courtesy:Sri.PK.Seshadri


நந்தி காதுகளில் ரகசியம்****************


நந்திஸ்வரர் காதுகளில் நாம்
சொல்லலாமா ? அப்படி சொல்லுவது
என்றால் என்ன சொல்ல வேண்டும்........


நம் நாட்டில் சிலை வழிபாடு மிக மிக
முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது.


என்பதனை நாம் அறிவோம். எந்தனை
அற்புதங்களை கண்ட சித்தர்கள் இதில் எந்த
வித குழப்பமும் இல்லாமல் நமக்கு கற்களை
தேர்ந்து எடுத்து கொடுக்க காரணம் நாம்


அறிந்து கொள்ளவேண்டும் . கற்கள் , பாறை
என்று மட்டும் அவர்கள் நினைக்க வில்லை,


இவைகள் ஒளியும் ஒலியும் சேர்ந்தது என்று


அவர்கள் புரிந்து கொண்டனர். ஆம் கற்களை
தேர்வு செய்வதில் மிக மிக வல்லமை
படைத்தவர் கருவுரார் சித்தர்.. போகர்


இவரிடம் தாம் சிலைகளை செய்ய
சொல்வார். ஒரு கல்லை (பாறை ) பார்த்து
அதில் 32 லக்ஷணம் அமைந்து இருந்தால்


அவை வழிபாட்டிற்குஉகந்தது என்று முடிவு
செய்வார் இவர் . பாறையின் உள்ளேதேரை
இருந்தால் அவைகள் ஒச்சம் என்று
விட்டுவிடுவார்.


மிக சிறந்த சிற்பி ஆசான்களை கொண்டது
இலங்கை பட்டிணம். இங்கிருந்து நிறைய
நபர்கள் அரவு நாடான நம் நாட்டிக்கு
பாறைகளை தேடி வந்தார்கள் என்று
வரலாறு சொல்கிறது . பல்லவர்கள்
சிற்பங்கள் செய்வதில் சிறந்து
விளங்கினார்கள் . பரஞ்சோதி
அடிகள் காஞ்சிபுரம் வந்த பிறகு தான் வாதாபியில் இருந்து விநாயகர் சிலை
காஞ்சிபுரம் வந்தது . பிறகு கணபதி உருவம்
செய்வது பால பாடமாக மாணவர்களுக்கு
கற்பிக்கப் பட்டது , இந்த சிலைகள் நாட்டில்
எல்லா இடத்திற்கும் எடுத்து செல்லப்பட்டது.
சித்தர்கள் மலைகளில், பூமியில் உள்ள
வித்தியாசமான பாறைகளை தேர்வு செய்து
அவைகளை லிங்கமாக ,நந்தியாக
உண்டாக்கி வழிபாடு செய்தனர் என்பது நாம் அறிந்தது .

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பாறைகள்வெயில்காலத்தில் குளிர்ச்சி
தன்மைகளை உண்டாக்கும் , மழை
காலத்தில் உஷ்ண தன்மைகளை
உண்டாக்கும். இதை சமணர்கள் அறிவார்கள்.
,ஆகவே தான் அவர்கள் குன்றுகளை தேர்வு
செய்தனர் . மன்னன் சித்தர்கள் சொல்படி
கோவிலை கட்டிய பின் அவைகளை
பற்றியும் ,முறைகளை பற்றியும் தெரிந்து
கொள்ள சாதுக்களை, சித்த நெறியில்
உள்ளவர்களை அழைத்து வந்து
கோவிலை ஆராய்ந்து தவறுகள் இருந்தால்
சொல்லும் படி கேட்பார் . இப்படி ஒரு
காஞ்சிபுர அரசன் சித்தர் நெறிகளை
உடையவரை தம் கோவிலுக்கு அழைத்து
வந்தான். 32 லக்ஷனமும் அருமையாக
ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைக்கு உயிர்


கொடுத்தால் உயிர் உண்டாகும் என்று அவர்
அறிந்து இருந்தார். கருவுரர் சித்தரை
நினைத்து நந்தியின் காதுகளில் அவர்


மந்திரம் சொல்ல நந்தி அசைந்து எழுந்தது ,
மன்னன் வியந்தான்,மக்கள் அதிசியப்
பட்டனர். இதன் பிறகு உயிர் பெற்ற நந்தி
கோவிலை விட்டு வெளியை சென்றது .
வேடிக்கை பார்த்த மக்கள் பரவசம் அடைந்து
பின்னே சென்றனர் . பசி எடுத்த நந்தி
வயலில் பயிர்களை உண்ணத்
தொடங்கியது. அது வரை விபரிதம் உணராத
மக்கள் பயம் அடைந்தனர் . நந்தி பிறகு


தோப்புகளில் நுழைந்து விட்டது .


நந்தியினால் பிரச்சனைகள் அதிகம் ஏற்பட
மக்கள் அரசனிடம் முறையிட்டார்கள்.
பிரச்னை உணர்த்த அரசன் சித்தரிடம் கல்
நந்தியை மீண்டும் கல்லாக்கி விட வேண்டும் என்றார் . சித்தர் கல் நந்தியை பிடித்து வர சொல்லி அதன் காதுகளில் மந்திரம் சொல்ல


அது மீண்டும் கல்லானது . பிறகு அதன்
கால்களின் குழம்பில் ஒரு நகத்தை பேர்த்து
எடுத்தார் . 32 லக்ஷணத்தில் 1
குறைந்தபடியால் அது கல்லாகி போனது .
நந்தி மீண்டும் உயிர் பெறாது என்று உறுதி
கொடுத்து வனம் சென்றார்.
.
அவர் நந்தியின் காதுகளில் ஏதோ சொன்னார் , நாமமும் அப்படி சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்து இன்றும்நந்தியின்காதுகளில் அவர்கள் குறைகள் ,தேவைகளை சொல்கிறார்கள் . இது தவறு . நந்தியிடம் நாம் சொல்ல வேண்டியது


(காதுகளை தொடாமல் )


சிவாய நம ஓம்


சிவாய வசி ஓம்


சிவ சிவ சிவ ஓம் ..........