Announcement

Collapse
No announcement yet.

பழமொழிகள் – சொற்றொடர்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பழமொழிகள் – சொற்றொடர்கள்

    திரு எஸ்.எல்.அப்யங்கர் (S.L. Abhyankar) அவர்கள் இந்த அருமையான மரபுச் சொற்றொடர்களை தொகுத்துள்ளார். இவைகள் பெரும்பாலும் சமஸ்க்ருத மரபுவழி வாக்கியங்களான சுபாஷிதங்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ளது. இவற்றில் சிலவற்றுக்கு நேரடி தமிழாக்கத்துடனும் சிலவற்றுக்கு ஈடான தமிழ் பழமொழிகளுடனும் கீழே தரப் பட்டுள்ளது..
    • பர்யாப்த ஏக: புலாக: ஸ்தா²ல்யா நித³ர்ஸ²னாய [पर्याप्त एक: पुलाक: स्थाल्या निदर्शनाय]
    Single grain enough to tell us the condition of the cooking of the entire pot. ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம்
    • அதிபரிசயாத³வஜ்ஞா [ अतिपरिचयादवज्ञा]
    Familiarity breads contempt. “अतिपरिचयादवज्ञा संततगमनादनादरो भवति । मलये भिल्लपुरंध्री चन्दनतरुकाष्ठमिंधनं कुरुते” என்கிற சுபாஷித வாக்கியத்தின் ஒரு பகுதி இந்த சொற்றொடர். இதன் பொருள் அதிகமாக பழகுவது அலட்சியத்தை ஏற்படுத்தும். மலை மீது, வேடன் மனைவி (அதிகமாக கிடைக்கும்) சந்தனக்கட்டையை விறகாக உபயோகப் படுத்துவது போல”
    • அதிலோபோ⁴ விநாஸா²ய [ अतिलोभो विनाशाय ]
    Greed will kill (is poison) பேராசை பெருநஷ்டம்.
    • அதி ஸர்வத்ர வர்ஜயேத் [ अति सर्वत्र वर्जयेत् ]
    Excess of anything is bad அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
    • அதி த்ருஷ்ணா ந கர்தவ்யா [ अति तृष्णा न कर्तव्या ]
    Too much hankering is badஅதிகம் ஆசைப் படாதே.
    • அதி⁴கஸ்ய அதி⁴கம் ப²லம் [ अधिकस्य अधिकं फलम् ]
    More the merrier நிறைய இருந்தால் நல்லது தான்.
    • அநதிக்ரமணீயா ஹி நீதி: [ अनतिक्रमणीया हि नीतिः ]
    Codes should not be transcendedவிதியை மீறாதே.
    • அல்பஸ்²ச காலோ ப³ஹவஸ்²ச விக்⁴நா: [ अल्पश्च कालो बहवश्च विघ्नाः ]
    Time is short and obstacles are many. நேரம் குறைவு. தடங்கல் அதிகம்.
    • அவ்யாபாரேஷு வ்யாபார: [ अव्यापारेषु व्यापारः ]
    Trading in non-tradeables. தேவையில்லாதவற்றில் தலையிடாதே. பகவத் கீதையில் “ஸ்²ரேயாந் ஸ்வத⁴ர்மோ விகு³ண: பரத⁴ர்மோ ப⁴யாவஹ: ” என்கிற வாக்கியம் இரண்டு முறை (3:35, 18:47) சொல்லப் படுகிறது. அந்த அளவு முக்கியம் இது. ஒருவர் தன்னுடைய குணத்துக்கும், சுபாவத்துக்கும் ஏற்ற செயல்களை செய்வதே நல்லது என்பதை இதன் பொருளாக கொள்ளலாம்.
    • அஹிம்ஸா பரமோ த⁴ர்ம: [ अहिंसा परमो धर्मः ]
    Non-violence is the supreme code of conduct அஹிம்சை எல்லாவற்றிலும் முதன்மையான அறம்.
    • அலப்⁴யோ லாப⁴: [ अलभ्यो लाभः ]
    Unattainable gain, A windfall. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல எதிர்பாராத நன்மை.
    • அப⁴த்³ரம்° ப⁴த்³ரம்° வா விதி⁴லிகி²தமுந்மூலயதி க: விதி⁴லிகி²தமுந்மூலயதி [ अभद्रं भद्रं वा विधिलिखितमुन्मूलयति कः (विधिलिखितमुन्मूलयति ]
    Good or bad, can anyone avoid or evade the destiny? விதியை மீற முடியாது.
    • அர்தோ² ஹி லோகே புருஷஸ்ய ப³ந்து⁴: [ अर्थो हि लोके पुरुषस्य बन्धुः ]
    Money only is the true friend.செல்வமே உண்மையான துணை.
