்து எழுதினர் என்று சொன்னோம் அல்லவா,
    அதாவது பத்தொன்பதாவது அஷ்டபதி . அந்த பாட்டை பாடினார்.


    "வதஸி யதி கிஞ்சிதபி தந்தருசி கௌமுதி,
    ஹரது தர திமிரம் அதிகோரம்


    ப்ரியே சாருசீலே! , ப்ரியேசாருசீலே!"


    என்று அந்த பாட்டு முழுவதும் பாடிக்கொண்டிருக்க, ஜெயதேவர்,
    ப்ரியே என்று பாடும்போது, பத்மாவதியின் காதுக்கு கிட்ட சென்று
    சொன்னார். என்ன ஆச்சர்யம் , அப்போது பத்மாவதி, தூக்கத்தில் இருந்து
    எழுந்தவள் போல் எழுந்தாள்.


    அப்போது சொன்னார் ஜெயதேவர்.ஒரு உண்மையான அன்யோன்யமாக
    தம்பதிகள் வாழ்ந்து வந்தால், கிருஷ்ணா பக்தியால்,எதையும் சாதிக்கலாம்
    என்று சொல்லி, அனைவரையும் சந்தோஷப்படுத்தி ஆச்சர்யப்படுத்தினார்
    ஜெயதேவர்.


    ஆகவே ப்ரியே அதாவது ப்ரியா என்று பெயர் வைத்தல்மட்டும் போதாது.
    இதுபோல் எந்த தம்பதியர் இருக்கிறார்களோ, அந்த கணவன்தான் ப்ரியே
    என்று தனது மனைவியை அழைக்கமுடியும்.


    ஆகவே அஷ்டபதி என்பது ஒரு மருந்து .இது எங்கு ஒலிக்கிறதோ ,
    அங்கு ஜெயதேவர், பத்மாவதி, ராதையும் கிருஷ்ணனும் வந்து இருந்து
    அவர்களை காப்பாற்றுகிறார்கள் .


    ஆகவே நீங்கள் உங்கள் வீட்டில் அஷ்டபதியை தினமும் பாடிக்கொண்டு
    இருங்கள்.எல்லாம் கிருஷ்ண கிருபையால் சரியாகிவிடும்.


    மொத்தம் இருபத்திநான்கு அஷ்டபதிகள் உள்ளன. இதில் இருபத்தி இரண்டாவது
    கல்யாண அஷ்டபதி ஆகும்.ஆகவே, உங்கள் வீட்டில் திருமணம் நடக்க,
    இந்த அஷ்டபதிகளை பாடிவந்தாலே அனைத்தும் நடக்கும்.
    இதை பாடுவதால் நமது சிரமங்கள் போய்விடும்.


    மொத்தம் இதை பாட நான்கு மணி நேரம் ஆகும். ஆரம்பத்தில் ,
    நீங்கள் தினமும் ஒவ்வொரு பாட்டாக பாடி வந்தாலே போதுமானது.
    பழகியவுடன் அனைத்தையும் பாடமுடியும்.
    தனிபட்ட முறையில் எனக்கு காரியங்கள் நடைபெற்றன.
    பாடி பயன் அடையுங்கள் நண்பர்களே.


    ராதே கிருஷ்ணா ! ராதே கிருஷ்ணா !! ராதே கிருஷ்ணா !!!

  • #2
    Re: அஷ்டபதிகளை பாடிவந்தாலே அனைத்தும் நடக்&

    ஸ்வாமின் இதைப்படித்து முடித்ததும் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்தது முதல் வேலை அஷ்டபதிகளைத்தேடி டவுன்லோட் செய்வது தான்

    Comment


    • #3
      Re: அஷ்டபதிகளை பாடிவந்தாலே அனைத்தும் நடக்&#296

      அருமையான பகிர்வு மாமா....ரொம்ப நன்றி !
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      Working...
      X