கேள்வி நேரம்
தினமும் திரி மாற்ற வேண்டுமா?
ஸ்ரீ வி.ராஜகோபால கனபாடிகள்
வீட்டில் சுவாமிக்கு ஏற்றும் விளக்கின் திரியை தினம் மாற்ற வேண்டும் என்கிறார்கள். இது சரியா? ஏன்?
- கீதா, மயிலாப்பூர்
ஒருமுறை தெய்வத்துக்கு சமர்ப்பணம் செய்த பூக்கள் பழங்கள் மற்றும் கற்பூரம் தீபம் போன்ற அனைத்தும் நிர்மால்யம் அதாவது (உபயோகிக்கப் பட்டது) எனப்படும். நிர்மால்யத்தால் மறுபடியும் வழிபாடு செய்யக்கூடாது. ஒருமுறை ஏற்றப்பட்ட தீபமும் இவ்வகையில் நிர்மால்யம்தான். அந்தத் தீபத்தை உபயோகித்த திரிக்கும் நிர்மால்யம் என்னும் தன்மை (தோஷம்) உண்டு. முன்பு ஏற்றப்பட்டு, அதன் ஒரு பகுதி எரிந்து, தீந்து போயுள்ள (நிர்மால்ய தோஷமுள்ள) திரியைக் கொண்டு தீபங்களை ஏற்றக்கூடாது என்கிறது தர்ம சாஸ்திரம். ஆகவே, வீட்டிலும் ஆலயங்களிலும் மற்றும் சுப நிகழ்ச்சிகளிலும் தெய்வ சன்னிதியில் ஒவ்வொரு முறையும் தீபங்களை ஏற்றும் போதும், முன்பு ஏற்றப்பட்டு பாதி எரிந்து போயுள்ள திரியில் தீபங்களை ஏற்றாமல், (பருத்தி பஞ்சால் ஆன) புத்தம் புதிய திரியைக்கொண்டு தீபங்களை ஏற்றுவதே சிறந்தது. முழுமையான பலன் கிடைக்கும்.
பொதுவாக, அதர்ம செயல்களைச் செய்யும் சிலரின் வாழ்க்கையை, சில காலம் மட்டுமே மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு இவ்வாறு தோன்றுவது இயற்கைதான். ஆனாலும், அதர்மம் செய்தவனின் வாழ்க்கையை பல காலம் தொடர்ந்து கவனிக்கும்போது, ஒருநாள் அவனுக்கு, மறுபடியும் எழுந்திருக்கவே (மீளவே) முடியாத அளவுக்கு துன்பங்கள் ஏற்படுவதைக் காணலாம்.
நம் வீட்டிலுள்ள குழந்தைகள் இருவர், அவர்களை அறியாமல் பெரிய தவறைச் செய்துவிட்டார்கள். ஆகவே தாங்கள் செய்த தவறுக்கு, பெற்றோர் மூலம் தண்டனை கிடைப்பது உறுதி என்று அறிந்துகொண்ட அவ்விரு குழந்தைகளும், தயங்கித் தயங்கி பெற்றோரிடம் சென்றார்கள்.