    • ஆக்ருதிர்ப³கஸ்ய த்³ரு«ஷ்டிஸ்து காகஸ்ய [ आकृतिर्बकस्य दृष्टिस्तु काकस्य ]
    Personality of a crane, but looks of (hovering eyesight like that of) a crowகொக்கின் குணம் இருந்தும் பார்க்க காகம் போல் இருத்தல்.
    • ஆயே து³:க²ம்° வ்யயே து³:க²ம்° தி⁴க³ர்தா²: [ आये दुःखं व्यये दुःखं धिगर्थाः (]
    Hate the Moneys which prove troublesome whether by income or outgoசெல்வம் இருந்தாலும் துக்கம் இல்லாவிட்டாலும் துக்கம்.
    • இக்ஷு: மது⁴ரோ’பி ஸமூலம்° ந ப⁴க்ஷ்ய: [ इक्षुः मधुरोऽपि समूलं न भक्ष्यः ]
    Sugarcane, even if it is sweet is not to be eaten along with its roots.கரும்பு இனித்தாலும் வேருடன் உண்ணப் படுவதில்லை.
    • இத: கூப: ததஸ்தடீ [ इतः कूपः ततस्तटी ]
    This side a dug well and that side a trenchஇந்தப் பக்கம் கிணறு போல இருந்தாலும் அந்தப்பக்கம் அது சுரங்கம்.
    • இதோ ப்⁴ரஷ்ட: ததோ ப்⁴ரஷ்ட: [ इतो भ्रष्टः ततो भ्रष्टः ]
    Unethical here, unethical thereஇங்கும் அநீதி, அங்கும் அநீதி
    • ஈஸ்²வரேச்சா² ப³லீயஸீ [ ईश्वरेच्छा बलीयसी ]
    God’s will prevailsதெய்வமே பலம் மிகுந்தது.
    • உத்பத்³யந்தே விலீயந்தே த³ரித்³ராணாம் மநோரதா²: [ उत्पद्यन्ते विलीयन्ते दरिद्राणां मनोरथाः ]
    Dreams of the poor crop up and vanishபயிர் உற்பத்தியும் அழிவும் ஏழைகளின் கனவில்
    • உத்ஸவப்ரியா: க²லு மநுஷா: [ उत्सवप्रियाः खलु मनुषाः ]
    People are given to festivities உல்லாசங்களை மக்கள் எப்போதும் விரும்புவர்.
    • கண்டகேநைவ கண்டகமுத்³த⁴ரேத் [ कण्टकेनैव कण्टकमुद्धरेत् (]
    Use a thorn to remove a thorn. முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும்.
    • கர்தவ்யோ மஹதா³ஸ்²ரய: [ कर्तव्यो महदाश्रयः ]
    Keep company of the noble.பெரியோரை அண்டி இருத்தல் நல்லது. மேகதூத காவியத்தில் காளிதாசன், “யாஞ்சா மோகா⁴ வரமதி⁴கு³ணே நாத⁴மே லப்³த⁴காமா ” என்று குறிப்பிடுகிறார். அதாவது தீயவர்களின் பிரார்த்தனை பலன் தரும் போல இருந்தாலும் அதை விட பெரியோரின் பிரார்த்தனைகளை வேண்டுவது பலன் தராமல் போனாலும் நல்லது.
    • கவய: கிம் ந பஸ்²யந்தி [ कवयः किं न पश्यन्ति ]
    Is there anything that is beyond the imagination of poets?கவிஞர்களின் கற்பனைக்கு அளவு ஏது?
    • காவ்யஸா²ஸ்த்ரவிநோதே³ந காலோ க³ச்ச²தி தீ⁴மதாம் [ काव्यशास्त्रविनोदेन कालो गच्छति धीमताम् ]
    Intelligent people engage themselves in poetry, sciences, entertainment. அறிவாளிகள் காவியத்திலும் அறிவியலிலும் பொழுது போக்குகிறார். இன்னொரு வகையிலும் இதை விளக்கலாம். அறிவாளிகள் தன் மூளையைக் சிந்தனை செய்வார்கள். சாதாரணர்கள் சம்பவங்களைப் பற்றி பேசுவார்கள். மூடர்கள் மற்றவரைப் பற்றி பேசி பொழுது போக்குவர்.
    • காலாய தஸ்மை நம: [ कालाय तस्मै नमः ]
    Time and tide wait for none. காலத்துக்கு வந்தனம். இன்னொரு வாக்கியமும் உண்டு “ந காலேந ஸமௌஷத⁴ம் ” – காலமே அரு மருந்து.
