1. தயை:- ஸர்வபூதஹிதேரத:, தயா பூதேஷ{ என்று பலவிடங்களில் பகவான் கீதையில் ஜீவகாருண்யத்தைப் பற்றி உபதேசிக்கிறார். பிறர் கஷ்டத்தைத் தன்னுடையதுபோல் பாவித்துத் தன்னாலியன்ற பொருள் (பணம் முதலியன), உடல் (சரீர கஷ்டம்), ஆக்கை (ப்ராணன்)களால் உதவிபுரிவதில் ஆசைப்படவேண்டும். பகவான் தன்னிடம் இருப்பதுபோல் ஸர்வ ஜீவராசிகளின் ஹ்ருதயங்களிலும் இருக்கிறார். அதால் அவருக்குச்செய்வது போலாகும். அவர் த்ருப்தியடைகிறார். ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானே வளரும்" என்பதல்லவோ பழமொழி.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends2. க்ஷhந்தி:- அந்யநாலேற்படும் வாக்காலோ(திட்டு), சரீரத்தாலோ ஏற்படும் துன்பங்களை பதில் செய்யாது பொருத்துக்கொள்ளவேண்டும். பகவான் ஒவ்வொருவர் உள்ளிருந்தும் ஸதா ஸர்வகாலமும் ஆட்டி வைத்துக்கொண்டிருப்பதாக கீதை 18-61ம் ச்லோகம் உத்கோஷிக்கிறது. நாம் செய்யும் பாபத்தை பகவான் பலர்மூலம் நம்மை சிக்ஷpக்க அவர்கள்மீது கோபிப்பானேன்? தெருவில் போகும் ஒரு ப்ராஹ்மணனை ஓர் அப்ராஹ்மணன் இழிவாய் பேசுகிறான். இவன் அதை ஸஹியாது பதில் பேசத் தொடங்குவானேயாகில் அவனால் இவனுக்கு இன்னும் பலர் மூலமும் பரிபவமேற்படுவது நிச்சயம். பொருமை கடலினும் பெரிது. நம் பாபத்தை நாம்தான் அநுபவிக்கவேண்டும். பொறுத்தாலது செய்தவனையே தாக்கும். தீங்கிழைப்பவனுக்கு நன்மை செய்யச் சொல்லுகிறது சாஸ்த்ரம்.

3. அநஸ_யா:- (பொறாமையின்மை): அவரவர் கர்மாநுஸாரியாய் ஸ{கதுக்க லாபாலாபங்களை யநுபவிக்கப் பொறாமைப்படுபவனே அழிந்துபோவான். அவனுக்கு லாபமில்லை, பொறாமைப் படுபவனுக்கு நஷ்டமில்லை பாபந்தான் மிஞ்சும்.
(லாபம் அநுபவிப்பவனுக்கு பொறாமைப் படுபவனால் நஷ்டமில்லை, பொறாமைப்படுபவனுக்கு எந்த லாபமும் இல்லை பாபம்தான் மிஞ்சும் என்றிருக்கவேண்டும்-என்.வி.எஸ்.).

4. சௌசம்:- தைவாஸ{ர ஸம்பத்விபாக யேகமென்று தனியாக பகவான் கீதையில் (18ல் 16வது அத்யாயம்) போதிக்கிறார். த்ரிகரண சுத்தி யாவருக்கும் அவச்யமாகும். பரஸ்த்ரீகளை மனத்தினால் ஆசைப்படக் கூடாது. அதேமாதிரி அயலானுடைய (பிறருடைய) எந்தப் பொருளையும் விரும்பலாகாது. மநஸ் சுத்தி இருந்தால் போதுமென்று லௌகிகர் கூறுவர். அது எளிதில் வந்துவிடாது. பிறர்மீது குறைகூறுவதற்கான பாபத்திற்கு ப்ராயச்சித்தம் இல்லை என்கிறது சாஸ்த்ரம். ஆசாரஹீனனை (ஆசாரமற்றவனை) வேதங்கள் கூட அவர் எவ்வளவு கநபாடியாயிருந்தாலும் சுத்தி செய்யாதாம். ஆகையால் பொய் பேசாமை, வர்ஜ்யாவர்ஜ்யமின்றி புசியாமைகளைக் கவனிக்கவேண்டும். இவைகளை இதன் முன் பின் பக்கங்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தர்மசாஸ்த்ரங்களில் விரிவாய் காணலாம்.

