Announcement

Collapse
No announcement yet.

Health & Food in Tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Health & Food in Tamil

    Health & Food in Tamil


    நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் கலக்கப்படும் இரசாயனங்களும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும்!!!
    பகுதி ஹைட்ரஜன் ஏற்றிய எண்ணெய் (PARTIALLY HYDROGENATED OIL), இது இதயத்தை பாதிக்கக் கூடியது ஆகும். ட்ரான்ஸ் கொழுப்பு எனப்படும் ஓர் வகையின் முதன்மை பிரிவாக இது கருதப்படுகிறது. உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் இது மிகவும் மலிவாகக் கிடைப்பதால் இதையே பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெய், இதயத்திற்கு கேடு விளைவிக்கும் எல்.டி.எல் (LDL) கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. இதனால், இதய நோய்கள், நீரிழிவு, ஊட்டச்சத்து குறைப்பாடு போன்றவை ஏற்படும். ட்ரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகள், வெண்ணெய், குக்கீஸ் (பிஸ்கட்), சாலட், பிரெட் மற்றும் சிப்ஸ் உணவுகளில் இதன் கலப்பு இருக்கின்றது.
    ARTIFICIAL SWEETENERS எனப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் பெரும்பாலான உணவுகளிலும், குளிர் பானங்களிலும் கலக்கப்படுகிறது. சுக்ரலோஸ் (Sucralose) என்பது சர்க்கரையில் இருந்து எடுக்கபப்டும் இயற்க்கை இனிப்பு ஆகும். ஆனால் ஆராச்சியாளர்கள் மூன்று ஹைட்ரஜன்-ஆக்சிஜன் மூலக்கூறுகளை கிளோரின் அணுக்களுடன் சேர்த்து சாச்சரின் (Saccharin -sweet'N low) எனும் இரசாயன பொருளைத் தயாரிக்கின்றனர். இது பெட்ரோலியம் பொருளில் இருந்து தயாரிக்கபடுவது ஆகும். உலக உணவுக் கட்டுப்பாடு அமைப்பினர் இதைக் குறித்து இன்னும் பல விவாதங்கள் செய்துக் கொண்டிருக்கையில். இது, நாம் பருகும் பல குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதனால் மூளைக்கட்டிகள் ஏற்படலாம் என்று செய்திகள் கசிந்து வருகின்றன.
    உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் (HIGH FRUCTOSE CORN SYRUP), சர்கரைக்கு பதிலாக மிக மலிவாக கிடைக்கும் பொருள் இதுவாகும். இது மூளையின் தசைகளை வலுவிழக்க செய்யும் என்று கூறப்படுகிறது. இதில் மெர்குரியில் இருக்கும் நச்சுகள் கொண்டிருப்பதாகவும், இதை அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் எழும் என்றும் கூறப்படுகிறது.
    மோனோசோடியம் குளுட்டோமேட் என்று கூறப்படும் MSG, நாம் தினசரி பயன்படுத்தும் 40க்கும் மேற்பட்ட சராசரி உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. அதிகப்படியான மோனோசோடியம் குளுட்டோமேட் நரம்பு மண்டலத்தையும், அதன் செல்களையும் வெகுவாக சேதமடைய செய்யும். இது, நீங்கள் பருகும் டயட் பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட், இன்ஸ்டன்ட் சூப், மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட காய்கறி உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. மேகி தடை செய்யப்பட்டதற்கு இது தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
    பி.எச்.எ மற்றும் பி.எச்.டி (BUTYLATED HYDROXYANISOLE & BUTYLATED HYDROXYTOLUENE), ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் பொதுவாக உடலுக்கு நன்மை விளைவிப்பது. ஆனால், பி.எச்.எ மற்றும் பி.எச்.டி போன்றவை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறதாம். சூயிங் கம், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது. இது பசியின்மை, சிறுநீரக செய்திறன் குறைபாடு, முடி கொட்டுதல், புற்றுநோய், கருவின் வலுக் குறைதல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.
    உணவுன் நிறத்திற்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தான் இந்த சோடியம் நைட்ரேட் மற்றும் சோடியம் நைட்ரைட். இவை, இறைச்சி, ஹாட் டாக்ஸ், மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது. இது, வயிற்றில் உருவாகும் அமிலங்களோடு கலக்கும் போது, நைற்றசமைன்களை (nitrosamines) உருவாக்குகிறது. இதனால், வயிறு, மூளை, உணவுக்குழாய் பாதிப்பு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    இதுவும், உணவைகளை பதப்படுத்தி வைக்க சேர்க்கப்படும் ஆன்டி- ஆக்சிடன்ட் ஆகும். முக்கியமாக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை பதப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் கட்டிகள் உருவாக காரணமாக இருக்கிறது. காய்கறி எண்ணெய், இன்ஸ்டன்ட் சூப் வகை உணவுகள், இறைச்சி பொருட்கள், சூயிங் கம் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் இது சேர்க்கபடுகிறது.
    நீங்கள் தினசரி சாப்பிடும் அடைக்கப்பட்ட பழரசங்கள், ஊறுகாய் போன்ற உணவுகளில் இது சேர்க்கப்படுகிறது. இந்த உணவுகளில் நுண்ணுயிர்கள் உருவாகி வளர்கிறதாம். இது, மக்களுக்கு அலர்ஜிகள் உருவாக காரணமாக இருக்கின்றது. சோடியம் பென்சோயேட் பானங்களில் சேர்க்கப்படுவதால் லூக்கிமியா, மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
    பிரெட் உணவுகளில் சேர்க்கப்படும் இரசாயனம் தான் இந்த பொட்டாசியம் ப்ரோமேட், பிரெட் அளவை அதிகரிக்கஇது பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளில் இது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆய்வுக்கூடத்தில் விலங்குகளில் பரிசோதனை செய்து போது, இது புற்றுநோய் உண்டாகக் காரணமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
    நாம் சாப்பிடும் பல்வேறு உணவுகளில் கவர்ச்சிக்காகவும், ஈர்ப்புக்காகவும் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. சாக்லேட், கேக், ஐஸ் கிரீம் போன்ற அனைத்து உணவுகளிலும் இந்த செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் குரோமோசோம் பிரச்சனைகளும், தைராய்டு கட்டிகளும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
    =======================
    இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் LIKE பண்ணுங்க...
    பிறர்க்கும் பயன்படனும்னு நினைச்சா SHARE பண்ணுங்க...
    மேலும் தகவல்களுக்கு
    https://www.facebook.com/healthandfoodintamil