    • கிமிவ ஹி மது⁴ராணாம்° மண்ட³நம்° நாக்ரு«தீநாம் நாக்ருதீநாம் [ मधुराणां आकृतीनां किमिव हि मण्डनं न ]
    whatever can not become an adornment for one, who has inherent beauty of one’s own ?இயற்கையில் அழகு உள்ளவருக்கு எந்த ஆபரணம் தான் அழகு சேர்க்காது? இது காளிதாசரின் அபி⁴ஜ்ஞாநஸா²குந்தலம் காவியத்தில் வரும் ஸ்லோகத்தின் கடைசி வரி. இந்த ஸ்லோகம் “ஸரஸிஜமநுவித்³த⁴ம் ஸை²வலேநாபி ரம்யம் ” – சேற்றில் இருந்தாலும் தாமரை அழகு. மலிநமபி ஹிமாம்ஸோ²ர்லக்ஷ்ம லக்ஷ்மீம் தநோதி – நிலவின் நிழலும் அழகு. ல்யாமதி⁴கமநோஜ்ஞா வல்கலேநாபி தந்வீ – இந்த நிலையிலும் இந்த பெண் அழகு, கிமிவ ஹி மது⁴ராணாம் மண்ட³நம்° நாக்ருதீநாம் – இயற்கையில் அழகு உள்ளவருக்கு எந்த ஆபரணம் தான் அழகு சேர்க்காது?
    • கிமிவ ஹி து³ஷ்கரமகருணாநாம் [ किमिव हि दुष्करमकरुणानाम् (]
    What is impossible for the heartless?கருணை இல்லாதவருக்கு எதுதான் முடியாது?
    • கிமிஷ்டமந்நம் க²ரஸூகராணாம் [ किमिष्टमन्नं खरसूकराणाम् ]
    What of sweets to donkeys and pigs? கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
    • க்ஷமயா கிம் ந ஸித்³த்⁴யதி [ क्षमया किं न सिद्ध्यति ]
    What can not be achieved by pardon ? or What cannot be achieved by saying “sorry” ? மன்னிப்பதால் எதுதான் ஆகாது?
    • க்லேஸ²: ப²லேந ஹி புநர்நவதாம்° வித⁴த்தே [ क्लेशः फलेन हि पुनर्नवतां विधत्ते ]
    If one trouble succeeds in troubling, it keeps coming back in newer forms. ஒரே தொல்லை திரும்ப திரும்ப வரும். இதே போல சி²த்³ரேஷ்வநர்தா² ப³ஹுலீ ப⁴வந்தி , சிறு துளை இருந்தால் போதும், எல்லா கழிவுகளும் அங்கே சேரும்.
    • க³தம் ந ஸோ²ச்யம் [ गतं न शोच्यम् ]
    Let bygone be bygone. போனது போகட்டும்.
    • க³தாநுக³திகோ லோகோ ந கஸ்²சித் பாரமார்தி²க: [ गतानुगतिको लोको न कश्चित् पारमार्थिकः ]
    People conduct rooted in conventions. Rarely there is anyone, who seeks the supreme meaning. மக்கள் ஆட்டு மந்தை போல உண்மையை அறியாமல் பின் செல்கிறார்கள்.
    • க³ஹநா கர்மணோ க³தி: [ गहना कर्मणो गतिः ]
    It becomes a matter of very deep thinking to understand what Karma is. It is to be understood by Karma, as it presents itself , also by its anti-theses and also by its non-being. இது பகவத் கீதையில் வரும் ஸ்லோகம், “கர்மணோ ஹ்யபி போ³த்³த⁴வ்யம்° போ³த்³த⁴வ்யம்° ச விகர்மண: | அகர்மணஸ்²ச போ³த்³த⁴வ்யம் க³ஹநா கர்மணோ க³தி: ” கர்மாவை புரிந்து கொள்ளுவது மிகவும் கடினம். விதி (கர்மா) என்பதை அறிவதும் விதி வசம் தான்.
    • கு³ணா: ஸர்வத்ர பூஜ்யந்தே [ गुणाः सर्वत्र पूज्यन्ते ]
    Virtues are respected everywhere.நற்குணம் எல்லா இடத்தும் மதிக்கப் படுகிறது.
    • சக்ரவத்பரிவர்தந்தே து³:கா²நி ச ஸுகா²நி ச [ चक्रवत्परिवर्तन्ते दुःखानि च सुखानि च ]
    Sorrows and happiness keep coming and going in cyclic order as a turning wheel. இன்பமும் துன்பமும் சுழற்சியாக வரும்.


    To be continued
Working...
X