ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி?
உடலில் அதிகமான அசதி. எந்த செயலையும், பிறகு செய்து கொள்ளலாம்
என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை.
உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமா,
என்று எண்ணத் தோன்றும் மனநிலை. எப்பொழுது பார்த்தாலும் களைப்பு.
தூங்க வேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது.

இந்த நிலையில்தான் இன்று பல பேர் இருக்கின்றனர். உடலில்
ஹீமோகுளோபின் குறைவதால்தான் இந்த நிலை ஏற்படுகிறது.
ஹீமோகுளோபின் குறையும் பொழுது, அந்த அணுக்கள் குறைந்த ரத்தம்
உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. இதனால் நமது
உடல் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடிவதில்லை. உடல் களைப்பு
அடைகிறது. 10 பேர் செய்ய வேண்டிய வேலையை இருவர் செய்தால்
எவ்வளவு தாமதமும், தடங்கலும் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும்
நம் உடலில் ஏற்படுகிறது. ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின்
1418 கிராம் அளவிலும், பெண்களுக்கு 1216 கிராம் அளவிலும்
இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது,
ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வரும்
சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை,
லேபில் ரத்தத்தை பரிசாதிக்கும் பொழுது தெரியவரும்.
ஹீமோகுளோபின் குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு,
இயலாமை முதலிய பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.
* நாட்டு மருந்துக் கடைகளில், கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும்.
அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை
எடுத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு டம்ளர் தண்ணீரில், முதல் நாள் மூன்று பழங்களை மாலை
6:00 மணிக்கு போட்டு, இரவு முழுவதும் ஊறவிட வேண்டும். காலை
6:00 மணிக்கு பல் துலக்கி விட்டு, ஒரு பழத்தை தின்று சிறிது பழம்
ஊறிய நீரை குடிக்க வேண்டும்.

* பிறகு மதியம் 12:00 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய
நீரை குடிக்க வேண்டும்.

* மாலை 6:00 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்று விட்டு மீதியுள்ள
நீரை குடிக்க வேண்டும்.

* இதே போல், பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடிக்க வேண்டும்.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை
பரிசோதித்து பார்க்க வேண்டும். தேவையானால் மறுபடியும் ஒரு முறை
பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇப்பொழுது ரத்தத்தில் ஹீமோகுளோபின் திருப்தியான அளவில் உயர்ந்து
இருக்கும்.

இந்த ஹீமோகுளோபின் உயர்வு, பல வியாதிகள் வராமல் தடுக்கும்.