  • #2
    Re: Health & Food in Tamil

    Swamin,
    This is an important information. Everybody should get aware of the news & knowledge. Please share to all.
    regards, ggmoorthyiyer

    Comment


    • #3
      Re: Health & Food in Tamil

      நன்றி : தினமலர் dt : 8th ஜூன் 2015
      பதிவு செய்த நாள்

      08ஜூன்
      2015
      01:13



      Share this video :




      ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில்அதிக அளவு வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் "மேகி நூடுல்ஸ்' ன் விற்பனை நாட்டின் பல் வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட நிலையில் மேலும் பல பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் விற்பனைக்கும் தடை வரும் நிலை உருவகி உள்ளது.

      "ருசியானது, ஆரோக்கியமானது' என்று மேகி தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டாலும், பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்பட்ட ரெடிமேட் நூடுல்ஸ் உணவு வகைகள் என்றுமே உடல் நலத்திற்கு நல்லதல்ல.கடந்த வாரம் "மேகி நூடுல்ஸ்' நாடு முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதில் அளவுக்கு அதிகமான காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளுக்கோனேட் போன்ற வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவை தலைவலி, இதய படபடப்பு, நெஞ்சு வலி, குமட்டல், நரம்பு மண்டல பாதிப்பு, பசியின்மை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதால். நாடு முழுவதும் உள்ள கடைகளில் மேகி நூடுல்ஸ் விற்பனை தடை செய்யப்பட்டது.

