Announcement

Collapse
No announcement yet.

கங்கையில் குளித்தால் பாவங்கள் போய்விடு&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கங்கையில் குளித்தால் பாவங்கள் போய்விடு&#

    என்ன சொன்னார் பரமசிவன்?
    கங்கை பிரவாகம் எடுத்து இரண்டு பக்கக் கரைகளையும்
    தொட்டவாறு அழகாக ஓடிக்கொண்டிருந்தது.
    ரம்மியமாக இருந்த வடது பக்கக் கரையில் பரமசிவன்
    தன் தேவியுடன் பேசிவாறு நடந்து கொண்டிருந்தார்.
    நதியின் அழகில் மயங்கிய பார்வதிதேவி, தன்
    அன்புக் கணவரிடம் அதைப் பற்றிப் பேசிவாறு நடந்தார்.


    "நாதா, இந்த நதியின் சிறப்பு என்ன?"


    "உலகில் புண்ணியம் வாய்ந்த நதி இந்த நதிதான்.
    அதனாலதான் இந்தநதிக்கு என் சிரசில் இடம் கொடுத்திருக்கிறேன்.
    இந்த நதியில் குளித்தால் செய்த பாவங்கள் போகும்"


    "பாவங்கள் போனால் என்ன ஆகும்?" என்று தேவி ஒன்றும்
    அறியாதவர் போலக் கேட்க, சிவனார் தொடர்ந்தார்.


    "பாவங்கள் நீங்கப் பெற்றவன் சொர்க்கத்திற்கு வருவான்"


    "அப்படியென்றால், இந்த நதியில் முங்கிக் குளித்தவர்கள்
    அத்தனை பேரும் சொர்க்கத்திற்கு வருவார்களா?"


    "அத்தனை பேரும் வரமாட்டார்கள்.
    ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்"


    "முரண்பாடாக இருக்கிறதே நாதா! இதில் குளித்தால்
    பாவம் போகும் என்றால். குளித்த அத்தனை பேருக்கும்
    பாவங்கள் போக வேண்டும்.
    போன அத்தனை பேர்களும் சொர்க்கத்திற்கு வரவேண்டுமல்லவா?
    சிலர் என்பது ஏன்? சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்"


    "ஆகா, விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு நாம் இருவரும்
    ஒரு சிறு நாடகம் நடத்த வேண்டும். ஒரு நொடியில் நான்
    வயோதிகம் அடைந்த தள்ளாத முதியவனாகவும், நீ அந்த
    முதியவரின் மனைவியாகவும் உருமாற வேண்டும்.
    மாறியவுடன் நாம் இருவரும் அடுத்த கணம்
    காசி நகரில் இருப்போம். அங்கே நான் இறந்ததுபோல
    பேச்சு மூச்சில்லாமல் கிடப்பேன். என்னை மடியில்
    கிடத்திக் கொண்டு நீ அழுது குரல் கொடுக்க
    வேண்டும். மற்றதெல்லாம் தானாக நடக்கும்!
    நாடகத்தின் முடிவில் நீ கேட்ட கேள்விக்குத்
    தகுந்த விடை கிடைக்கும்"


    "அப்படியே ஆகட்டும் நாதா!"
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    காசி நகரம். கங்கைக் கரையில் பிரதான இடம்.
    படித்துறையின் அருகேமக்கள் கூடும் இடம்
    கிழவர் வேடத்தில் இருந்த சிவபெருமான் இறந்ததுபோலக் கிடந்தார்.
    தேவியார் அவரை மடியில் கிடத்திக் கொண்டு குரல் கொடுத்து
    அழுது கண்ணீர் விட கூட்டம் சேர்ந்து விட்டது.
    கூட்டத்தினர் கேட்க, பாட்டி வேடத்தில் இருந்த
    தேவியார் விவரித்தார்.


    "என் கணவர் பெரிய ரிஷி. சுவாமி தரிசனம் பண்ண
    வந்த இடத்தில் இப்படி இறந்து விட்டார். அவருக்கு
    இறுதிக் காரியம் செய்ய வேண்டும்!"


    "அதற்கு ஏன் விசனம்? ஆளுக்கு ஒரு காசு தருகிறோம்.
    இங்கே நிற்பவர்களில் பாதிப்பேர்கள் கொடுத்தால் கூட
    ஐம்பதுகாசு சேர்ந்து விடும்.கவலைப் படாதீர்கள் தாயே!"
    என்று ஒருவன் சொல்ல, அங்கிருந்த மற்றவர்களும்
    ஆமாம் என்று குரல் கொடுத்தார்கள்.


