Announcement

Collapse
No announcement yet.

End of Lord Krishnna

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • End of Lord Krishnna




    ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார முடிவு...


    ஸ்ரீ கிருஷ்ணர் யாதவ குலத்தில் தோன்றினாலும் , தங்களுடன் வாழ்கின்றவர் பகவான் என்பதை யாதவர்கள் ஒருபோதும் உணராது இருந்தனர். .
    ஒருமுறை சில முனிவர்கள் துவாரகைக்கு வந்தனர் . அப்போது யாதவ குலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் சாம்பா என்னும் பெயர் கொண்டவனை கருவுற்ற மாந்தராக வேடமிடச் செய்து இவளுக்குப் பெண் குழந்தை பிறக்குமா?, ஆண் குழந்தை பிறக்குமா? என்று அங்கு எழுந்தருளியுள்ள ரிஷிகளிடம் கேட்டனர். கோபமுற்ற ரிஷிகள்" ஆணும் இல்லை , பெண்ணும் இல்லை ! ஒரு உலக்கையைத் தான் அவள் பெற்றெடுப்பாள். அது உங்கள் குலம் முழுவதையும் அழித்துவிடும் !" என்று கோபமாகக் கூறினர். சாம்பா தன் உடையைமாற்றிக் கொள்ள அவிழ்த்தபோது ஒரு இரும்பு உலக்கை அவன் உடையில் ஒட்டி இருந்தது. உடனே வெகுண்டு அந்த இளைஞர்கள் நடந்த சம்பவத்தைப் பலராமனிடமும், கிருஷ்ணரிடமும் தெரிவித்தனர். அவர்களின் பொறுப்பற்ற நடத்தையைக் குறித்து பலராமன் கோபமடைந்தார். இருந்தாலும் ரிஷிகளின் வார்த்தையைக் கேட்டதினால் கவலையுற்ற பலராமன் என்ன செய்வது? என்று யோசித்து பின் , அந்த இரும்பு உலக்கையைத் தூள் தூளாக அரைக்கும்படி ஆணையிட்டார். . ஒரு இரும்புத் துண்டு மட்டும் மிகவும் கடினமாக இருந்தது, அதை ராவிய தூளுடன் நடுக் கடலில் வீசினார்.
    "குருஷேத்திர யுத்தம் தன்னுடைய குடும்பம் முழுவதையும் அழித்து வாரிசில்லாமல் செய்துவிட்ட்து இதற்குக் காரணமே அந்த கிருஷ்ணன்தான் . ஏன் கிருஷ்ணர் இருதரப்பினருக்கும் நிகழ்ந்த யுத்தத்தைத் தடை செய்யவில்லை? " என்று வருந்திய காந்தாரி கிருஷ்ணரின்மேல் கோபமடைந்தாள்.ஆனால் , கட்டுப்படுத்தாத துவேஷமும், பொறாமையும்தான் குரு குடும்பத்தை அழித்தது என்று கிருஷ்ணர் விளக்கிக் கூறினார். அதைக் கேளாத காந்தாரி "உன்னுடைய குலமும்இதுபோல் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள்" என்று கூறிச் சாபமிட்டாள். கிருஷ்ணர் அந்த சாபத்தை ஆசீர்வாதம்போலக் கரம் கூப்பித் தலைகுனிந்து வாங்கிக் கொண்டார்.
    யாதவர் குலம் அழியும்நேரம் நெருங்கும்போது, கடற்கரை யோரத்திலிருக்கும் பிரபாஸா என்ற இடத்திற்குச் செல்லும்படி யாதவர்களிடம் கிருஷ்ணர் கூறினார். யாதவ இளைஞர்கள் குடித்து விட்டுஒருவருகொருவர் சண்டைபோட்டனர். அவர்கள் கடற்கரையோரத்திலிருந்த ஏரக்கா என்ற புல்லைப் பிடுங்கி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். . அந்தப் புல் இரும்பு கம்பிகளைப் போலிருந்ததால் , யாவரும் இறந்தனர். முன்பு கடலில் வீசப்பட்ட இரும்பு உலக்கையின் தூள், கடல் மணலில் புதைந்து , கூரிய புல்லாக முளைத்திருந்தது. .ஆனால் உலக்கையின் கடினமான ஒரு பாகம் கரையோரம் ஒதுங்கிக் கிடந்தது.
    அந்தப் பக்கமாக வந்த ஒரு வேடன் அந்த உலக்கையின் பாகத்தை எடுத்துக் கூர்மையான அம்பு செய்தான்.இதற்கிடையில் கிருஷ்ணர் தன்னுடைய ரதசாரதி தருக்காவிடம் துவாரகையை விட்டு யாவரும் இடம் பெயர வேண்டும். ஏனென்றால் கடல் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால் துவாரகை மூழ்கிவிடும் அபாயம் நெருங்குகிறது என்று தகவல் கூறினார்.
    கிருஷ்ணர் பூமியை விட்டுச் செல்லும் நேரம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த பலராமன் பராமாத்மாவைத் தியானித்துத் தன் உயிர் துறந்தார். ஸ்ரீ கிருஷ்ணபகவான் தம்முடைய திவ்ய உருவத்தில் ஒரு அசுவமரத்தின் கீழ் யோகத்தில் உட்கார்ந்தார்.
    தூரத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தை, மானின் வாய் என்று எண்ணிய வேடன், அதன் மீது அம்பை எய்தினான். அந்த அம்பு கடலில் வீசப்பட்ட உலக்கையின் கடினமான பாகத்தில் செய்யப்பட்டது. அது கிருஷ்ணரின் காலைத் தைத்தது.' ஷரா' என்ற வேடன் ஒரு தெய்வீக மனிதனைக் காயப்படுத்தி விட்டதை அறிந்து அதிர்ச்சியுற்றான். " இந்த கொடிய தவறை செய்ததற்காக என்னை உடனடியாக கொல்லுங்கள்" என்று ஷரா கிருஷ்ணரிடம் கூறினான். " பயப்படாதே, ஷரா ! தெய்வீக திட்டத்தின்படிதான் நீ என்னைத் தாக்கியிருக்கிறாய்! கவலைப்படாதே ! , நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்!" என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதால் ஷரா சொர்க்கத்திற்குச் சென்றான்.
    ஸ்ரீ கிருஷ்ணர் இறக்கும் தருவாயிலிருக்கிறார் என்பதை அறிந்த உத்தவர் நிலைகுலைந்து போனான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தன்னை வழி நடத்துமாறு கேட்க அப்போது அவன் உத்தவ கீதையைக் கேட்கிறான். ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உடலின் அழியும் தன்மையைப் பற்றி மறுபடியும் எடுத்துரைத்து , இவ்வுடல் விலையேறப் பெற்றது , ஐம்புலன் கொண்ட இந்த சரீரத்திலிருந்துதான் ஒரு மனிதன் ஜீவன் முக்தியை அடைய முயற்சி செய்யலாம்.
    பத்ரி வனத்திற்குச் சென்று நான் கூறிய சத்தியத்தை தியானம் செய். நான் பாகவதம் மூலமாக என்னை வழிபடுபவர்களுக்கு வழிகாட்டுவேன்" என்றார். இவ்வாறு கூறி விட்டு ஸ்ரீ கிருஷ்ணர் தியானத்தில் அமர்ந்து வைகுண்டம் ஏகினார்.
    (இராமனாக அவதரித்த திருமால் வாலியை மறைந்து நின்று கொன்றார். இச்செயல் அவருக்கும் ஓர் பாவக்கணக்கைக் கொடுத்திருக்கின்றது.
    எனவேதான் அடுத்த பிறப்பில் கண்ணனாக அவதரித்த போது பாரதப் போர் முடிவுற்ற பின்னர், நாடாண்டு வருகையில்,யாதவ குலம் அனைத்தும் அழிந்து போக வந்த சாபத்தால்,அனைவரும் அழிந்து போக,கண்ணன் மட்டுமே தனித்தான்.
    உலக நியதிக்குட்பட்டுத் தானும் அதே இரும்புத் துகளால்அழிந்து போக எண்ணி படுத்திருக்கும் வேளையில்,
    தொலைவில் அவனது பாதம் கண்ட வேடனொருவன்(இவன் வாலியின் மறு பிறப்பு என்று சொல்கிறார்கள்)
    மான் என்று எண்ணி அம்பை விட, அவ்வம்பு கண்ணபிரானின் பாதங்களைத் தைத்து, கண்ணன் வைகுண்டம் எய்தினான்


    ஒருவருக்குத் துன்பம் செய்தால் அது எந்த வகையிலேனும் மறுபடியும் வீசிய பந்து போல் திரும்ப வரும் என்பதை உணர்ந்து மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்காத மனம் வேண்டும் என்று இறைவனை வேண்டுவோமாக !
Working...
X