பெற்றோர் அவர்களிடம், நீங்கள் செய்த தவறுக்கு (சொல் கேட்டு நடக்காததற்கு) தண்டனை நிச்சயம் உண்டு! (மற்றவர்கள் தவறு செய்யாமல் இருக்க, தவறு செய்தவர்களை மன்னிக்காமல், அவர்களுக்கு தண்டனை அளிப்பதே சிறந்தது என்கிறது நீதி சாஸ் திரம்). ஆனாலும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதாவது, செய்த தவறுக்கான தண்டனையை இப்போதே இன்றே அனுபவிக்கிறீர்களா? அல்லது சில காலம் கழித்து தண்டனையை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று கேட்டனர். முதலாவது குழந்தை, எனது தவறுக்கான தண்டனையை நான், சில காலம் கழித்து ஏற்றுக்கொள்கிறேன்" என்றது. இரண்டாவது குழந்தையோ, எனக்குரிய தண்டனையை, இப்போதே இன்றே தந்துவிடுங்கள். நான் அதை, இப்போதே அனுபவித்து விட்டால் (செய்த நன்மைக்கான பலனை - இன்பத்தை - அனுபவித்துக்கொண்டு) நிம்மதியாக இருப்பேன்" என்று கூறியது. இந்த இருவரில், யாருடைய எண்ணம் சிறந்தது என்று ஆலோசித்துப் பார்த்தால், இரண்டாவது குழந்தையின் எண்ணமே சிறந்தது என்பது அறிவாளிகளுக்கு நன்கு புரியும். ஏனென்றால், எப்போது தனக்கான தண்டனை கிடைக்குமோ! என்று பயந்து கொண்டே, இன்பத்தை அனுபவிப்பதைக் காட்டிலும், குற்றத்துக்கான தண்டனையை முதலில் அனுபவித்துவிட்டால், அதன்பிறகு மகிழ்ச்சியாக இன்பத்தை அனுபவிக்கலாமல்லவா! கடவுளின் சித்தாந்தமும் இதுதான்.
இவ்வுலகில் அனைவரும் புண்ணியம் பாபம் ஆகிய இரண்டையும் கலந்தே செய்கிறார்கள். அதற்கான பலன்களான இன்பத்தையும் துன்பத்தையும் கலந்தே அனுபவித்தும் வருகிறார்கள். கடவுளின் ஆணைகளை ஏற்று நடக்காத தனது பக்தனான மனிதனுக்கு மட்டும், அதற்கான தண்டனையை (துன்பத்தை) உடனுக்குடனேயே தந்துவிடுகிறார். அதை அனுபவித்துவிட்ட பின்னர், அவன் செய்த நல்ல செயல்களுக்கான நன்மையை - சுகத்தை - தொடர்ந்து வழங்குகிறார்.
கடவுளை நம்பாத - அதர்மம் செய்து வாழும் - மனிதனுக்கு மட்டும், அவன் செய்த பாபத்துக்கான தண்டனையை, உடனேயே தந்துவிடாமல் - ஏன், தான் செய்த தவறுக்கு ஒருநாள் தண்டனை அளிக்கப்படும் என்பதைக்கூட உணராமல் இருக்குமாறு செய்து, முன் ஜன்மத்தில், அவன் செய்த புண்ணிய பலனான இன்பத்தை மட்டும் தொடர்ந்து தந்து கொண்டே இருப்பார். இதனால் அவன் பாபத்துக்கான தண்டனை துன்பம் என்பதைக்கூட உணராமல், மேலும் மேலும் பாபச்செகைகளில் ஈடுபடுவான். ஆனால், இது நீடிக்காது. ஒருநாள் அவனுடைய புண்ணியபலன்கள் அனைத்தும் தீர்ந்துபோனவுடன், அவன் செய்த பாபத்துக்கான மொத்த தண்டனைகளையும் ஒன்றுசேரத் தர ஆரம்பிக்கிறார். அது அவன் மற்றும் அவனது சந்ததிகளுக்கும் தொடரும்.
அவரை (விதை) போட்டு, துவரை (செடி) முளைத்தாலும் முளைக்கலாம். ஆனால், நல்ல செயல்கள் செய்தவர்கள் என்றும் வீணாவதில்லை என்பது பழமொழி, ந ஹி கல்யாணக்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி. அர்ஜுனா! நல்லவைகளைச் செய்த ஒருவன் கெட்ட (துன்பப்படும்) நிலைமையை ஒரு போதும் அடைவதில்லை" என்று உறுதி கூறுகிறார் கண்ணன் கீதையில். இந்த சித்தாந்தம் என்றும் மாறாது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends