Announcement

Collapse
No announcement yet.

பொறாமையா கூடவே கூடாது!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பொறாமையா கூடவே கூடாது!

    பொறாமை! அது, மனிதர்கள் அனைவரையுமே ஆட்டிப் படைக்க கூடியது. அதற்கு, படித்தவர் - படிக்காதவர் என்ற பேதமில்லை; பொறாமை, உத்தமமான பக்தர்களைக் கூட ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதற்கு, இக்கதையே உதாரணம்.
    கிஞ்சன்வாடி என்ற கிராமத்தில், கணேச பட்டர் எனும் விநாயக பக்தர் வாழ்ந்து வந்தார். விநாயகர் மீது அவர் வைத்திருந்த துாய பக்தியின் காரணமாக, அவர் அளிக்கும் விபூதி பிரசாதத்தால், நோய் மற்றும் பிரச்னைகள் தீரும்; வறுமை நீங்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பினர். அதன் காரணமாக, அனைவரும் கணேச பட்டரைப் போற்றினர்.
    அதே காலகட்டத்தில், துகாராம் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர், ஞான திருஷ்டி படைத்தவர்; அத்துடன், அவர், பண்டரிநாதனுக்கு படைக்கும் உணவை இறைவன் உண்டு செல்வார் என்றெல்லாம் அவரின் புகழ் பரவியிருந்தது.
    இவ்விஷயத்தை கேள்விப்பட்ட கணேச பட்டருக்கு, ஒரு குடம் பாலில், துளி விஷம் கலந்தாற் போல, மனதில் பொறாமை தீ வளர்ந்தது.
    'நாளை துகாராமிடம் போய், என் கண்முன் பண்டரிநாதனை
    வரவழையுங்கள் பாக்கலாம் என கேட்கப் போறேன். அப்போது, அவரோட பொய் வெளிப்பட்டு விடும். அத்துடன், நான் விநாயகரை வரவழைத்து, துகாராமை விட நான் தான் பெரிய பக்தன் என, அனைவர் முன்பும் நிரூபிப்பேன்...' என, சபதமிட்டார் கணேச பட்டர்.
    மறுநாள், நீராடி, துாய ஆடைகள் அணிந்து, ஆசார அனுஷ்டானங்களை முடித்து, கோவிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது, 'ஸ்வாமி... உள்ளே வரலாமா?' எனக் குரல் கேட்டது. வெளியே வந்து பார்த்தார். அங்கே, துகாராம் நின்று கொண்டிருந்தார். 'ஸ்வாமி... நீங்க என்னைப் பாக்க விரும்புவதாகவும், அவருக்கு சிரமம் கொடுக்காமல், நீயே அவரைப் போய் பார்ன்னு பண்டரிநாதர் எனக்கு கட்டளையிட்டார். அதன்படி உங்களப் பாக்குறதுக்காக வந்துருக்கேன்...' என்றார் துகாராம்.
    அதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் வந்து, 'பொய் சொல்லாதீர்; இன்று நான் உங்கள சோதனை செய்ய வரப் போறத
    எப்படியோ தெரிஞ்சு, பண்டரிநாதன் சொன்னதாக பொய் சொல்கிறீர். ஒரு சாதாரண வணிக குலத்தில் பிறந்த நீர், உயர் குலத்தில் பிறந்த என்னிடம் பொய் சொல்லாதீர்...' என்றார்.
    துகாராம் எவ்வளவோ சொல்லியும், அதை ஏற்கவில்லை பட்டர். இதனால், 'சரி... இதோ நான் பண்டரிநாதரை அழைக்கிறேன், என் பக்திக்கு இரங்கி அவர் வருவார். நீங்க உங்க விநாயகரை அழையுங்க, நானும் அவரை தரிசிக்கிறேன்...' என்றார்.
    இதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் அதிகமாகி, 'அப்படியா... இதோ விநாயகரை அழைக்கிறேன்; அவர் கண்டிப்பாக வருவார்...' என்றார்.
    தகவல் அறிந்து ஊரே கூடி விட்டது. கணபதி பட்டர் கைகளைக் கூப்பி, மந்திரங்களைச் சொல்லத் துவங்கினார். ஊஹூம்... என்னென்னவோ செய்தும், விநாயகர் வரவில்லை.
    அப்போது துகாராம், 'ஸ்வாமி... விநாயகரின் பக்தர் ஒருவர், குளிப்பதற்காக குளத்திற்குச் சென்றிருந்தவர் படிக்கட்டில் வழுக்கி, குளத்தில் விழுந்து விட்டார். 'கணேசா காப்பாற்று...' என்று கதறிய அப்பக்தரை விநாயகர் காப்பாற்றி கரை சேர்த்து, அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதனால் தான் உங்க குரலுக்கு வரவில்லை...' என்று கண்களை மூடியபடியே சொன்னார்.
    ஆனால், அதை நம்பவில்லை பட்டர்.
    'நான் சொல்வதில் நம்பிக்கை இல்லன்னா நீங்க பூஜை செய்யும் விநாயகர் கோவில்ல போய் பாருங்க உண்மை தெரியும்...' என்றார். அதன்படி, பட்டரும், மற்றவர்களும் கோவிலுக்கு சென்று பார்த்த போது, அங்கே ஈரக் காலடிச் சுவடுகள் இருந்தன. விநாயகரின் திருமேனி முழுவதும் நனைந்திருந்தது. விநாயகர் அணிந்திருந்த ஆடைகளில் இருந்து, தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
    அனைவரும் வியக்க, உண்மையை உணர்ந்த கணேச பட்டர் தலை குனிந்தார். அவர் மனதில் இருந்த பொறாமையும் அகன்றது.
    ஆணவமும், பொறாமையும் அறிவுக்கு சத்ரு; அதுவும், ஆன்மிகத்தில், பொறாமை அறவே கூடாது.
    பி.என்.பரசுராமன்


    திருமந்திரம்!
    என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
    செம்பால் இறைச்சி திருந்த மனை செய்து
    இன்பால் உயிர்நிலை செய்த இறை ஓங்கும்
    நண்பால் ஒருவனை நாடுகின்றேனே!
    கருத்து: எலும்புகளால் பின்னி, நரம்புகளால் இழுத்துக் கட்டி, ரத்தம், சதையால் அமைக்கப்பட்ட, உடம்பு எனும் வீட்டில், உயிர் என்பது இன்பமாக நிலை பெற்று இருக்கிறது. அவ்வாறு உடம்பையும், உயிரையும் சேர்த்துத் திருவருள் புரிந்த இறைவனை, துாய்மையான அன்பினால் நான் நாடுகிறேன்.

  • #2
    Re: பொறாமையா கூடவே கூடாது!

    பொறாமை என்னும் பேயை விரட்டி, புகழ் என்னும் புனிதத்தை பெற்ற
    துக்காராம் ஒரு புண்ணிய ஆத்மா. அவர் வழி நாடி சென்று நாமும்
    இறைவன் பேரருள் பெற்று நற்கதி அடைவதற்கு , பொறமை ஒழிப்போம் ! புண்ணியம் தேடுவோம் !
    சிறப்பான பதிவுக்கு மிக்க நன்றி !
    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
    என்றும் அன்புடன் ,
    ஜி.ஜி.மூர்த்தி ஐயர்.

    Comment


    • #3
      Re: பொறாமையா கூடவே கூடாது!

      Nice sharing Mama
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      Working...
      X