Announcement

Collapse
No announcement yet.

சம்பாவனை மற்றும் தக்ஷினை வகையறா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சம்பாவனை மற்றும் தக்ஷினை வகையறா

    சம்பாவனை மற்றும் தஷிணை

    நமது பிராமண சமூகத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு விதத்தில் தினசரி ஒரு சடங்கை செய்யவேண்டி இருக்கிறது எல்லோரும் அறிந்ததே.அதற்கு ஒரு புரோஹிதரோ/வாத்தியாரோ தேவை படுகிறார்.அவருக்கு சடங்கு செய்து வைத்ததற்கு தக்ஷிணை கொடுப்பது அவசியம்.ஆனால் சில புரோஹிதர்கள் தங்கள் இஷ்டப்படி தக்ஷிணை கேட்பது அதிகமாகிவிட்டது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் ஒரு முடிவு செய்ய வேண்டி இருப்பதால் நன்கு வுணர்ந்த சகலமும் தெரிந்த நமது ஆப்தரும் புரிஹிதர் விஷயத்தில் அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணமும் கொண்ட ஸ்வாமின் NVS அவர்களை இந்த விஷயத்தில் வழி காட்ட வேண்டும் என்று ப்ராத்திகின்றேன். அவர்களின் வழிகாட்டல் படி நாம் அக்கறை கொண்டவர்கள் நடந்து கொள்ள உறுதி கூற கொள்ளவேண்டும்.மற்றபடி halfbaked ,semiliterate ,வாத்தியார்களை உதாசீனபடுத்தவேண்டும் .அவசியம் ஸ்ரீ NVS அவர்கள் நமக்கு வழி காட்டுவார் என்றே நினைகிறேன்.அவருக்கு உதவியாக இருக்க கீழ்கண்ட விசேஷங்கள்,சடங்குகள் பட்டியலிட்டு இருக்கிறேன். அவைகள் ஒவ்வொன்றிக்கும் எவ்வளவு தக்ஷிணை/சம்பாவனை கொடுக்கவேண்டும் என்று ஒரு கோடி காட்டினால் போதும். இந்த விஷயத்தில் 2ம்தர 3ம்தர புரோஹிதர்களுக்கு கொடுக்கமுடியாது என்றும் தெரியப்படுத்துகிறேன். அம்மாதிரி ஸ்வாமிகள் பெரிய சுவாமிகளிடம் எடுபிடி யாக இருந்துகொண்டு அவர்கள் சொன்னதை எல்லாம் அர்த்தம் தெரியாமல் கிளிப்பிள்ளை போல் சொல்லிக்கொண்டு வளம் வருகிற fakes ஆசாமிகள் .

    வரிசை எண் - சடங்கி ன்விபரம் - சுவாமிகளின் எண்ணிக்கை - பூர்த்தியாக செய்ய கால நிர்ணயம் - மொத்தமாக சம்பாவனை/தக்ஷிணை.


    1.பிரசவ சுபா புன்யஹவசனம்
    2 வருடமுடிவில் செய்யும் ஆயுஷ் ஹோமம்
    3 உபநயனம்
    4 நிச்சயதார்த்தம் (இது அவசியம்தானா?) பெரிய கல்யாணம் போல செய்கிறார்களே.
    5 விவாஹம். கடைசி க்ருஹப்ரவேசம் கட்டு சாதம் வரை
    6 பூச்சூட்டல்
    7 சீமந்தம்
    8 சஷ்டியப்தபூர்த்தி
    9 சதாபிஷேகம்
    10 நூதன க்ருஹப்ரவேசம்
    11.ஹோமங்கள் : கணபதிஹோமம் /சுதர்சன ஹோமம் மற்றைய தனித்தனியாக செய்யும் ஹோமங்கள்

    மேற்கூரியவைகளு க்கெல்லாம் அதிகபட்ச தக்ஷிணை/சம்பாவனை எவ்வளவு கொடுக்கலாம் என்று வழி காட்டவேண்டும் என்று பிராத்திக்கின்றேன் ,,,
    தங்கள் வழிகாட்டுதல் படி தக்ஷிணை/சம்பாவனை கொடுக்க சித்தமாக இருக்கிறோம்.
    மேற்கூறிய தக்ஷிணை விஷயமெல்லாம் நன்குபடித்த சிரத்தையாக செய்யும் வாத்தியார்களுக்கு மட்டும்தான்..








    Last edited by P.S.NARASIMHAN; 10-06-15, 14:57.

