ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன்,
மற்றவர்களுக் கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண் டவனின்
ரத்தத்தில் கலந்துவிடும்


இது பீஷ்மர் சொன்ன*து: நான் துரியோதனன் இட்ட சோற்றை
உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது!


பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, உத்திரியான
புண்ய காலத்தை எதிர்நோக்கிக்கி, காத் திருந்தார். அவர்
மரணமடைவதற்கு முன் , அவரிடமிருந்து நீதி, நேர்மை,
அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள
தர்மர் விரும்பினார் . தனது சகோதரர்க
ள் நால்வரையும்
அழைத்துக் கொண்டு பாஞ்சாலி யுடன் பிதாமகரிடம் சென்றார் .

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி தாங்கள் எங்களுக்கு
நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் என்று கேட்க ,
பாஞ்சாலி மட்டும் பல மாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந் திருப்பதை
உணர்ந்த தர்மர், நம் தந் தைக்கு இணையான பிதா மகரைப் பார்த்து
ஏன் சிரிக்கிறா ய் ? என்று கடுமையாகக்கேட்டார்.

துரியோதனனின் சபையில் துச்சாத னன் என்னை மானபங்கம் செய்த போது,
கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி
என்னவாகியிருக்கும்? தர்மம் தெரிந்த பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து,
வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்தாரே தவிர , துரியோ தனனை எதிர்த்து
ஒரு வார்த்தையா வது பேசி னாரா ? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல்
தர்மத்தைப் பற்றி கேட்கிறீர் களே என்று நினைக்கும் போது சிரிக்காமல்
என்ன செய்வது ? என்று சொல்ல, பாண்டவர்கள் என்ன பேசுவது என்று
தெரியாமல் அமைதி யாக இருந்தார்கள் .

அப்பொழுது பீஷ்மர் பேசினார். பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை.
அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண் டும். அப்போதுதான்
உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்ன வென்று தெரியும் .
துரியோதனன், அன்னமிடுவதில் உய ர்ந்தவன் . எந்த நேரத்தில்
யார் வந்தா லும் அவர்கள் வயிறு நிறைய உபசரி ப்பான்.
ஆனால், அவன்செய்யும் அன் னதானம் பரிசுத்தமான மனதுடன்
செய்யப்பட்டதல்ல . சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில்
உணவி ட்டு, அவர்களை தன் காரியங்களுக் கு பயன்படுத்திக் கொள்வான்.
உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல்
அவன் சொல்படி நடப்பார்கள் . இத ற்கு சல்லியன் ஓர் உதாரணம் .

ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன்,
மற்றவர்களுக் கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண் டவனின்
ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை
உண்டதா ல் எனக்குள் அவனது தீய குணமே குடி கொண்டு விட்டது .
அத னால்தான் பாஞ் சாலியை மானபங்கம் செய்தபோது எது வும்
பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் .

ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில்
படுத்த பிறகு எனது உடலிலி ருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளி யேறி
விட்டது. அத்தோடு தீயசக்தி களும் வெளியேறிவிட்டன . இப்போ து
என் உடலில் தூய்மையான ஆன் மா மட்டும்தான் இருக் கிறது.
எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ள வன் .
கேளுங்கள் என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை
உபதேசம் செய் தார் .
அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள் ,
சாதுக்கள், பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில்
சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends