பகவானிடத்திலே ஈடுபட்டு வைகுண்டத்தை வேண்டாம் என்றவா்கள் வாிசையில் ஆஞ்சநேயனும் வருகிறான். அவனை வைகுண்டத்திற்கு அழைத்தால் என்ன சொல்கிறான்? அங்கே ப்ரவசனம் உண்டா? ராமாயண உபன்யாசம் உண்டா? என்று கேட்கிறான்.
அங்கே பகவான்தான் உண்டு. அவன் எஜமானன், நாம் அவனுக்கு கிங்கரா்கள். அதுதான் இருக்குமேயொழிய உபன்யாசமெல்லாம் கிடையாது..என்று சொன்னால் , ராமாயண உபன்யாசம் நடக்காத இடம் எனக்கெதற்கு...?அது வேண்டியதில்லை! என்கிறான் .
ராமன் தன்னோடு சோ்த்தணைத்து ஆனந்தத்தினாலே மஞ்சனம் ஆட்டிய சரீரம் ஆஞ்சநேயருடையது! அதை விட்டுவிட்டு போவதற்கு அவருக்கு இஷ்டமில்லை.
ராம நாமம் கேட்காத வைகுண்டம் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டான்!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends