Announcement

Collapse
No announcement yet.

giving & not giving -periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • giving & not giving -periyavaa

    giving & not giving -periyavaa


    Courtesy:Sri.Poova Raghavan Iyengar


    காஞ்சி மாமுனி மஹா பெரியவா.


    கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு -மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு - (காஞ்சி மாமுனி மஹா பெரியவா)


    "இறைவன் கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு. கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் உண்டு" என்று கூறுவார்கள்.
    நாம் வருந்தி வருந்தி கேட்பது நமக்கு நன்மை தருமா என்பதை நாம் அறியமாட்டோம்.
    அவன் ஒருவனே அறிவான். எனவே நமது அபிலாஷைகளை அவன் பாதார விந்தங்களில் சமர்பித்துவிட்டு நமது கடமையை நாம் செய்துவரவேண்டும்.
    குருவருளும் அப்படித்தான். குரு கொடுத்தால் நூறு நன்மை. மறுத்தால் இருநூறு நன்மை.
    கீழ்கண்ட சம்பவமும் உணர்த்துவது அதைத் தான்.
    மகான்கள் மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு!
    ஒரு குக்கிராமத்தில் முகாமிட்டிருந்த மஹானை தரிசிக்க ஒரு மிராசுதாரும் அவரது உதவியாளரும் வந்திருந்தனர். வந்த பக்தர்கள் அனைவரிடமும் அன்பொழுக பேசி அருள் செய்யும் கருணைத் தெய்வம் காஞ்சி மாமுனி, அன்று வித்தியாசமாக உடன் வந்த உதவியாளரிடம் மட்டுமே கொள்ளைப் பேச்சு பேசினார்.
    அழைத்து வந்த எஜமானரை ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை. இது மிராசுதாருக்கு வருத்தமாக இருந்தது.
    காரணமும் புரியவில்லை. தன்னிடம் பேசாமல் இருக்குமளவிற்கு தான் தவறு செய்ததாகவும் தெரியவில்லை. எனினும் யார் காரணம் கேட்க முடியும்? வருத்தம் வாட்டவே விடைபெற்றுச் சென்றார்.
    முகாமிட்டிருந்த இடத்திலிருந்து ரயில் நிலையம் தள்ளி இருந்ததால், மடத்து வண்டியில் அவர்களை கொண்டு விடும்படி உடனிருந்த தொண்டருக்கு உத்தரவிட்டார்
    ஞான மாலை. ரயில் நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு வந்த தொடரை அழைத்து, "வண்டியில் போகும்போது மிராசுதார் என்ன பேசினார்? தன்னைப் பற்றி என்ன சொன்னார்?" என்று கேட்க, "அவர் ரொம்ப குறைப்பட்டுக்கொண்டார். பெரியவா அவரிடம் பேசாதது அவருக்கு ரொம்ப வருத்தமாய் இருந்ததாம்.
    வழியெல்லாம் பெரியவாளை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். எப்பொழுதும் தன்னிடம் அன்பாய் பேசும் பெரியவா இன்று பேசாத காரணம் புரியவில்லை என்று அதே சிந்தனையில் இருந்தார்." என்று கூறினார் தொண்டர்.
    உடனே ஞானக்கடல், "எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?" சொல்லிவிட்டு நகர்ந்தது ஞான மலை.
    மறுநாள் மாலை தந்தி வந்தது. அதில் மிராசுதார் இறைவனடி சேர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
    அதிர்ச்சி அடைந்த மடத்து சிப்பந்திகள் மேலும் பிரமிக்கும்படி பெரியவா சொன்னார்: "நான் அவனோட நேத்திக்கு பேசாததன் காரணம் கடைசியா அவனுக்கு என் நினைவாகவே இருக்கட்டும்னு தான். நான் பேசாததாலேயே அவன் என் நினைவாகவே இருந்தான்." என்று கூறிய பிறகு தான் அவர்களுக்கு புரிந்தது
    "எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?" என்று பெரியவா கூறியதன் அர்த்தம்.
    பகவான் கீதையில் "கடைசி நேரத்தில் தன நினைவாகவே இருந்து உயிர் பிரிந்தால் தன்னையே வந்து அடைவதாக" சொல்கிறார்
    அல்லவா? அதனால் தான், தன் பக்தன் கடைசியில் தன நினைவாகவே இருந்து தன்னையே அடைந்து பிறவிப் பெருங்கடலை தாண்டட்டும் என்று அருள் செய்தார் போலும்
    நம் கீதாசார்யரான பெரியவா. பிறக்கும் போதும், வாழும்போதும், இறக்கும்போதும் எப்பொழுதும் அருள் செய்யும் கருணைக் கடல் நம் காஞ்சி மாமுனிவர்.
Working...
X