      ஆனால், காரீயம் மற்றும் எம்.எஸ்.ஜி மட்டும் மேகியில் பிரச்சனையாக இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது. 2012ல் டில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மையம் தந்துள்ள தகவலின் படி "மேகி நூடுல்ஸ்' போன்ற உணவு வகைகளில் அதிக அளவு உப்பும், குறைந்த அளவு நார்ச்சத்தும், கார்போஹைரேட்டும் இருப்பதால் உடல் பருமன் ஆவதோடு நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும் என்று சொல்கிறது.

      மேகி நூடுல்ஸ் மட்டுமில்லாமல் பல வகையான உணவுப் பொருட்களின் தரமும் ஆராயப்பட வேண்டியவையாக இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் லேபல்களை ஆராய்ந்து அவற்றில் என்ன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்பதை கவனிப்பது இல்லை. மொறு மொறு பிஸ்கட்டுகளையும் சிப்ஸ்களையும் வாங்கும் மக்கள், அதற்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து மிகுந்த வேதிப் பொருட்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேகி போன்று மற்ற "பாஸ்ட் புட்' வகைகளில் சோடியம் அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடியது. "பாஸ்ட் புட்' தயாரிப்புகள் பல வேதி செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தானியங்கள் பாலிஷ் செய்யப்படுவதால், அவை இயற்கை தன்மையை இழந்து ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. கேக்குகள், பிஸ்கட்டுகள், தானியங்கள் மற்றும் பல ஸ்நாக்ஸ்கள் இந்த வகையில் அடங்கும்.

      தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள்:
      பி.எச்.ஏ (புடிலேடட் ஹைட்ராக்ஸிஅனிசோல்): இது உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் நீடித்து வருவதற்காக கலக்கப்படும் வேதிப் பொருள். இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கக் கூடியது. உருளைக் கிழங்கு சிப்ஸ், சூயிங் கம், பாஸ்ட் புட் செரியல்ஸ் வகைகளில் கலக்கப்படுகிறது.

      சோடியம் நைட்ரேட் : உணவுக்கு நிறம் ஊட்டவும், சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கவும் சேர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மாமிசம் பதப்படுத்தப் பயன்படுகிறது. வயிற்று வலி, மூளை மற்றும் சிறுநீரக புற்று நோய், தலை வலி, வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். எனவே, பதப்படுத்தப்பட்ட மாமிசங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

      செயற்கை வண்ணம் மற்றும் வாசனைப் பொருட்கள்: சிப்ஸ், குக்கிஸ் போன்ற பேக்கிங் <உணவு வகைகளின் தயாரிப்பில் பயன்படுகிறது. ஒவ்வாமை, கிறுகிறுப்பு போன்ற விளைவுகள் ஏற்படும். பிரிலியண்ட் ப்ளு, டார்ட்ரஜைன், சன்செட் மஞ்சள் போன்ற செயற்கை நிறங்கள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

      கலப்பான்கள்: இவை ஐஸ்கிரீம்கள், பிஸ்கட்கள், ரொட்டி தயாரிப்புகளில் அதிகம் பயன்படுகின்றன. அதிகம் உட்கொள்ளும் போது குடலில் ஒவ்வாமை ஏற்படுகிறது.

      மோனோ சோடியம் குளுடமேட்: குளுடாமிக் அமினோ அமிலத்தின் சோடியம் உப்பான இது நூடுல்ஸ், சிப்ஸ், ஸ்நாக்ஸ் உணவுத் தயாரிப்பில் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது. இதனால் தலைவலி, இதய படபடப்பு, நெஞ்சு வலி, மூளை மற்றும் ஜீரண மண்டல பாதிப்பு ஏற்படுகிறது.

      Comment

      Working...
      X