  • #2
    Re: சம்பாவனை மற்றும் தக்ஷினை வகையறா

    ஶ்ரீ:
    இதையெல்லாம் யோசித்துதான் அடியேன் 1990களில் ஶ்ரீவைஷ்ணவ கேந்த்ரம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி
    அதில் அனைத்து க்ருஹஸ்தர்களையும், அனைத்து வாத்யார்களையும், ப்ராமணார்த்தம் (போக்தாவாக) சாப்பிட
    விரும்புகிறவர்கள், வைதீகத்திற்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள், தளிகை செய்பவர்கள், மாமிகள் போன்றோரை
    அவரவர் இருப்பிட முகவரி, தொடர்பு கொள்ளவேண்டிய தகவல்கள் (முன்பு அனைவரிடமும் போன் கிடையாது),
    என்னென்ன ஸேவைகள் செய்ய இயலும், என்னென்ன வசரிகள் உள்ளன போன்ற அனைத்துத் தகவல்களையும் பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டினோம்.
    இதற்காக விண்ணப்பப் படிவங்கள் அச்சிடப்பட்டு, முகவர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று விளக்கி சேர்த்து வந்தோம்.
    சுமார் 850 பேர் வரை (க்ருஹஸ்தர்கள் மட்டும்) பதிவு செய்துகொண்டனர்.

    இந்த அமைப்பின் செயல்பாடு :
    அவரவர் ஆத்து கோத்ரம், ஆசார்யன், பெற்றோர் முன்னோர் பெயர்கள், வம்சம் போன்ற அனைத்துத் தகவல்களையும் பதிவுசெய்துகொள்வது.
    வருடாவருடம் வரும் ச்ராத்தங்கள் குறித்து அவர்களுக்கும் அவர்கள் ஆத்து ப்ருஹஸ்பதிக்கும், அவர்கள் விரும்பும் தளிகைக்காரர் போன்றோருக்கும் முன்னதாகத் தெரிவிப்பது.
    குறிப்பிட்ட நபர்களுக்கு ஏதேனும் நிர்பந்தம் என்றால் மாற்று ஏற்பாடு செய்வது.
    ஸேவைசெய்வோருக்கும், க்ருஹஸ்தர்களுக்கும் ஏற்புடைய ஸம்பாவனையைக் காலத்துக்கேற்றவாறு நிர்ணயித்து ஒத்துக்கொள்ளச்செய்வது போன்றவையே
    இந்த அமைப்பின் முக்கியமான செயல்பாடாகும்.
    பின்னர் அது திருமணத் தகவல்மையமாக மாறி வெற்றிகரமாகச் செயல்பட்டது என்பது வேறு கதை.

    ஆனால், க்ருஹஸ்தர்கள் மற்றும் வாத்யார்கள், ஸேவையாளர்கள் கேந்த்ரம் ஏதோ இடைத்தரகு செய்யக்கூடும் என்று எண்ணினார்களோ என்னவோ
    10 சதவீதம்கூட யாரும் ஒத்துழைக்கவில்லை. ஆனால் அடியோங்களுடைய சொந்த உபாத்யாயக்காரர்களுக்கு இது ஒரு நல்ல ஏற்பாடானது.
    அடியோங்களுடைய தரமான ஸேவையைக் கருதி, புதிதாகப்பல வாடிக்கையாளர்கள் நேரடியாக இணைந்து பயனடைந்தார்கள்.

    1995ம் வருட காலத்தில் ஒரு நாளைக்குச் சுமார் 10 ச்ராத்தங்களுக்கு வாத்யார் ஸ்வாமிகள் ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது.
    இதனால் அடியேனிடம் மட்டும் சுமார் 15 வாத்யார்கள் பயிற்சிபெற்று பணியாற்றி வந்தார்கள்.

    1997ம் வருடம் அடியேனுடைய உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு (புனர் ஜன்மம் பெற்று) மீண்டு வருவதற்குள் அடியேனிடம் பணியாற்றி வந்த
    வாத்யார்கள் தனித்தனியாகத் தன்னிச்சையாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

    இவற்றை எதற்காகத் தெரிவிக்கிறேன் என்றால், வைதீகத்தை முறைப்படுத்தி, தரமான வைதீக ஸேவை, நாணயமான கட்டணவிஹிதங்கள் என்கிற
    ஒரு ஏற்பாட்டைச் செய்யவேண்டும், தரமற்ற வைதீகம் செய்வோரை தனிமைப்படுத்தவேண்டும் என்ற அடியேனுடைய அவா நிறைவேறாமலே போனது.

