Announcement

Collapse
No announcement yet.

நாஸ்திகர்களின் விதண்டாவாதம் ? பதில் இங்க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாஸ்திகர்களின் விதண்டாவாதம் ? பதில் இங்க

    பெரியார் கடைசிவரை... பதில் சொல்லாமல்
    'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

    ( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி
    ஸ்ரீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)...

    நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்,
    ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.

    சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்,
    இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
    இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை
    என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு
    அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும்
    இல்லை என வாதிக்க முன்வருவது.
    எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல
    உலகம்.
    உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே...
    நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
    சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம்
    நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே
    பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !
    அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...
    என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
    ஆகையால் எனக்கு 'கை' உண்டு.
    என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
    ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.
    நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை,
    ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !
    கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...!
    அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.

    இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..

    இது என்ன பூ எனக்கேட்டால்
    அதன் பெயரை சொல்லலாம்..!

    நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
    இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..
    ஆனால்..
    அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால்
    "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!
    கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..
    உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!

  • #2
    Re: நாஸ்திகர்களின் விதண்டாவாதம் ? பதில் இங்&#2

    A really good bouncer bowled by Sri.MuthuRamalinga Thevar!.May his soul rest in peace.How I wish we have manymore like him to stump these Naastiks!
    I wish I read more about this great gentleman.
    More about him, Sir.
    Varadarajan

    Comment

    Working...
    X