    "பிரச்சினை பணமல்ல :கொள்ளி வைப்பது யார்?" என்று
    பாட்டி வேடத்தில் இருந்த தேவியார் தொடர்ந்து கேட்க,
    கூட்டத்தில் இருந்தவர்களில் நான்கு அல்லது ஐந்து பேர்கள்
    போட்டி போட்டுக் கொண்டு அதற்குத் தயாரென்றார்கள்


    உடனே பாட்டி சொன்னார்," இவர் பெரிய ரிஷி. இவருக்குக்
    கொள்ளி வைப்பவர் பாவம் எதுவும் செய்யாதவராக
    இருக்க வேண்டும். ஆகவே உங்களில் யார் பாவம் எதுவும்
    செய்யாதவரோ அவரே முன் வருக!"


    உடனே கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவன் சொன்னான்,
    "அதெப்படித் தாயே, மனிதர்களில் பாவம் செய்யாத மனிதன்
    எங்கே இருப்பான்? தெரிந்து செய்தாலும் அல்லது தெரியாமல்
    செய்தாலும் பாவம் பாவம்தான்.
    ஒரு எறும்பைத் தெரியாமல் மிதித்து, அது இறந்து போயிருந்தாலும்
    அது பாவம்தானே? அதனால் பாவம் செய்திருக்காத மனிதன்
    கிடைப்பது அரிதம்மா!"


    அடுத்து ஒருவன் கேட்டான்,"பாவம் செய்திருப்பதை அறியாமல்
    அல்லது உணராமல் ஒருவன் உன் கணவருக்குக் கொள்ளி வைத்தால்
    என்ன ஆகும்?"


    அதற்குத் தேவி பதில் சொன்னார்:
    "அவன் தலை வெடித்துவிடும்!"


    அவ்வளவுதான் அங்கே இருந்தவர்கள் அமைதியாகி விட்டார்கள்.
    ஆனால் நேரம் ஆக நேரமாக கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது.
    காலை பதினோரு மணிக்கு ஆரம்பித்த நாடகம் மதியம் மூன்று மணி
    வரைக்கும் நீடித்தது


    மூன்று மணிக்கு பதினெட்டு வயது நிரம்பிய இளைஞன் ஒருவன்
    அங்கே வந்து சேர்ந்தான். கூட்டத்தினரிமிருந்து விவரத்தை
    அறிந்து கொண்டவன்
    தேவியின் அருகில் வந்து சொன்னான்:


    "பாட்டி, கவலையை விடுங்கள். நான் வைக்கிறேன் கொள்ளி!"


    "நிபந்தனை தெரியுமா உனக்கு?"


    "பாவம் எதுவும் செய்திருக்கக்கூடாது.அவ்வளவுதானே? அறியாமல்
    பாவம் செய்திருக்கலாம். ஆனால் அதைப்போக்குவதற்கு வழி இருக்கிறது "


    "எப்படி?"


    "இந்தக் கங்கையில் குளித்தால் பாவங்கள் போய்விடும் என்று என் தாய்
    சொல்லியிருக்கிறாள். என் தாயின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
    இந்தக் கங்கையின் மீது நம்பிக்கை இருக்கிறது. என்னைப்படைத்த ஆண்டவன்
    மீது நம்பிக்கை இருக்கிறது! இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்"
    என்று சொன்னவன்,
    "ஓம் நமச்சிவாயா!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தவாறு
    கங்கையில் குதித்தான்.
    குதித்தவன் மூன்று முறைகள் முங்கி விட்டு எழுந்து
    கரைக்கு ஓடிவந்தான்.
    அங்கே கரையில் யாரும் இல்லை!
    =====================================
    கைலாயத்தில் சிவபெருமான் தேவியிடம் சொன்னார்.
    "இவன்தான் வருவான்!
    எவன் ஒருவன் நம்பிக்கையுடன் குளிக்கிறானோ அவன்தான் வருவான்.
    மற்றவர்கள் வரமாட்டார்கள்!"
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    ஆகவே அடுத்தமுறை, கங்கை என்றில்லை, எந்த நதியில் சென்று
    நீராடினாலும், செய்த பாவங்கள் நம்மை விட்டுப்போக இறை நம்பிக்ககை
    யுடன் அதில் குளியுங்கள்.
    இறை நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக்காக்கும்.
    வெட்டியாக, மொக்கையாக இறை நம்பிக்கையை எதிர்த்துக் கேள்வி
    கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பத் திரும்ப
    இந்த அவல வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்.
    உய்வே கிடையாது.
    வாழ்க இறை நம்பிக்கை! வளர்க பக்தி நெறி!

  • #2
    Re: கங்கையில் குளித்தால் பாவங்கள் போய்விட&#300

    What a meaningful narration! Faith and belief are absolutely necesssry for everything. Have faith in God and you shall be shown the way to Him!
    Thank you, Sir, for an excellent post.
    Varadarajan

    Comment

    Working...
    X