Announcement

Collapse
No announcement yet.

Bhaja govindam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Bhaja govindam

    Courtesy:Sri.GS.Dattatreyan


    ஆதிசங்கரர்
    குரு உபதேசம்
    பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானுக்கு ஒரு முறையாவது பூஜை செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எம பயம் கிடையாது.
    ஒளியின் உதவியில்லாமல் எதையும் பார்க்க முடியாது. அதுபோல உள்மனதில் தன்னைப் பற்றிய ஆராய்ச்சி இன்றி ஞானத்தை அடைய முடியாது. கண்ணாடி போன்ற தூய்மையான மனதில் ஞானம் தானாகவே விளங்கித் தோன்றும். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் மனதைப் பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
    நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கிப் பிரகாசிப்பது போல், ஒரு குருவிடம் உபதேசம், கேள்வி முதலி யவற்றைக் கற்றால், மனமும் அழுக்குகள் நீங்கப்பெற்று ஒளியுடன் பிரகாசிக்கும்.
    மரண வேளை நெருங்கும் போது இலக்கண சூத்திரங்கள் நமக்குக் கைகொடுக்காது. ஆகையால், கோவிந்தனைக் கூப்பிடு. கோவிந்தனைப் பாடி வழிபடு.
    பொருள் தேடும் வரை சுற்றத்தினர் நம்மை நேசிப்பர். நோயினால் உடல் தளர்ந்த பின் யாரும் நம்மைக் கண்டு கொள்ளமாட்டார்கள். எனவே, பொருள் சேர்ப்பதில் உள்ள ஆசையை விட்டு நல்ல எண்ணங்களை மனத்தில் சிந்தனை செய்வது நல்லது. நம்முடைய நிலைக்கேற்பப் பணி செய்து, கிடைக்கின்ற பொருளில் மகிழ்ச்சியாக வாழ்தலே அறிவுடை மையாகும்.
    பொருள், சுற்றம், இளமை முதலியவற்றில் கர்வம் கொள்ளக் கூடாது. காலம் ஒரு கணத்தில் எல்லாவற்றையும் கொண்டு சென்றுவிடும். அதனால், மறைகின்ற அனைத்தையும் விட்டு இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துங்கள்.
    எதிரி, நண்பன், மகன், உறவினன் என்று பிரித்துப் பார்க்காமல், யாரிடத்தும் நட்பும் பகையும் கொள்ளாமல் எல்லோரையும் சமமாய் பார்க்க வேண்டும்.
Working...
X