5. அநாயாஸம்:- பகவான் நமக்கிட்டிருப்பது இரு வேலைகளே. 1.கர்மாநுஷ்டானம் 2.ஸதா பகவத் த்யானம். இவைகளைவிட்டு நம் வேறு காரியங்களை அவர் ஈஷத்தும் (சிறிதும்) ஸம்பதிப்பதில்லை. பக்தனின் யோக Nக்ஷமம் அவருடைய பொறுப்பென்று ஏற்றுக்கொண்டிருப்பதால் நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்வல்ப ஆயுளை தஸ்மாத்(ஆகையால்) ஸர்வேஷ{ காலேஷ{(எக்காலத்தும்) யோகயுத்தோ பவ(யோகத்தை அநுஷ்டிப்பவனாய் இரு), தஸ்மாத்ஸர்வகாலேஷ{ மமாநுஸ்மர" (ஆகையால் எப்போதும் என்னை நினைத்திரு) என்றபடி ஆத்ம த்யாநத்தில் ஈடுபடப் பார்க்கவேண்டும். வாக்காலும் (பேச்சாலும்) நாம் அபசப்தத்தை (தகாத வார்த்தைகளை) உச்சரிக்கக்கூடாது. நாச்லீலங் கீர்த்தயேத் தீமாந்" என்றபடி.
6. மங்கலம்:- (இந்தப் புத்தகத்தில் 3க்குப் பிறகு வரிசை எண் இல்லை. மங்கலம்" என்ற தலைப்பு பிரித்துக் காட்டப்படவில்லை - என்.வி.எஸ்)
சில அநாச்சாரங்களால் நம்மிடமுள்ள லக்ஷ;மீகரம்போய் மூதேவி வந்தடைவதாகச் சாஸ்த்ரம் முறையிடுகிறது. கச்சமில்லாதவனை நக்னன் (துணியில்லாதவன் - நிர்வாணன்) என்கிறது. புண்ட்ரமில்லாதவனின் நெற்றி ஸ்மஸான ஸத்ருச்யம் (சுடுகாட்டுக்குச் சமம்) என்கிறது. உஷஸில் (சூர்ய உதயத்தில்) உறங்குபவனை மூதேவி வந்தடைகிறாள் என்கிறது. ஆகையால் ஸதா பகவந்நாமோச்சாரணபரனாய் பார்ப்பவர்கள் சந்தோஷப்படும்படி நடை, உடை, பாவனைகளோடிருத்தலே மங்களகரமாகும்.7. அகார்ப்பண்யம்:-
ஸ{க துக்கங்களை ஸமமாய் பாவிக்க பகவான் அடிக்கடி உபதேசித்திருப்பது ஜ்ஞாபகத்திலிருக்கவேண்டும். ஆறிலுஞ்சாவு, நு}றிலுஞ்சாவு என்பதையும் மறவாதவறாய் ஜந்மஸாபல்யத்திலேயே (ஜனனத்தின் பயனான ஜன்ம விமோசனத்திலேயே) நாடிய மனத்தினராயிருக்கவேண்டும்.

8. அஸ்ப்ருஹா :-
அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதார க்ருஹாதிஷ{ என்பதிற்போல் மனைவி மக்கள் வீடு வாசல் பணம் சொத்துக்களின் மீது ஈஷத்தும் (சிறிதும்) மனம் வையாது, பரம வைராக்ய சீலராய் அவைகளைத் துச்சமாய்க் கருதினால்தான் மனஸ் ஆத்மாவில் நிற்க ஹேதுவாகும். ஆத்மாவில் மநஸ் நிலைத்திருப்பவனுக்கு வேறு எவ்வளவு பெரிய ஆநந்தமோ, துக்கமோ வந்தாலும் மநம் அதைப் பொருட்படுத்தாதிருப்பதே முமுக்ஷ{வின் லக்ஷணம் என்கிறார் பகவான்.
இம்மாதிரி இன்னும் இதர (கோபமின்மை போன்ற) தேவ குணங்களும் (16ம் அத்த்) ஜந்ம ஸாபல்யத்திற்கு அநுகூலம்(உதவிகரம்) ஆகும்.

அஷ்ட ஆத்ம குணங்கள் மேலும் விளக்கம்