Announcement

Collapse
No announcement yet.

பலன் தரும் ஸ்லோகங்கள் --2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பலன் தரும் ஸ்லோகங்கள் --2

    வறுமை நீங்க, வளம் பெருக

    முக்தேஸ்வராய பலதாய கணேஸ்வராய
    கீதப்ரியாய வ்ருஷபேஸ்வரவாஹனாய
    மாதங்க சர்மவஸனாய மஹேஸ்வராய
    தாரித்ரிய துக்கதஹனாய நமசிவா

    வசிஷ்ட மஹரிஷி அருளியது.

    பொருள்:

    அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈஸ்வரனே உமக்கு நமஸ்காரம். கர்ம பலன்களைச் சரியானபடி கொடுப்பவரே, பூதகணங்களுக்கெல்லாம் அதிபதியே, உமக்கு நமஸ்காரம்.

    இசையில் இச்சை கொள்பவரே, சிறந்த காளைமாட்டை வாகனமாகக் கொண்டவரே, உமக்கு நமஸ்காரம். யானைத் தோலைப் போர்த்தியவரே, யானை போன்ற பெரிதளவு வறுமை கொண்டோரையும், அந்த ஆழ்கடலிலிருந்து மீட்டு, சந்தோஷமான வாழ்வை அருள்பவரே, மஹேஸ்வரா, உமக்கு நமஸ்காரம்.

    இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் சொல்லி வந்தால், வறுமை நீங்கி, வளமான வாழ்வு அமையப் பெறலாம்.


    திருமணம் ஆகாதவர்களுக்கு - பொருத்தமான வரன் விரைவில் அமைய சிறந்த மந்திரம்

    உங்களது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டுமா?

    கீழ்க்கண்ட கவுரி மந்திரத்தை அம்பாள் சன்னிதியில் வெள்ளிக்கிழமைதோறும் 18 முறை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதுக்குள் ஜபித்துவரவும்.மிகச் சிறந்த வரன் அமையும்.

    ஓம் காத்யாயனி மஹாமாயே ஸர்வயோகினி

    யதீஸ்வரி நந்தகோப ஸீதம் தேவி

    பதிம் மே குருதே நமஹ.


    எண்ணியதெல்லாம் ஈடேற்றும் சுப்ரமண்ய தியானம்







    ஸிந்தூராருணமிந்துகாந்தி வதனம் கேயூரஹாராதிபி:
    திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் அம்போஜாபய சக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரமண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்

    -பிரம்மன் பாடிய சுப்ரமண்ய கவசம்.

    பொதுப் பொருள்: சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமண்யரே நமஸ்காரம். சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தோள்வளை, முக்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை, இம்மையிலேயே அருளும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தாமரை, அபயஹஸ்தம், சக்திவேல், கோழி ஆகியன தாங்கியவரே, வாசனைப் பொடிகளால் நறுமணம் வீசும் நாயகனே நமஸ்காரம். உன் பாதம் பிடித்தோரின் பயத்தைப் போக்கி, அவர்கள் எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமண்யரே நமஸ்காரம்.


    பறிகொடுத்த சொத்துகளை மீண்டும் பெற




    ர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா

    கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:
    ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
    விமுக்தது கா ஸுகினோ பவந்து
    கூரேசர் அருளிய நாராயணாஷ்டகம்.

    பொருள்:

    மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் ‘நாராயண’ எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அளிப்பாய் நாராயணா!

    (தினமும் சொல்லக் கூடிய இந்த ஸ்லோகத்தை, குறிப்பாக வைகுண்ட ஏகாதசி நாளன்று, பாராயணம் செய்தால் ஸ்ரீமன் நாராயணன் எல்லா நலன் களையும் தருவார்.)











  • #2
    Re: பலன் தரும் ஸ்லோகங்கள் --2

    Good series of slokas.Kids especially can be made to read, pronounce and understand and then recite.
    Kindly keep going, Sir.
    Respectfully,
    Varadarajan

    Comment


    • #3
      Re: பலன் தரும் ஸ்லோகங்கள் --2


      Thank u Mr.Varadarjan,
      I came to Chennai for a short stay to attend an important deceased 10th day ceremony and will be leaving back to Sholinghur tommorow. I took this opportunity to post some posts. Unfortunately I do not have either a Desktop PC or a laptop at sholinghur except a hand held tablet which is nothing but a nuisence and useless. So i am not able to post any thread from sholinghur.By the way our Brahmins Seva Samaj at Sholinghur is celebrating Sree Sitaraama Thirukkalyanam on Friday the 1st May and I cordially invite you to attend the celebration without fail. Since I do not have facilities to putup the printed invitation in our forum page, I have to resort to invite you all by only a text message. This is the fifth year Thirukkalyanam we are celebrating starting from Nama Sankeerthanam the previousday and on 1st May starting with Unchavurthi followed by Thirukkalyanam. I am also extending this invitation to all our fellow members by a text message....With regards..P.S.NARASIMHAN
      Last edited by P.S.NARASIMHAN; 18-04-15, 10:48.

      Comment


      • #4
        Re: பலன் தரும் ஸ்லோகங்கள் --2

        Thanks for the invitation Sir. But I am in Mumbai with my son and scheduled to leave on 30th to Hyderabad.It will be impossible to be in Sholingur in 1 May. I request your prayers for my second son (pooradam, Naithrapakadyapa)Vijay o be blessed with a child.That is all.
        Like you, I am also with a small samsung non-sim tablet.Hence unable to post till 1 May.
        Wishing the function all success and expect nice posts on the Thirukkalyanam.
        With respects,
        Varadarajan
        .

        Comment

        Working...
        X