பெரியாழ்வர் தனது ஒரு பாசுரத்தில் பத்து அவதாரத்தையும் கூறி
உள்ளதை பார்ப்போமா.

"தேவுடிய மீனமாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவிருவிலி இராமனாய் கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோவில்
சேவலோடு பெடைஅன்னம் செங்கமல மலரேறி ஊசலாடி
பூவணை மேல் துதைந்தெழு செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே "

மீனமாய் - மத்யாவதரம்
ஆமையாய் - கூர்ம அவதாரம்
ஏனமாய் - வராஹா அவதாரம்
குறள் ஆய் - வாமன அவதாரம்
அரியாய் - நரஸிம்ஹ அவதாரம்
மூவிருவிலி இராமனாய் - பரசுராமன், தசரதராமன்,பலராமன்
கண்ணனாய் - கிருஷ்ணா அவதாரம்
கற்கியாய் - கல்கி அவதாரம்

அதே போல் சிவனையும் நாராயணனையும் அவர்களின் பல அம்சங்களை கூறும்
பாசுரம் இங்கே பார்க்கலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபெயர் சிவன் நாராயணன்
வாகனம் எருது கருடன்
பிரமாணங்கள் ஆகமம் வேதங்கள்
வசிக்குமிடம் மலை கடல்
தொழில் அழித்தல் காத்தல்
ஆயுதம் வேல் சக்கரம்
வடிவம் நெருப்பு மேகம்
மேனி ஒருவன் மற்றவனுக்கு உடலாய் இருப்பவன்
( சிவனின் அந்தர்யாமியாக )

இது எந்த பாசுரம் என்று பார்த்தால் பொய்கை ஆழ்வார் அவர்களின் முதல்
திருவந்தாதி (பாசுரம் ஐந்து )

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்த்தி
உரைநூல் மறையுறையுங்கோவில் வரைநீர்
கரும மழிபளிப்புக் கையதுவேல் நேமி
உருவமெரி கார்மேனி ஒன்று

இன்னும் தொடரும்.

அடியேன்,
நொச்சலூர் சேஷாத்ரி சம்பத்.