    ஒருவேளை அது அந்த இறைவனுக்கே பிடிக்கவில்லை போலும்.
    எனவே அடியேன் பாதையை மாற்றிக்கொண்டேன், வைதீகத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி
    சென்னை யுனிவர்சிட்டியில் சேர்ந்து வைணவம், ஸம்ஸ்க்ருதம் பயில ஆரம்பித்துவிட்டேன்
    ஆயினும் இணையதளம் மூலமாகவாவது க்ருஹஸ்தர்களுக்கு அனைத்து வைதீக விஷயங்களையும் தெரிவித்து
    அதிலுள்ள மூட பழக்க வழக்கங்களைக் களைந்து, சாஸ்த்ர, ஸம்ப்ரதாய நெறிமுறைகளை அனைவரும் அறிந்துகொள்ளும்படிச் செய்யவேண்டும் என்பதற்காகவே
    1998ல் ஒரு இணையதளம், தொடர்ந்து யாகூவில் ஒரு குரூப் (வைதீகம்), ahobilam.com தற்போது brahminsnet.com அனைத்தும் ஏற்பட்டுள்ளன.

    கீழ்க்கண்டவற்றுக்கு குறைந்தபட்சம் அதிக பட்சம் என இரு தொகைகள் வழங்கியுள்ளேன்: (சாமான்கள் இல்லாமல்)
    1.பிரசவ சுபா புன்யஹவசனம்
    1500 - 3000
    2 வருடமுடிவில் செய்யும் ஆயுஷ் ஹோமம் - 7000 - 12000
    3 உபநயனம் - 10000 - 20000
    4 நிச்சயதார்த்தம் (இது அவசியம்தானா?) பெரிய கல்யாணம் போல செய்கிறார்களே. - 4000 - 10000 (அவரவர் இஷ்டம், திருத்த முடியாது)
    5 விவாஹம். கடைசி க்ருஹப்ரவேசம் கட்டு சாதம் வரை - கட்டு சாதத்திற்கு வாத்யார் தேவையில்லை. இதில் பெண் ஆத்துக்கு மட்டும் 3 பேர் 25000 குறைந்தது. அதிகபட்சம் வசதிக்கேற்ப.
    பிள்ளையாத்துக்கு - 2 பேர் - 12000 (குறைந்தது)
    6 பூச்சூட்டல் - வாத்யார் தேவையில்லை.
    7 சீமந்தம் - உதகசாந்தி உட்பட குறைந்தது 8000
    8 சஷ்டியப்தபூர்த்தி - குறைந்தது 4 பேருக்கு - 15000
    9 சதாபிஷேகம் - குறைந்தது 4 பேருக்கு - 15000
    10 நூதன க்ருஹப்ரவேசம் - குறைந்தது 2 பேர் - 7500
    11.ஹோமங்கள் : கணபதிஹோமம் - குறைந்தது 2 பேர் - 6000
    சுதர்சன ஹோமம் - குறைந்தது 5 அல்லது 6 பேர் - 20000
    நவக்ரஹ ஹோமம் - குறைந்தது 4 பேர் - 9000
    மற்றைய தனித்தனியாக செய்யும் ஹோமங்கள் - பின்னர் தேவைப்படும்போது தெரிவிக்கிறேன்.
    கொடுத்துள்ள ஸம்பாவனைகள் யாவும் குறைந்த பட்சம் ஆகும்.
    அடியேனைப்போன்ற வாத்யார்கள் - நல்ல முஹூர்த்தம் எதுவும் இல்லாமல் இருந்து, உண்மையிலேயே வசதி குறைவானவர்கள் என்பது தெரியவந்தால்
    மேலும் 20 - 30 சதவீதம் வரை குறைத்துக்கொள்வோம்.
    அதுபோல் க்ருஹஸ்தர்களும், வைதீகர்களுக்கு ஒரு மஹூர்த்த தினத்தில் வந்தால்தான் வருமானம்
    எனவே அன்றைய தினத்தில் வைதீக ஸம்பாவனை முடிந்தால், த்ருப்தியாக பண்ணிவைத்தார்கள் என்று தெரிந்தால்
    கொஞ்சம் அதிகமாகக் கொடுத்து ஆதரிக்கலாம். (நிறைய இடங்களில் அடியேனுடன் வந்தவர்களுக்கு கேட்டதைவிட அதிகமாகக் கொடுத்துள்ளார்கள்).
    வழங்கியுள்ள தகவல்கள் ஓரளவிற்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.
    தாஸன்,
    என்.வி.எஸ்



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X